Published:Updated:

ஹல்லோ, ராங் கால்!

ஹல்லோ, ராங் கால்!

ரு செல்போன் விளம்பரத்தில் சதா சண்டையிடும் தன் அப்பா, அம்மா இருவரின் செல்போன்களையும் மாற்றிக் கொடுத்துவிடுவான் மகன். இருவரும் தங்களுடைய செல்போனை மாற்றி எடுத்துச் செல்வதால் நிகழும் நல்ல விஷயங்கள் பற்றிச் சொல்லி இருப்பார்கள். அதே மாதிரி ஒவ்வொரு வாரமும் நம்முடைய சபையை அலங்கரிக்கும் வி.ஐ.பி-களின் செல்போன்கள் தவறுதலாக இடம் மாறிவிட்டால் என்னாகும்?

ஹல்லோ, ராங் கால்!

ஓ.பன்னீர்செல்வத்தின் செல்போன் கருணாநிதியின் கைகளில் இருப்பது தெரியாமல், ஜெயலலிதா ஓ. பன்னீர்செல்வத்தைத் தொலைபேசியில் அழைக்க, கருணாநிதி எடுக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

(கருணாநிதி ஹலோ என்று சொல்லி முடிப்பதற்குள் ஜெ-விடம் இருந்து கட்டளைகள் பறக்கின்றன) மிஸ்டர் ஓ.பி. பட்ஜெட்ல என்னென்ன விஷயங்கள் இருக்கணும்னு நான் சொன்ன எல்லா விஷயத்தையும் சேர்த்திருக்கீங்க. குட். ஆனா, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள்ங்கிற வார்த்தை மொத்தமே 4,300 தடவைதான் வருது. அதுவும் கூட்டுத்தொகை 9 வர மாட்டேங்குது. அப்புறம் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட செம்மொழிப் பூங்காவை மலிவு விலை உணவகமா மாத்திடுங்க. வழக்கம்போல மின்வெட்டுப் பிரச்னை ஜூன் மாசத்துடன் முடிவுக்கு வந்துடும்னு போட்டுக்குங்க. ஆனா, எந்த ஜூன் மாசம்னு மட்டும் சொல்லிடாதீங்க. இப்போதைக்கு இவ்ளோதான். நான் இப்போ அவசரமா கவர்னரைப் பார்க்கப் போறேன். எந்த அமைச்சரைத் தூக்குறதுனு இன்னமும் முடிவு பண்ணலை. கார்ல போகும்போது சீட்டு குலுக்கிப் போட்டுப் பார்க்கும்போது, உங்க நேம் வரக்கூடாதுனு பிரே பண்ணிக்குங்க. நோ நோ, போன்ல பேசும்போது எல்லாம் தரையில விழுந்து கும்பிடக் கூடாது. எழுந்து வேலையைப் பாருங்க. பை பை!''

தன்னுடைய மகன் கார்த்தி சிதம்பரத் துக்கு போன் போடும் ப.சிதம்பரம் தவறுதலாக ஜி.கே.வாசனிடம் பேசுகிறார்:

ப.சி: "தம்பி, டெல்லியில முன்ன மாதிரி நமக்கு மரியாதை இல்லை. டீ குடிக்க கேன்டீனுக்குப் போனா, பஜ்ஜிக்கு சட்னி தர மாட்டேங்கிறாய்ங்க. ராகுல்காந்தி வேற, யாரெல்லாம் ஷ§கர் இல்லாத டீ குடிக்கிறாங்கனு துப்பறியறதுக்கு ரெண்டு பேரைப் போட்டிருக்காரு. அவங்கல்லாம் இளைஞர்களுக்கு வழிவிடணுமாம். கபில்சிபல் பார்லிமென்ட்ல மொக்கை போடுறப்போ, லேசாக் கண்ணசந்தா, கனவுல ஆ.ராசா வந்து அ.தி.மு.க-காரங்க மாதிரி ரெண்டு விரலை காமிச்சு 2ஜியில எனக்கும் மன்மோகனுக்கும் சம்பந்தம் இருக்கும்னு ஜாடைமாடையாப் பேசி வெறுப்பேத்துறாரு. எதிர்க்கட்சிக்காரங்க என்னடான்னா, இன்று ஒரு தகவல் மாதிரி இன்று ஒரு ஊழல் என்னன்னு நக்கல் பண்றாங்க. இங்க லோக்கல்லயும் நமக்கு எப்பவுமே ஆகாத வாசன், இளங்கோவன் எல்லாம் நம்ம காதுபடவே கிண்டல் அடிக்கிறாங்க. இவங்க எல்லாம் சேர்ந்து பண்றதைப் பார்த்தா, இப்பவே நமக்குக் கண்ணைக் கட்டுது. சரி, கண் டாக்டர்கிட்ட போகலாம்னு பார்த்தா, அங்கயும் வாசன்காரங்கதான் இருக்காங்க. பேசாம, வக்கீலாவே இருந்துட்டுப் போயிருக்கலாம்!'' (வாசன் போனை வைத்துவிட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறார்.)

- சீலன்