Published:Updated:

அழகிரி பிரதமர் ஆனால்...

அழகிரி பிரதமர் ஆனால்...

அழகிரி பிரதமர் ஆனால்...

அழகிரி பிரதமர் ஆனால்...

Published:Updated:
அழகிரி பிரதமர் ஆனால்...

ட்சித் தலைவர் பதவிக்கும் வருங்கால முதல்வர் பதவிக்கும் சதா ஸ்டாலினுடன் மல்லுக்கட்டும் அழகிரியைப் பிரதமராக்கினால் என்ன என்று தோன்றியது. ஒரு எம்.எல்.ஏ-வை ஜெயிக்கவைக்கவே 50 கோடி ரூபாய் தேவைப்படும் இந்தக் காலத்தில், வெறும் 5 ரூபாய் செலவில் அழகிரி அண்ணனைப் பிரதமராக்கி அழகு பார்ப்பதில் பெருமிதம்கொள்கிறது நம்ம 'டைம் பாஸ்’ இதழ். (ஜோரா எல்லோரும்  கைதட்டுங்க!)

ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் வீட்டில் அவர் குடியேறும் முன்பே, லட்சக்கணக்கான ஃப்ளெக்ஸ் போர்டுகள் டெல்லியில் குடியேறிவிடும். சிலர் தப்புத்தப்பான ஹிந்தியில் அண்ணனை வாழ்த்தி போஸ்டர் ஒட்டுவார்கள். "அண்ணே, டெல்லி மேயரும், 107 கவுன்சிலர்களும் உங்களை வரவேற்று போஸ்டர் ஒட்டலைண்ணே" என்று போட்டுக் கொடுக்க பக்கத்திலேயே ஒருவர் இருப்பார். என்னதான் கருப்புப் பூனைப் படை பாதுகாப்பு இருந்தாலும்கூட, பிரதமரின் வீட்டின் எதிர் வீட்டை வாடகைக்கு எடுத்து அட்டாக் பாண்டியின் ஆட்கள் அழகிரியின் பாதுகாப்புக்காகத் தங்குவார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரப்போகும் பிறந்த நாளுக்காக இப்போதே, செங்கோட்டை, தாஜ்மகால் என்று எல்லாவற்றிலும் கறுப்பு சிவப்பு நிறத்தில் சுவர் விளம்பரம் எழுதுவார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரே நாளில் டெல்லி இன்னொரு மதுரையாக நாறும், ஸாரி, மாறும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தமிழில்தான் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக்கொள்வேன்" என்று அடம்பிடிப்பார் அண்ணன். அவரது 'தமிழ்ப்பற்றை' பார்த்து உலகத் தமிழர்கள் வியந்துபோவார்கள். அட்டாக் பாண்டிக்குச் செய்து கொடுத்த சத்தியத்தின்படி, அவர் உள்துறை அமைச்சர் ஆவார். மன்னன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆவார். (அப்போ இந்தியா என்ன ஆகும் என்று கேட்கக் கூடாது!) சபாநாயகர் பதவியில் தீப்பொறி ஆறுமுகம் அமர்த்தப்படுவார். கூட்டத்தில் கரைச்சல் கொடுக்கிற எதிர்க் கட்சி எம்.பி-க்களை டபுள் மீனிங்கில் பேசியே உட்காரவைப்பார் ஆறுமுகம்.

டெல்லியில் வாக்கிங் போகவே தலைவர்கள் பயப்படுவார்கள். ஜெயலலிதாவைப் போலவே, பிரதமர் அழகிரியும் பத்திரிகையாளர் சந்திப்பே நடத்த மாட்டார். அதனால் மதுரைக்குப் போகும் வழியில்

அழகிரி பிரதமர் ஆனால்...

விமானநிலையத்தில் வழி மறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்பார்கள். "பாகிஸ்தான் பிரச்னையைப் பற்றி...." என்று கேட்கும்போதே, "அதைப் போய் பாகிஸ்தான் பிரதமர்கிட்ட கேளுய்யா... என்கிட்ட எதுக்குக் கேட்கிற?" என்று 'அன்பாகப்’ பதில் சொல்வார் அண்ணன்.

சுதந்திர தின அணிவகுப்பில் கூலிப் படை அணிவகுப்பும் இடம்பெறும். இமயமலையில் கிரானைட் குவாரிகள் தொடங்கப்படும். 'கிளவுட் நைன்' நிறுவனம் பாலிவுட் படங்களையும் தயாரிக்க ஆரம்பிக்கும். தயா டி.வி., தயா நியூஸ், தயா காமெடி என்று சுமார் 20 சேட்டிலைட் சேனல்கள் தொடங்கப்படும். அந்த டி.வி-க்களுக்கு புத்தம் புதிய பாலிவுட் படத்தின் சேட்டிலைட் உரிமையை விற்க மறுத்தால், மறுநாளே திருட்டு வி.சி.டி. மூலம் அந்தப் படம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பவர்களைப் போல, இந்திய கிரிக்கெட், கபடி, ஹாக்கி அணியினர் எல்லோரும் மஞ்சள் நிறத்தில் அண்ணன் படம் போட்ட டி-சர்ட்தான் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்படும். இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக தயாநிதி அழகிரி நியமிக்கப்படுவார். அவருக்கு பவுன்ஸர் வீசும் வெளிநாட்டு பௌலர்கள் மைதானத்திற்குள்ளேயே நையப்புடைக்கப்படுவார்கள். அவுட் கொடுத்த அம்பயருக்கு அல்லையில் குத்து விழும்.

தமிழ்நாட்டில், ஸ்டாலின் ஆதரவாளர்கள் அதிகரித்தால், அது தனி நாடாக அறிவிக்கப்பட்டு, (ஆனால், மதுரை மட்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும்) அந்த நாட்டுக்காரர்களுடன் இந்தியர்கள் யாரும் அன்னம் தண்ணி புழங்கக் கூடாது என்று உத்தரவிடப்படும். தேர்தல் நேரத்தில், லாரிகளில் ஹார்லிக்ஸ் டப்பாக்கள் மாயமாகும். தேர்தல் பிரசார நேரத்தில் சல்மான்கானில் இருந்து மம்முட்டி வரை எல்லோரும் நல்ல விலைக்கு வாங்கப்படுவார்கள். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அவர்கள் பாவம், பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கிக்கிடப்பார்கள்.

எப்பா, நினைச்சுப் பார்த்தாலே திகிலா இருக்கேப்பா!

கற்பனை: சூனியக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism