Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கு.முருகானந்தம், பருத்திக்குடி.

கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

நேரு - காமராஜர், ராஜீவ் - மூப்பனார், சோனியா - ஜி.கே.வாசன்... ஒப்பிடுங்​களேன்?

நேரு தன்னைவிடப் பெரியவராக பெருந்தலைவரை மதித்தார். ராஜீவ், மூப்பனாரைத் தனக்குச் சமமாக நினைத்தார். சோனியா, ஜி.கே.வாசனை மட்டுமல்ல யாரையும் அப்படி நினைப்பதும் இல்லை. முக்கியத்துவம் தருவதும் இல்லை. பொதுவாகவே மாநிலங்களில் தனிச் செல்வாக்கு உள்ள மனிதர்கள் வளர்வதை அகில இந்தியத் தலைமை விரும்புவது இல்லை. அது ஜி.கே.வாசனுக்கும் பொருந்தும்.

 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் காலியான தி.மு.க-வின் இடத்தை அ.தி.மு.க. நிரப்ப வாய்ப்பு இருக்கிறதா?

இல்லை!

காங்கிரஸ் கூட்டணியில் ஜெயலலிதா சேருவதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்கூட, 'காங்கிரஸுடன் கூட்டணி வைப்பது சரியல்ல’ என்று ஜெயலலிதா முடிவெடுத்தார். அவரது இந்த மனநிலை தொடர்வதாகவே தெரிகிறது.

 சொ.ஆகாஷ், ரோஸ்மியாபுரம்.

கழுகார் பதில்கள்!

பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணி உருவாக சுப்பிரமணியன் சுவாமி பாடுபடுவதாகச் சொல்கிறார்களே?

பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்​மையினர் வாக்கு குறையும் என்று ஜெயலலிதா நினைக்கிறார். எனவே, தேர்தலுக்குப் பிறகு ஆட்சியை அமைக்கும் நிலையை பி.ஜே.பி. அடைந்தால், அப்போது அவர்களை ஆதரிக்க ஜெயலலிதா முயற்சிப்பார் என்பதே இன்றைய நிலைமை.

 க.சுல்தான் ஸலாஹீத்தீன் மழாஹிரி, காயல்பட்டினம்.

கழுகார் பதில்கள்!

மத்திய அரசுக்கு தி.மு.க. ஆதரவை வாபஸ் வாங்கியதால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?

##~##

மத்தியில் ஆளும் கட்சி என்ற உற்சாகத்துடன் செயல்பட்டு வந்த தி.மு.க-வுக்கு இதனால் நஷ்டம்.

தி.மு.க. பலவீனம் அடைவது ஜெயலலிதாவுக்கே லாபம்.

 காந்திலெனின், திருச்சி.

கழுகார் பதில்கள்!

இவ்வளவு போராட்டத்துக்குப் பிறகும் மத்திய அரசு ஈழப் பிரச்​னை​யைக் கண்டுகொள்ளாதது ஏன்?

ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்கும் திட்டம் முதலில் காங்கிரஸ் அரசுக்கு இல்லை. மாணவர்கள் போராட்டத்துக்குப் பிறகு​தான் அத்தகைய முடிவை எடுத்தனர். எனவே இது மாணவர் போராட்டத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி​தான்.

 புயல் சிவக்குமார், பவித்திரமாணிக்கம்.

கழுகார் பதில்கள்!

'பிரதமர் ஆகும் கனவு எனக்கு இல்லை’ என்று மோடி பேசி வருகிறாரே?

'நான்தான் பி.ஜே.பி-யின் பிரதமர் வேட்பாளர்’ என்று மோடி சொன்னால், அந்தக் கட்சிக்குள்ளேயே பலரும் கட்டையைப் போடத் தயாரா​வார்கள். எனவே மோடி உஷா​ராகப் பேசுகிறார்.

 பி.சூடாமணி, ஸ்ரீரங்கம்.

கழுகார் பதில்கள்!

மாணவர் போராட்டம், உண்ணா​விரதம் ஆகியவற்றைத் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது எதனால்?

வேடிக்கை பார்க்கவில்லை. அதற்காக, அராஜ​கமாகத் தடுக்கும் காரியத்தையும் பார்க்கவில்லை. மதுரையில் மட்டும் ஒரு போலீஸ் அதிகாரி துடுக்குத்தனமாக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்.

மாணவர்கள், போலீஸ் அனுமதி வாங்கியே போராட்டம் நடத்தினார்கள். உண்ணாவிரதம், அவர்களது கல்லூரி வளாகத்துக்குள் நடத்தினார்கள். வன்முறைச் சம்பவங்கள் பெரிய அளவில் எங்கும் நடக்காததால், போலீஸார் அமைதியாக இருந்தனர்.

இது மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்பதால், தமிழக அரசு அமைதியாக இருக்க முடிவெடுத்திருக்கலாம். ஆனால், லயோலா மாணவர் உண்ணாவிரதப் பந்தலுக்குள் போலீஸ் அதிரடியாக உள்ளே நுழைந்தது தமிழக அரசுக்குக் களங்கம்தானே!

 எஸ்.தியாகராஜன், மதுரை-2.

கழுகார் பதில்கள்!

'பொது என்ற சொல்லே நல்ல சொல் இல்லை’ என்று கருணாநிதி சொல்லி இருக்கிறாரே?

தன்னை நோக்கி வந்த கேள்வியில் பதில் சொல்லாமல் தப்பிப்பதற்காக கருணாநிதியின் சமாளிப்பு. கருணாநிதியை நோக்கி, '2009-ம் ஆண்டு போர் நடந்தபோது நீங்கள் எதுவும் செய்யவில்லை என்று பொதுவான ஒரு கருத்து சொல்லப்படுகிறதே?’ என்று ஒரு நிருபர் கேட்கிறார். '2009-ம் ஆண்டு நடந்த போரைத் தடுக்க நான் முயற்சித்தேன்’ என்றோ அல்லது, 'என்னுடைய கைகளை காங்கிரஸ் அரசு கட்டிப் போட்டுவிட்டது’ என்றோ கருணாநிதி சொல்லி இருக்க வேண்டும். அதைவிடுத்து, அந்த நிருபர் பயன்படுத்திய ஒரு வார்த்தையைப் பிடித்துக் கொண்டு 'பொது என்ற சொல்லே நல்ல சொல் இல்லை’ என்ற புதுக் கருத்தை கருணாநிதி உதிர்த்தார்.

பொதுமக்கள், பொது வாக்கெடுப்பு, பொதுப் புத்தி ஆகியவை வழக்கத்தில் இருக்கும் வார்த்தைகள்​தான்.

 மா.ஜெகதீசன், சீர்காழி.

கழுகார் பதில்கள்!

ஐ.நா-வில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்தால் மட்டும் இலங்கை வாழ் சொந்தங்களின் உரிமை நிலைநாட்டப்பட்டுவிடுமா?

ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்​கள் என்பதை தமிழ்நாட்டில் சொல்லி வந்தோம். புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் அங்கு போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஆனாலும் அதனை இலங்கை அரசாங்கம் மறுத்தும், மறைத்தும் வந்தது. ஐ.நா-வில் தீர்மானம் கொண்டுவந்ததன் மூலமாக உலக நாடுகள் பலவும் ஈழத்தில் கொடுமை நடந்ததை ஒப்புக்கொண்டன. 25 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்ததன் மூலமாக ஈழத் தமிழர் விவகாரம், உலகப் பிரச்னையாக மாற்றப்பட்டுள்ளது.

இதனால் ராஜபக்ஷேவுக்குத் தண்டனை கிடைக்கும், இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்கப்படும், என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் உலகத்தின் மனசாட்சிக்கு முன்னால் குற்றவாளிக் கூண்டில் ராஜபக்ஷேவை நிறுத்துவதற்கு இது அடித்தளம் அமைத்துள்ளது.

 எம்.கிக்கேல்ராஜ், சாத்தூர்.

கழுகார் பதில்கள்!

'இந்தியாவில் உள்ள இத்தாலியர் உஷாராக இருக்க வேண்டும்’ என்று இத்தாலி தூதரகம் அறிவுறுத்தி இருப்பது பற்றி?

சோனியாவுக்கு மறைமுகமாக ஏதாவது சேதி சொல்கிறார்களோ?

 ச.கார்ல் மார்க்ஸ், சிவகாசி மேற்கு.

கழுகார் பதில்கள்!

'அதுதான் தமிழனுடைய தலையெழுத்து’ என்கிறாரே கருணாநிதி?

இப்படி எல்லாம் கேட்டுத் தலை ஆட்டுவதே தமிழனுடைய தலையெழுத்துதானே!

கழுகார் பதில்கள்!