Published:Updated:

பள்ளிக்கூடம் போகலாமா?

பள்ளிக்கூடம் போகலாமா?

ந்த ஸ்கூலிலும் வேலை பார்க்காவிட்டாலும் தன் படங்களில் ஏராளமான போதனைகளைச் சொன்னதாலோ என்னவோ, எம்.ஜி.ஆரை வாத்தியார் என்கிறோம். இன்னும் சில அரசியல் பிரபலங்கள், ஒருவேளை அரசியலுக்கு வராமல் பள்ளிக்கூடத்துக்கு வேலைக்குப் போயிருந்தால்..?

பள்ளிக்கூடம் போகலாமா?

ஜெயலலிதா, எலிமென்ட்ரி ஸ்கூல் டீச்சர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஏன் எலிமென்ட்ரி ஸ்கூல் டீச்சர்னுதானே கேட்கிறீங்க? அந்த டீச்சரா இருக்கிறதில் நிறைய வசதிகள் இருக்கு பாஸ். எதிர்த்துக் கேள்வி கேட்க ஆளே கிடையாது. எல்லோருமே ஸ்மால் பாய்ஸ். எப்போ மிஸ் வந்தாலும், வரிசையா எந்திரிச்சு, பிடிக்குதோ இல்லையோ கண்டிப்பா குட்மார்னிங் சொல்லியே ஆகணும். டீச்சர் பேசும்போது அமைதியா வாய்ல விரல் வெச்சு கப்சிப்புனு பேசாம இருக்கணும். மிஸ் சொல்வதை மட்டும்தான் கேட்கணும். யாராவது அப்படி வம்பு பண்ணா, அலேக்காகத் தூக்கி கடைசி பெஞ்சுக்கு மாத்திடுவாங்க. அது மட்டும் இல்லாம விடிய விடியப் புத்தகத்தை எல்லாம் படிச்சு மனப்பாடம் பண்ணிட்டு வந்து ஏதோ அவங்களே சுயமாத் தயாரிச்சு சொல்வதுபோல பில்ட்-அப் கொடுத்துக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பாங்க!

சுப்பிரமணியன் சுவாமி, நூலகர்

பள்ளிக்கூடம் போகலாமா?

லைப்ரரியன்கிட்டதான் எல்லா புக்ஸ் லிஸ்ட்டும் இருக்கும். ஆனா, தேவைப்படும்போது இழுத்தடிப்பாங்க. 'என்கிட்ட எல்லா டாக்குமென்ட் புத்தகங்களும் இருக்கு. ஆனா, உங்களுக்கு எப்போ தேவையோ, அப்பதான் கொடுப்பேன்' என, நாம் கேட்ட புத்தகம் இருக்கா? இல்லையா? என்றே தெரியாமல் குழம்பும்படி, பில்ட்- அப் கொடுத்து முடிவே தெரிவிக்காமல் இருப்பதால், சுப்பிரமணிய சுவாமி கண்டிப்பா லைப்ரரியன்தான்!

நாராயண சுவாமி, கணக்கு வாத்தியார்

கணக்குப் பாடம் தெரியாத கணக்கு வாத்தியார். ஸ்கூல் பசங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுனு நினைச்சுக்கிட்டு 'டேய்... 15 ப்ளஸ் 15 ஈக்வல் டு 15' என கணக்குச் சொல்லிக் கொடுத்து நோஸ்கட் வாங்கும் தப்புக்கணக்கு வாத்தி!

வைகோ, யோகா மாஸ்டர்

''உடம்பை எப்போதும் நல்லா ஆரோக்கியமா வெச்சுக்கணும். அதற்கு நாம் தினம் யோகா செய்றோமோ, இல்லையோ ஓயாது நடந்துகொண்டே இருக்கணும். நானும் காலையில நடப்பேன், மாலையில நடப்பேன். என்கிட்ட வந்தா, நீங்களும் நடையோ நடைனு நடக்கணும்'' என நடையை பிறர் உடல் நலனுக்காகச் சொல்லிக் கொடுப்பதால், யோகா மாஸ்டர் வைகோ!

கருணாநிதி, தமிழ் வாத்தியார்

தமிழில் நல்ல புலமை இருக்கு என்ற நம்பிக்கையில், கவிதை எழுதி எழுதிப் பசங்க மனநிலையைப் புரிந்துகொள்ளாமல் படிச்சுக் காட்டியே மாணவர்களைக் காண்டாக்குவது. அதன் பின் 'சார் உங்களை மாதிரி தமிழ் ஆசிரியர் கிடைக்க நாங்க எல்லோரும் கொடுத்துவெச்சிருக்கணும்'' என மாணவர்களிடம் வாலன்ட்டியராகப் பாராட்டு வாங்கி குஷி ஆவது. அதன் பின் பைந்தமிழில் யாருக்கும் அர்த்தம் தெரியாத, புரியாத வார்த்தைகளைச் சொல்லி மண்டை காயவிடுவதால், கருணாநிதி தகத்தகாயத் தமிழ் வாத்தியார்!

- நா.சிபிச்சக்கரவர்த்தி

ஓவியங்கள்: ஹரன்