Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
##~##

'ஒரு பெண்ணின் விருப்பத்தோடு பாலியல் உறவு நிகழும்பட்சத்தில், அவளுக்கு 16 வயது நிரம்பியிருந்தால், அது கிரிமினல் குற்றம் அல்ல’ என்று சட்டத் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முயற்சித்ததுமே, நாலாபுறமிருந்தும் எழுந்த எதிர்ப்புக் குரல்கள் அத்திருத்தத்தை முடக்கிப் போட்டிருக்கிறது!   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெண்ணின் சம்மதம் என்பது என்ன? சட்டத்தின் முன் யார், எப்படி அதை நிரூபணம் செய்வது? பொய்யான திருமண வாக்குறுதி கொடுத்து, பெண்களை வஞ்சிக்கும் ஆண்கள் தப்பிச் செல்லும் ஆபத்தை ஆரம்பத்திலேயே மத்திய அரசு உணர்ந்திருக்க வேண்டும். இதை உணர ஆளும் காங்கிரஸ் அரசு வேறெங்கும் சென்று பாடம் படித்திருக்கத் தேவையில்லை!  

ராஜ்யசபா துணைத் தலைவரும் 'புகழ்பெற்ற' காங்கிரஸ் புள்ளியுமான பி.ஜே.குரியனை மையம்கொண்டு, நாட்டையே உலுக்கிய சூரியநெல்லி பலாத்கார வழக்கின் எச்சரிக்கை மணியை மத்திய அரசு எப்படி கவனிக்கத் தவறியது?

18 வயது நிரம்பாத சிறுமியை அடுத்தடுத்து பலர் சின்னாபின்னம் செய்த அந்த விவகாரத்தில், ஆண்டுகள் பல உருண்டோடிய பிறகும் நீதி கிடைக்கவில்லை. அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பு அளித்த நீதிபதிகளில் ஒருவர், 'அதைப் பலாத்காரமாகக் கருத முடியாது. அந்தச் சிறுமியின் சம்மதத்தோடுதான் நடந்திருக்கிறது. எனவே, அதைக் குழந்தையை வைத்து நடந்த பாலியல் வியாபாரமாகவே பார்க்க வேண்டும்' என்று ஒரு ரகசிய உரையாடலின்போது சர்வ சாதாரணமாகச் சொல்ல... அது ஊடகங்களில் அம்பலமாகி, நாடே அதிர்ந்தது.  

மனித வல்லூறுகளால் கொத்திக் கிழிக்கப்பட்ட பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணின் மனக் காயத்துக்கு மருந்து போடவே இன்னும் நீதித் துறையில் சாத்தியங்கள் இல்லை. அதை முதலில் களைந்த பிறகு, வயது நிர்ணயத்துக்கு வரலாம் அரசு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism