Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்
தலையங்கம்

மும்பையில் கொடூரத் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவனான அப்துல் கசாப் மீதான வழக்கில், அவனுக்கு தூக்குத் தண்டனை விதித்தது கீழ் கோர்ட். அதையே மும்பை உயர் நீதிமன்றமும் இப்போது உறுதி செய்திருக்கிறது. வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு மேல் முறையீட்டுக்குப் போனால், அங்கும் சட்டவிதிகளைப் பின் பற்றி உரிய நீதி வழங்கத்தான் போகிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், தீவிரவாதிகளை ஏவிவிட்ட பாகிஸ்தானிலோ, இது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் துவங்கக்கூட இல்லை. 'தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவியதற்கும், எங்கள் அரசாங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’ என்ற அடாவடி நிலைப்பாட்டில் மட்டுமே உறுதியாக இருக்கிறது பாகிஸ்தான்.

சட்டத்தை மதிப்பது இல்லை, அண்டை நாட்டுடன் நல்லுறவுகொள்வது இல்லை, உண்மை பேசுவது இல்லை, அமைதியின் மீது நம்பிக்கையே இல்லை என்ற கொள்கைகளை, தொடர்ந்து பாகிஸ்தான் கடைப்பிடித்து வருகிறது. 'மன்னன் எவ்வழியோ... மக்கள் அவ்வழி’ என்கிற பொன்மொழி அந்த நாட்டுக்குச் சுத்தமாகத் தெரியாதுபோல!

இந்தியாவைப் பொறுத்தவரை - நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு எந்த அளவு நம்பிக்கையும் மரியாதையும் அதிகரித்து வருகிறதோ... அதே அளவுக்கு அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கை வளர்ந்துகொண்டே போவதையும் மறுக்க முடியாது. மீனவர் களைச் சுட்டுத் தள்ளும் இலங்கை விஷயத்திலும் சரி, தீவிரவாதிகளை ஏவிவிடும் பாகிஸ்தான் விஷயத்திலும் சரி... அடிக்கடி சீண்டிக்கொண்டே இருக்கும் சீனா விஷயத்திலும் சரி... 'மயிலே மயிலே இறகு போடு’ என்ற அணுகுமுறையை மட்டுமே கடைப்பிடிப்பது உதவாது. சர்வதேச அரங்கில் வேண்டிய மட்டும் ஆதரவு திரட்டி, நமக்குத் தொல்லை தரும் நாடுகளுக்கு எதிரான நெருக்கடியை இந்திய அரசு உருவாக்க வேண்டும்.

'எவ்வளவு அடித்தாலும் இந்தியா தாங்கும்’ என்ற அபிப்ராயம் உருவாக இடம் கொடுப்பது, நமது எதிர்காலப் பாதுகாப்புக்குத் துளியும் நல்லது அல்ல!