எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே மேடையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதுபோலக் கனவு கண்டேன். பலிக்குமா?

ஒரே இடத்தில் (அதாவது சட்டமன்றத்தில்!) பேசுவதற்கான வாய்பைத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்தத்தானே செய்தார்கள். அதை அவர்கள்தான் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

அம்பூரணி ச.நாராயணன், பாளையங்கோட்டை.

இலங்கையிடம், மென்மையான போக்கை மத்திய அரசு கடைப்பிடிப்பதைப் பார்த்தால் இவர்களுக்கு ஏதோ ஒருவித பயம் இருப்பதுபோலத் தெரிகிறதே?

இலங்கை கோபப்படுவது மாதிரி நடந்துகொண்டால், சீனாவின் பக்கம் முழுமையாக அவர்கள் சாய்ந்துவிடுவார்கள் என்பதே மத்திய அரசு சொல்லும் காரணம். ஈழப் பிரச்னையில் காங்கிரஸ் அரசு என்ன முடிவு எடுத்தாலும் இலங்கை அரசாங்கம், சீனாவுக்குச் சார்பான முடிவைத்தான் எடுக்கும். இலங்கையில் குவிந்துள்ள சீன நாட்டின் நிதியையும், இலங்கை ஆட்சியாளர்கள் அனைத்து விஷயங்களையும் சீனாவைக் கேட்டுச் செய்வதையும் பார்த்தாலே அது புரியும். நம்மைக் காட்டி சீனாவிடமும், சீனாவைக் காட்டி நம்மிடமும் ஆதாயங்களைப் பெறும் சாமர்த்தியம் இலங்கைக்கு உண்டு.

ஆர்.பி.லிங்கேசன், மேலக்கிருஷ்ணன்புதூர்.

ஸ்டாலின் மணிவிழா உண்டியல் வசூல் 68 லட்சமாமே?

'திருவாளன் 11 லட்சம்’ என்று கருணாநிதிக்கு பட்டம் சூட்டியதைப் போல 'திருவாளர் 68 லட்சம்’ என்று ஸ்டாலினுக்கு மகுடம் சூட்ட வேண்டியதுதானே? இங்கே, பணம் கொடுத்தவர்கள் பாராட்டப்படுவது இல்லை. வசூலித்தவர்களுக்கே மரியாதை!

ஏ.எம்.ஆர்., செங்கல்பட்டு.

வெனிசூலா அதிபர் சாவேஸ் பற்றி?

வெனிசூலாவில் சோஷலிஸ அரசைக் கட்டமைத்தார் என்பது மட்டுமே சாவேஸின் பெருமை அல்ல. தன்னுடைய அஞ்சாமையையும், தீர்க்கமான எண்ணங்களையும், ஒடுக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் ஆதரவாகத் திருப்பியவர் சாவேஸ். பாலஸ்தீனம், வடகொரியா, ஈராக் ஆகிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா செயல்பட்டபோது கடுமையாக விமர்சித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையில் 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் தேதி அவர் பேசிய பேச்சுதான், சாவேஸ் என்பவர் சாவுக்கு அஞ்சாதவர் என்பதை உலகுக்கு உணர்த்தியது. 'சகோதர சகோதரிகளே நேற்று இந்த அழகு மேடையில் இருந்து அமெரிக்க அதிபர், அதாவது நான் பிசாசு என்று அழைக்கும் கனவான்... இந்த உலகம் எனக்கே சொந்தம் என்பதுபோலப் பேசினார். மனநல மருத்துவரை அழைத்து அந்த அறிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். உலக மக்களின் மீது செய்துவரும் மேலாதிக்கம், சுரண்டல், கொள்ளை ஆகியவற்றைத் தொடரப் போலி மருத்துவரின் மருந்துகளுடன் அவர் வந்தார். இந்தக் காட்சியை ஹிட்ச்காக் திரைப்படத்தில் காட்சிப்படுத்தலாம். அந்தத் திரைப்படத்துக்கு நான் ஒரு தலைப்பும் தருகிறேன்... 'பிசாசின் சமையல் குறிப்பு!’ ’ - அஞ்சாமை என்பது ஒருவரின் ரத்தத்தில் இருந்தால்தான் இப்படிப் பேச முடியும்!

அர்ஜுனன்.ஜி., திருப்பூர்-7.

இலங்கைக்கு அமைதிப் படையை ராஜீவ் அனுப்பியது சரியான முடிவா?

ஈழத் தமிழர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் சில ஷரத்துக்கள் ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தில் இருந்தன. அதை அமல்படுத்தவே இந்திய அமைதிப் படையை ராஜீவ் காந்தி, இலங்கைக்கு அனுப்பினார். 'ஒப்பந்தத்தை நாங்கள் ஏற்காவிட்டாலும் ராஜீவ் காந்தியை நம்பி எங்களது ஆயுதங்களை ஒப்படைக்கிறோம். இதன் மூலமாக எங்களது தமிழர்களின் பாதுகாப்பையும் ராஜீவ் கரங்களில் கையளிக்கிறோம்’ என்று, சுதுமலைக் கூட்டத்தில் பிரபாகரன் அறிவித்தார்.

ஆனால், ஜெயவர்த்தனாவும் சிங்கள ராணுவமும் ஒப்பந்த சாராம்சங்களை மீறி விடுதலைப்புலிகளின் தளபதிகளைக் கைது செய்து கொழும்புவுக்குக் கொண்டுசெல்லத் திட்டமிட்டது. அதைத் தடுக்க இந்திய அமைதிப் படை அதிகாரிகளும் தவறினர். இதைத் தொடர்ந்து, புலிகள் தாக்குதலைத் தொடங்கினர். அவர்களோடு அமைதிப் படை மோதியது.

அதாவது, அமைதியை ஏற்படுத்தப்போன இந்திய அமைதிப் படைக்கும் புலிகளுக்கும் சண்டையை மூட்டிவிட்டு ஜெயவர்த்தனா கைகட்டி வேடிக்கை பார்த்தார். 2,000-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களையும் 1,500-க்கும் மேற்பட்ட புலிகளையும் பழிவாங்கி அந்த மோதல் 1987 - 1990 காலகட்டத்தில் சோகமாய் நடந்து முடிந்தது.

பொன்விழி, அன்னூர்.

இந்திய எல்லையில் ஆக்கிரமித்து வரும் வங்க தேசத்தைக் கண்டிக்காமல், கௌரவப் பட்டம் பெற்று வந்துள்ள பிரணாப் முகர்ஜியைப் பற்றி?

'வங்க தேசத்தின் மருமகன்’ என்று புளகாங்கிதம் அடைந்துள்ளார் பிரணாப். 'வங்க தேசத்தில் எங்கு சென்றாலும் என் சொந்த ஊருக்கு உறவினர்களைக் காணவந்தது போல் உணர்கிறேன்’ என்றும் அவர் சொல்லி இருக்கிறார். இப்படிப்பட்டவர் வங்க தேசத்தின் ஆக்கிரமிப்பைப் பற்றி எப்படிப் பேசுவார். அவர் அங்கு சென்ற நாளில் ஏற்பட்ட கலவரத்தில்கூட இந்துக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதுவாவது பிரணாபுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை.

பா.சு.மணிவண்ணன், திருப்பூர்-4.

நாகாலாந்தில் 1964 முதல் ஒரு தேர்தலில்கூட எந்தப் பெண்ணும் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனதில்லையாமே?

அரசியலில் பெண்களுக்கான ஈடுபாடு எந்த அளவுக்கு வளராமல் இருக்கிறது என் பதன் அடையாளம் இது. சமீபத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட இரண்டு பெண்கள் தோல்வி அடைந்துள்ளனர். தேசியக் கட்சிகள் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க முயற்சிக்கலாம்.

சீர்காழி சாமா, தென்பாதி.

அமைச்சர்களை அடிக்கடி மாற்றுவது அரசுக்கு ஆரோக்கியமானதா?

முதலமைச்சரின் தனிப்பட்ட உரிமை, விருப்பம் சார்ந்தது. ஒருவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கும்போது இன்ன காரணத்துக்காகத்தான் நீக்கினேன் என்று முதல்வர் வெளிப்படையாக அறிவித்தால், அடுத்து அமைச்சர்களாக வருபவர்களுக்கு அது பாடமாக அமையும். எதற்காக நீக்கினர் என்பது சில அமைச்சர்களுக்கே தெரியாமல் இருக்கிறது... பாவம்!

அ.குணசேகரன், புவனகிரி.

தமிழனுக்கு எப்போது கோபம் வரும்?

தேர்தலுக்கு மூன்று மாதங்கள் இருக்கும்போதுதான் கோபம் வரும். எதிர்த்துக் குத்திவிட்டு அமைதியாகிவிடுவான். தன்னுடைய ஆத்திரத்தைத் தீர்க்கும் ஒரே வழியாக வாக்குச் சாவடியை மட்டுமே நினைக்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில் எந்த ஆக்ரோஷமும் போராட்டமும் ஏற்படாமல் இருக்க இதுதான் காரணம். 'எல்லாம் நம்மோட தலையெழுத்து’ என்று, தன்னளவில் சமாதானம் செய்துகொள்வதும் இதற்கு அடிப்படை.

சம்பத்குமார், பொன்மலை.

'பி.ஜே.பி. கூட்டணி ஆட்சிக்கும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கும் எந்தக் கொள்கை வித்தியாசமும் இல்லை’ என்று சரத்பவார் சொல்ல என்ன காரணம்?

எப்படியாவது தன்னை பிரதமர் நாற்காலியில் உட்காரவைத்துவிடுவார்கள் என்று நப்பாசையில் இருந்தார் சரத்பவார். அது பணால் ஆன விரக்தியில் தினமும் இப்படி ஏதாவது ஒரு முத்து உதிர்க்கிறார்.

இ.பா.ஹரிராமகிருஷ்ணன், இசையனூர்.

ஸ்டாலின் மணிவிழாவுக்கு அழகிரி வரவில்லையே?

அழகிரியைப் பற்றியே ஏன் கேட்கிறீர்கள். மூத்த அண்ணன் மு.க.முத்துவும்தானே வரவில்லை. யாராவது கவலைப்படுகிறீர்களா?