Published:Updated:

பிரதமர் நரேந்திர மோடிக்கு அலகாபாத் ஐகோர்ட் நோட்டீஸ்!

Vikatan Correspondent
பிரதமர் நரேந்திர மோடிக்கு அலகாபாத் ஐகோர்ட் நோட்டீஸ்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு அலகாபாத் ஐகோர்ட் நோட்டீஸ்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு அலகாபாத் ஐகோர்ட் நோட்டீஸ்!

அலகாபாத்: காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் தொடர்ந்த வழக்கு தொடர்பாக பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில், பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரி காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி, வேட்பாளர் பிரமாண பத்திரத்தில் தன்னுடைய மனைவி யசோதா பென் பற்றிய விவரங்களை குறிப்பிடும்போது, அவருடைய பான் அட்டை விவரங்கள் மற்றும் அவருடைய வருமானம் பற்றி எதுவும் குறிப்பிடாமல் காலியாக விட்டிருந்தார். இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் செயலாகும்.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.70 லட்சத்துக்கு மேல் தேர்தலுக்காக செலவழிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பா.ஜனதா தலைவர்களில் பலரும் வாரணாசியில் பல நாட்கள் சொகுசு ஓட்டல்களில் தங்கியிருந்து தேர்தல் பணிகளை கவனித்துள்ளனர். பெரும்பாலான மக்களுக்கு மோடியின் புகைப்படம் அச்சிட்ட உடைகள் மற்றும் தொப்பிகள் ஏராளமாக வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் தேர்தலுக்காக பல கோடி ரூபாய் செலவழித்துள்ளார். இவை அனைத்தும் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானதாகும். எனவே அவரது தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.