Published:Updated:

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளோர் மீது நடவடிக்கை தொடக்கம்: மத்திய அரசு

புதுடெல்லி: சுவிஸ் வங்கியில் சட்டவிரோத கணக்கு வைத்துள்ள இந்தியர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யும் பணி தொடங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் இன்று (17ஆம் தேதி) அவர் கூறுகையில், ''சுவிட்சர்லாந்து வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடர்ந்து இந்தியா பேசி வருகிறது. மேலும், சுவிட்சர்லாந்து வங்கி கணக்கு தொடர்பான ஆவணங்களை பெறவும் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

சுவிஸ் வங்கிகளில் சட்டவிரோதமாக கணக்கு வைத்துள்ள 700 பேரின் பட்டியலை பிரான்ஸ் வழங்கியது. மேலும், கணக்கு வைத்துள்ளோரின் பெயர்களை வெளியிடக்கூடாது என்றும் அந்நாடு நிபந்தனை விதித்துள்ளது.

பிரான்ஸ் அளித்துள்ள பட்டியலில் உள்ள இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக வருமான வரி மற்றும் குற்ற வழக்குகள் பதிவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு