

டீக்கடையில் தன் வாழ்க்கையைத் தொடங்கி ஒரு மாநில முதல்வராகி, அடுத்து பிரதமர் வேட்பாளராகவும் பேசப்படும் அளவுக்கு மோடி மஸ்தான் வித்தை தெரிந்தவர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• இவருக்கும் டீக்கடை என்றால் கொள்ளைப் பிரியம். அடிக்கடி பீகார், மத்திய பிரதேச, உத்தரப்பிரதேச டீக்கடைகளில் தென்படும் இவருக்குப் பிரதமர் ஆசை இல்லை என்கிறார். ஆனால், இவரது மனசாட்சியோ 'தம்பி டீ இன்னும் வரலை’ என்கிறது!

குஜராத்தில் நான்காவது முறையாக அரியணையில் கோலோச்சினாலும் கோத்ரா கரி இன்னும் முகத்தில் அப்பி இருப்பதை எந்த சோப் போட்டும் சுத்தம் செய்யவே முடியவில்லை!
• காங்கிரஸின் எதிர்காலம் என வர்ணிக்கப்படும் இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக ஆனது சாதனையாகச் சொல்லப்படுகிறது. ஊழலற்ற ஆட்சியைத் தொடந்து வழங்கப் பாடுபடுவதாகச் சொல்லிக் கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணுவதில் கில்லாடிக்கா ஜான் இவர்!

தாடி மீசை நரைத்தாலும் ஃபேஸ்புக், ட்விட்டரில் ஹிட்டடிக்கும் இவர் மேக்-அப் மற்றும் கெட்-அப்புக்காகவே அதிகம் மெனக்கெட்டு பவர் ஸ்டாரைப்போல இமேஜை மெய்ன்டெய்ன் பண்ணுகிறார்!
• ரவுல் வின்ஸி (அதான் ஒரிஜினல் பெயர்)யின் வயது தற்போது 42. ஆனாலும் இந்திய இளைஞர் காங்கிரஸின் தலைவராக கிராமம் கிராமமாக விசிட் அடிக்கிறார். இப்போதெல்லாம் அமேதித் தொகுதி ஏழை மக்கள் எந்த நேரத்திலும் 'எங்கே இவர் தன் வீட்டுக்கு ராத்திரி சாப்பிட வந்துவிடுவாரோ... வீட்டில் வெஞ்சனம் இல்லையே’ என அமைதியைத் தொலைத்து விசனப்பட்டுக்கிடக்கிறார்கள்!

என்னதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லப்பட்டாலும் 'எங்க ஏரியா உள்ளே வராதே’ என்று அமெரிக்கா பாட்டுப் பாடி, விசா மறுப்பதால் விசனப்படுபவர்!
• அவரை அமெரிக்கா உள்ளே விடவில்லை என்றால், இவரது கட்சி அமெரிக்காரர்களை 'டிஃபன் சாப்பிட்டீங்களாண்ணா, காபி சாப்பிட்டீங்களாண்ணா?’ என்று உள்ளே விட்டுக் குசலம் விசாரிக்கிறது!

காந்தி பிறந்த மாநிலத்தில் மதுவிலக்கு மட்டும்தான் காந்திக்குப் பெருமை சேர்க்கிறது. கிராமத் தொழில்களுக்கு ஆப்பு வைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கதவு திறப்பது, மதக் கலவரத்தை முன்னின்று நடத்தியது என்று காந்தி பிறந்த மண்ணில் காந்தியின் கொள்கை கள் மீது மண் அள்ளிப்போட்ட புண்ணியவான்!
• 'காந்தினு என் பெயரில் இருக்கு... நானும் காந்தியவாதிதான் நானும் காந்தியவாதிதான்!’ என வான்ட்டடாகத் தன்னை அறிவித்துகொள்ளும் சிரிப்பு காந்தி இவர்!