கழுகார் உள்ளே நுழைந்த நேரத்தில், இந்த இதழுக்கான அட்டை தயாராகிக்கொண்டு இருந்தது.

''ஈழத் தமிழர் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தணலாய் கொதிப்பதில் ஆளும் கட்சிக்கும் அதிர்ச்சிதான். இதைச் சமாளிக்கும் விதமாக ஏதாவது ஓர் அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடலாம் என்கிறார்கள்'' என்றவர், நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

''உண்ணாவிரதம் இருந்த லயோலா மாணவர்களைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்றது ஆளும் கட்சிக்கு எதிர்ப்பைத்தானே சம்பாதித்துக் கொடுக்கும்?'' என்றோம்.

''லயோலா மாணவர்களின் உண்ணாவிரதத்தை சிலர் அரசியல் லாபத்துக்கு பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் என்ற தகவல் கிடைத்ததும்தான் போலீஸ் அப்படி நடந்துகொண்டதாம். மூன்று நாட்களாக லயோலா மாணவர்களின் உண்ணாவிரதம் அமைதியாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மதியம், திருமாவளவன், தி.மு.க. எம்.பி-யான டி.கே.எஸ். இளங்கோவன், சுப.வீரபாண்டியன் ஆகியோர் வந்துள்ளனர். திருமாவளவன்தான் முதலில் வந்துள்ளார். அவரை உள்ளே அழைத்துப் பேசவிட்டுள்ளனர். ஆனால், அவரது பேச்சு ஏனோ மாணவர்களுக்கு உசிதமாக இல்லை. மாணவர்களின் கோரிக்கைகளுக்கு நெகடிவ்வாகப் பேசிய அவர், 'எதுவாக இருந்தாலும் நீங்கள் இந்திய

அரசாங்கத்திடம்தான் கோரிக்கை வைக்க வேண்டும்’ என்றாராம். இளங்கோவன் பேசும்போது, மாணவர்கள் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, திருமாவளவனை விமர்சித்து ஒரு மாணவர் பொங்கி இருக்கிறார். திருமாவுடன் வந்தவர்களுக்கும் மாணவர் ஒருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அமைதியானது. இதைத் தொடர்ந்து சில நிமிடங்களில், 'உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் டெசோவுக்கு ஆதரவு’ என்று ஊடகங்களில் சிலர் திட்டமிட்டு செய்தி பரப்பினர். இது மாணவர்களுக்கு எரிச்சலைக் கிளப்பியது. இந்த நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு வர... அவரை உள்ளே விடாமல் மாணவர்கள் தடுத்தனர். தங்கபாலு உடன் வந்தவருக்கு கல்லெறியும் கிடைத்தது!''

''ஓஹோ!''

''உண்ணாவிரத அரங்கத்துக்கு வந்த தங்கபாலு, 'உங்கள் மாணவர் ஒருவர் அழைத்ததால்தான், நான் வந்தேன்’ என்றாராம். 'நாங்கள் யாரும் தங்கபாலுவை அழைக்கவில்லை’ என்று மாணவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அப்படியானால் மாணவர்கள் என்ற போர்வையில் சிலர், டெசோ உறுப்பினர்களையும் தங்கபாலுவையும் திட்டமிட்டு வரவழைத்து, 'டெசோவுக்கு மாணவர்கள் ஆதரவு’ என்ற செய்தியைப் பரப்பத் திட்டமிட்டு இருக்கிறார்கள். இது, மேலிடத்துக்குச் சென்றது. 'தி.மு.க. இந்த மாணவர்களைக் கையில் எடுத்தால், அரசியல்ரீதியாக சிக்கல் ஏற்படும். மறுநாள் பந்த் நடக்க இருப்பதால், அதற்கு ஆதரவு கிடைக்க இந்த உண்ணாவிரதம் காரணம் ஆகிவிடும்’ என்று யோசித்துத்தான் மாணவர்களை அந்த இடத்தைவிட்டு அப்புறப்படுத்தத் திட்டமிட்டார்களாம்.''

''இதிலெல்லாமா அரசியல் செய்வது?''

''தமிழ்நாட்டில் எல்லாமே அரசியல்தானே!'' என்ற கழுகார், டெல்லியில் நடந்த டெசோ மாநாட்டுக் கூத்துக்களைச் சொல்ல ஆரம்பித்தார்...

''ஈழத் தமிழர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்த அன்றுதான் டெல்லியில் டெசோ சார்பில் இலங்கைத் தமிழர்கள் மீதான அடக்குமுறை குறித்து கருத்தரங்கமும் நடந்தது. நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு கர்ஜித்தார். டெல்லி கருத்தரங்கில் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தப் படாதபாடு பட்டனர். டெல்லியில் தி.மு.க-வுக்கு இருக்கும் செல்வாக்கை மட்டுமா, குறைந்துகொண்டே வரும் மரியாதையையும் இந்தக் கருத்தரங்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. குறைந்தபட்சம் ஒரு கூட்டத்தை எப்படி நடத்துவது என்பதில்கூட டெல்லி தி.மு.க. தடுமாறியது. அமைச்சர் பழனிமாணிக்கம் உட்பட எல்லா எம்.பி-களும் சேர்ந்து பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுத்தனர். ஆதிசங்கர் ஏற்பாட்டில் சாப்பாடு, ஏ.கே.எஸ்.விஜயன் செலவில் விளம்பரப் பலகை என்று ஏற்பாடுகள் பெருமைப்பட்டாலும், எந்த வரவேற்பும் கவனிப்பும் இல்லாத ஒரு கூட்டத்தை நடத்தி முடித்தனர்.

தைரியமான, செல்வாக்கான லாபி இப்போதைய டெல்லி தி.மு.க-வுக்கு இல்லை என்பதையும் இது காட்டியது. கனிமொழிக்காக வந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே சிறிது நேரத்தில் சென்றுவிட்டார். என்.சி.பி-யின் பேச்சாளர் டி.பி.திரிபாதி மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி, லோக் ஜனசக்தி போன்ற கட்சியின் கீழ்மட்டத் தலைவர்கள் சிலர் மட்டுமே வந்தனர். பி.ஜே.பி., ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், சிவசேனா, தெலுங்கு தேசம், அகாலி தளம், பி.எஸ்.பி. ஆகியவை வரவில்லை. அதற்காக அவர்கள் இலங்கைத் தமிழர் மீது அக்கறை இல்லாத கட்சிகள் என்று சொல்லிவிட முடியாது.''

''ம்!''

''நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர் விவகாரம் வந்தபோது அக்கறையுடன் பேசியவர்கள்தான் இவர்கள். ஆனால், தி.மு.க-வின் அழைப்பை ஏற்க அவர்கள் தயாராக இல்லை. கூட்டணியைக் காப்பாற்ற வேண்டும் என்ற ரீதியில் தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளரும் பொதுச் செயலாளருமான குலாம் நபி ஆசாத் வந்து தி.மு.க-வின் மானத்தைக் காப்பாற்றினார். எந்தெந்தக் கட்சிகள் இந்தக் கூட்டத்துக்கு வரப்போகின்றன தெரியுமா என்று அலட்டலாய் ஒரு பெரிய பட்டியலை கூட்ட வளாகத்துக்கு முன்னால் வைத்திருந்தனர். கூட்டம் ஆரம்பித்ததும் அதை நைஸாக அப்புறப்படுத்திவிட்டனர். 'டெல்லி தமிழ் மாணவர்கள் அமைப்பே நான்கு தலைவர்களை அழைத்து வந்து கடந்த காலங்களில் வெற்றிகரமாக இலங்கைப் பிரச்னை குறித்த கூட்டத்தை நடத்தியுள்ளது. ஒரே ஓர் உறுப்பினரைக்கொண்ட ம.தி.மு.க. கூட கௌரவமான பல போராட்டங்களை நடத்தியுள்ளது’ என்று, டெல்லி மீடியாக்காரர்கள் சொல்லிக்கொண்டனர். இவர்கள் நினைத்திருந்தால் அத்வானியை வரவழைத்திருக்கலாம். அருண் ஜெட்லிக்கு கொடுத்த அழைப்பிதழை அவரது அலுவலக ஊழியர் எடுத்துக்கொண்டு இந்தக் கூட்டத்துக்கு வந்தார். பத்திரிகையாளர்களுக்கும் முறையான அழைப்பு கிடையாது. வந்த பத்திரிகையாளர்களை கூட்டத்தின் நடுவில் வெளியேற்றிவிட்டனர். கருத்தரங்கு என்று சொல்லிவிட்டு இன்-கேமரா கூட்டத்தையே நடத்தினர்.''

''தி.மு.க-வினராவது மிஸ்ஸாகாமல் வந்தார்களா?''

''கடந்த இரண்டு மாதங்களாக டெல்லி திரும்பாத மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, சகோதரச் சண்டையை மறந்து ஒரே வரிசையில் அமர்ந்திருந்தால், மதிப்பு அதிகரித்து இருக்கும். ஆனால், அவரும் இணை அமைச்சர் நெப்போலியனும் மிஸ்ஸிங். 'தி.மு.க-வின் கோரிக்கைக்கு டெல்லியில் ஆதரவு இல்லை’ என்பதை அறிவிக்கும் மாநாடாக அது முடிந்துவிட்டது. டி.ஆர்.பாலு பார்த்துக்கொள்வார் என்று எல்லோரும் ஒதுங்கிவிட்டார்களாம். 'அவர்தான் அனைவராலும் ஒதுக்கப்பட்டவராச்சே... அவர் சொல்லி யார் வருவார்கள்?’ என்று எம்.பி. ஒருவர் கமென்ட் அடித்தார். இதையெல்லாம் கேள்விப்பட்ட பிறகும், 'டெசோ மாநாடு வெற்றி’ என்று கருணாநிதி அறிக்கை வெளியிடுவதுதான் ஆச்சர்யமானது!''

''தலைமைச் செயலகத்தில் கேபினெட் கூட்டம் நடந்துள்ளதே?''

''பட்ஜெட் தொடர்பான விஷயங்கள் அப்போது விவாதிக்கப்பட்டன. துறை ரீதியான நிதி ஒதுக்கீடு பற்றி பேசிய முதல்வர், அடுத்ததாக மின்வெட்டு பற்றியும் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டம் முடிந்த பிறகு, தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து உள்துறை செயலாளர் ராஜகோபால், டி.ஜி.பி. ராமானுஜம் போன்ற உயர் அதிகாரிகளுடன் முதல்வர் விவாதித்தார். தமிழகக் கல்லூரிகளில் பரவிவரும் இலங்கைத் தமிழர் ஆதரவு போராட்டம் பற்றி விவாதிக்கப்பட்டதாம். கல்லூரி மாணவர்கள் கொந்தளிக்கும்போது, விடுமுறை அறிவித்து கல்லூரிகளையும் ஹாஸ்டலையும் இழுத்து மூடி போராட்டத்தை அமுக்கும் வேலைகள் ஆரம்பம் ஆகலாம்.''

''அப்படியா?''

''டெலிபோன் உரையாடல்களை டேப் செய்த விவகாரத்தில் சிக்கலுக்கு ஆளான போலீஸ் உயர் அதிகாரி உபாத்தியாயாவுக்கு விடிவு பிறந்து இருக்கிறது. நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பதவி உயர்வை இப்போது வழங்கிவிட்டனர். அவர் மீதான விசாரணைகள் எல்லாம் முடிந்தும், பதவி உயர்வை மட்டும் பெண்டிங்கில் வைத்து இருந்தனர். இப்போது உள்ள ஐ.பி.எஸ். பட்டியலில் நம்பர் ஒன் சீனியாரிட்டி டி.ஜி.பி-யாக பதவிஉயர்வு பெற்றிருக்கும் உபாத்தியாயா. ஓய்வுக்குப் பிறகு பதவி நீட்டிப்பில் இருக்கும் ராமானுஜத்துக்கு சிக்கல் ஏற்பட்டால், அவர் இடத்தில் உபாத்தியாயா உட்காரவைக்கப்படுவார் என்கிறார்கள்.''

''அடுத்த முக்கிய மாறுதலாக அது அமையலாம். இருக்கட்டும், மதுரை பொட்டு சுரேஷ் கொலை விவகாரத்தில் ஏதாவது புதுத் தகவல் உண்டா?''

''அட்டாக் பாண்டியின் அக்கா மகன் விஜயபாண்டி போலீஸிடம் சொன்ன தகவல்களை விரிவாக எழுதிவிட்டீர்களே... அதைப் படித்துவிட்டு, என்னுடைய சோர்ஸ் ஒருவர் சொன்ன தகவலைத் தருகிறேன். சேலம் சிறைச்சாலையில் விஜயபாண்டியிடம் அட்டாக் பாண்டியின் ரகசிய உத்தரவுகளை பாஸ் செய்ததாக ஒரு சட்டப் பிரமுகர் பற்றி நான் சொல்லி இருந்தேன். அவர் திரும்பத் திரும்பச் சொன்ன விஷயம் - 'டோகோமோ சிம் கார்டு பற்றி ஏதும் போலீஸில் சொல்ல வேண்டாம்' என்பதுதானாம்.''

''அதில் என்ன அவ்வளவு விசேஷம்?''

''அட்டாக் பாண்டியுடன் துரை தயாநிதி, அழகிரி போன்ற முக்கிய பிரமுகர்கள் தொடர்புகொண்டு பேசியது அந்த சிம் கார்டில்தானாம். பொட்டு கொலைக்கு முன்பு - பின்பு என்று அந்த சிம் கார்டில் பதிவான எண்களை எடுத்தாலே, போலீஸின் பல கேள்விகளுக்கு விடை கிடைத்துவிடுமாம். அதனால்தான் அந்த சிம் பற்றி தகவல் சொல்ல வேண்டாம் என்று உத்தரவு போட்டார்களாம்.''

''அவர்கள் சொல்லாவிட்டாலும் போலீஸுக்கு இந்நேரம் தெரியாமல் இருக்குமா?''

''வி.ஐ.பி-கள் சம்பந்தமான கொலை மேட்டர் ஆச்சே? சில தடயங்களை போலீஸார் உடனே வெளிக்காட்ட மாட்டார்கள். பதுக்கிவைத்து, நேரம் வரும்போது எடுத்துவிடுவார்கள்'' என்று சிரித்தார் கழுகார்.

''விசாரணை ஒழுங்காக நடந்தால் சரி!''

''பொதுவான மந்திரி ஒருவரை தவறான வழியில் கொண்டுசெல்லும் கிருஷ்ண பரமாத்மா பெயர்க்காரர் பற்றிச் சொல்லி இருந்தேன் அல்லவா? அவருக்கு மார்ச் 30-ம் தேதியுடன் பணிக் காலம் முடிகிறதாம். ஆனால், எப்படியாவது பணி நீட்டிப்பு வாங்குவதற்கு பசையுடன் அலைய ஆரம்பித்திருக்கிறார் என்பதையும் கோட்டையில் கொக்கி போட்டுச் சொல்கிறார்கள்.''

''இந்த மாதிரியான ஆட்கள் நினைப்பதுதான் உடனே நடந்துவிடுமே?''

''முதல்வரின் தஞ்சை விசிட் செய்திகளுக்கு வருகிறேன். 'விவசாயிகளின் வாழ்வாதாரமே... உழவர்களின் உயிரே... இனி யானை கட்டி போரடிப்போம்’ போன்ற வாசகங்களை வைத்து முதல்வரை மகிழ்ச்சிப் பெருங்கடலில் ஆழ்த்திவிட்டனர் தஞ்சாவூரில். மன்னர் சரபோஜி கல்லூரிக்குச் சொந்தமான சுமார் 35 ஏக்கர் பரப்பளவுகொண்ட இடத்தில் முட்புதர்களும் குப்பைகளும் இருந்ததை சுத்தப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லி இருந்தேன். சுத்தம் செய்த அன்றைய தினம் மழைபெய்து சகதி ஆனது. ஆயிரக்கணக்கான லாரிகளில் மணலைக் கொண்டுவந்து கொட்டி, சரிசெய்தனர். பந்தலுக்குள் 29 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதையும் தாண்டிக் கூட்டம் வந்ததால், அமைச்சர்கள் முகத்தில் சந்தோஷ ரேகைகள். குறிப்பாக, வைத்திலிங்கம் குஷியாக இருந்தார். இதில் கலந்துகொள்ளக்கூடியவர்கள் விவசாயிகள்போல் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக... ஈரோடு, திருப்பூரில் இருந்து பண்டல் பண்டலாக பச்சைத் துண்டுகள் வரவழைக்கப்பட்டு ஒன்றியச் செயலாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன.

விழா நடந்த 9-ம் தேதி சனிப் பிரதோஷம். தஞ்சைப் பெரிய கோயிலில் மிகவும் விசேஷமான நாட்களில் இதுவும் ஒன்று. அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள், முதல்வருக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். நடிகர் அருண்பாண்டியனும் சுந்தர்ராஜனும் இந்த விழாவுக்கு வந்திருந்தனர். மற்ற மூன்று பேரைக் காணவில்லை.''

''ஓஹோ!''

''விழா, விவசாயிகள் தொடர்பானது. ஆனால், விவசாயத் துறை அமைச்சர் தாமோதரனுக்கு ஏனோ கொஞ்சமும் முக்கியத்துவம் இல்லை. அழைப்பிதழில் பெயர்கூட இல்லை. உரை நிகழ்த்தவும் அழைக்கப்படவில்லை. ஆனால், பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கத்துக்கு திடீர் வாய்ப்பு தரப்பட்டது. 'கோவை மண்டலத்துக்காரர் என்பதால், அவர் பேச அழைக்கப்படவில்லை’ என்று புதுக் காரணம் சொன்னார்கள். திட்டமிட்டு அவர் புறக்கணிக்கப்பட்டதாகவும் பேச்சு.''

''முதல்வருக்கு புதுமாதிரியான பரிசு கொடுத்துள்ளார்களே?''

''பொன்னியின் செல்வி சிலை கொடுத்தார்கள். கிளியுடன் இருப்பதுபோல முதலில் வடிவமைக்கப்பட்டதாம். பிறகு, நெற்கதிருடன் இருப்பதுபோல் மாற்றப்பட்டதாம்'' என்றபடி பறந்தார் கழுகார்!

குஷ்பு... வந்தாச்சு!

ஒரு வழியாகக் கருணாநிதியைச் சந்தித்துவிட்டார் குஷ்பு. தனது திருமண நாளில் கணவர் சுந்தர்.சி சகிதமாக கோபாலபுரம் வீட்டுக்குச் சென்று கருணாநிதியிடம் ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார். உடல்நலக் குறைவு காரணமாக, போட்டோ எதிலும் தலைகாட்டாமல் இருந்த தயாளு அம்மாவை, குஷ்பு வந்தபோது அருகில் நிறுத்தி இருந்தனர். கோபாலபுரம் வீட்டுக்கு குஷ்பு வந்துசென்ற செய்தி அடுத்த நாள் மீடியாக்களில் வரவில்லை. கருணாநிதியைத் தொடர்புகொண்டு பேசிய குஷ்பு, 'நான் வந்து உங்களைப் பார்த்ததை எதுக்காக ரகசியமாக வைத்திருக்கிறீர்கள்? அப்படி உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், என்னைப் பார்க்காமலேயே இருந்திருக்கலாமே...’ என்று வருத்தமும் கோபமும் கலந்து கேட்டாராம். அதன் பிறகே, சந்திப்பு படங்கள் வெளிவந்தனவாம். இந்தச் சந்திப்பு நடந்தபோது ஸ்டாலின் சிங்கப்பூரில் இருந்தார்!

''மோடி வந்தாலும் வளர்க்க முடியாது!''

கரூரில் பி.ஜே.பி-யின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா வரவில்லை. இன்னொரு முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும் இரண்டு மணி நேரம் இருந்துவிட்டு புறப்பட்டுவிட்டார். வந்திருந்த இன்னொரு தலைவரான இல.கணேசன், ''கட்சியில ஒற்றுமை இல்லை. ஜனதா கட்சி நல்லாட்சி கொடுத்தது. ஆனால், தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால், மொரார்ஜி தேசாய் பெயர் கெட்டது. ஆட்சி பறிபோனது. தமிழக பி.ஜே.பி. நிலையும் அப்படித்தான் இருக்கிறது. இதே நிலை நீடித்தால், மோடி, வாஜ்பாய் வந்தாலும் தமிழகத்தில் பி.ஜே.பி-யை வளர்க்க முடியாது'' என்று வருத்தப்பட்டாராம்.

''ஆட்சிக்கு வரப்போற கட்சிக்கு அந்த உற்சாகமே இல்லையே'' என்று சில நிர்வாகிகள் புலம்பினர்.