Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
##~##

லங்கைத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரையில், 'காதற்ற ஊசியாக' காங்கிரஸ் மாறி வெகுநாள் ஆகிறது. சென்னை கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதக் களத்துக்கு அசட்டுத் துணிவோடு சென்ற காங்கிரஸார், அவமானப்பட்டது சமீபத்திய காட்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 தி.மு.க-வின் நடவடிக்கைகளோ - 'வேலிக்கு ஓணான் சாட்சி'! இலங்கையில் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது 'அரை நாள் உண்ணாவிரதம்' இருந்துவிட்டு, 'போர் முடிந்தது' என்று வீடு திரும்பிய அதே தலைவர், இப்போது 'டெசோ’ சார்பில் டெல்லியில் கருத்தரங்கம், தமிழ்நாட்டில் பொது வேலைநிறுத்தம் என்று புதிய பூச்சாண்டி காட்டுகிறார்.

எரிவதைப் பிடுங்கினாலே, கொதிப்பது தன்னால் அடங்கும் என்று நன்றாகத் தெரிந்தும்கூட, கொழுந்துவிடும் நெருப்புக்குக் காவலாக நின்றபடி... 'கொதிக்கிறதே... கவனிப்பார் இல்லையா?' என்று கூச்சல் போடும் தந்திரம் இன்னும் எத்தனை நாள்தான் கைகொடுக்கும்? எவ்வளவுதான் தவறான பாதையில் மத்திய அரசு பயணித்தாலும், அதற்கு அச்சாணியாக இருப்பதன்  நோக்கம் - கட்சியையும் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்வதை அன்றி வேறென்ன?

சிறுவன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்டதற்கான ஆதாரக் காட்சிகளைக் காட்டி, 'இந்தக் கொடுமைக்கு நீதி சொல்வார் யாரும் இல்லையா?' என்று 'கண்ணீர்' வடிக்கிறார் கருணாநிதி. தன்னைப் பார்த்து மக்கள் கேட்கத் துடிக்கும் கேள்விகளை எல்லாம், தானே அறிக்கை ஆக்குவதன் மூலம்... வரலாற்றில் எதைப் பதிவுசெய்ய நினைக்கிறார் அவர்?

'தமிழினத்தில் கருணாநிதி என்று ஒரு தலைவர் இருந்தார்; ஆறேழு மந்திரி பதவிகளும், அரசியல்ரீதியாக மத்திய அரசு தரும் பாதுகாப்பும் மட்டுமே அவருக்குப் பிரதான இலக்கு; அதற்கு ஈடாக, காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை அபார விசுவாசத்தோடு தாங்கிப் பிடித்தார்; அதற்காகவே தனது அறிவு, ஆற்றல், அனுபவம், சாணக்கியத்தனம் அத்தனையும் செலவிட்டார்’ என்று பேர் வாங்குவதுதான் அவருடைய 'சரித்திரப் புகழ்' லட்சியமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism