Published:Updated:

மிஸ்டர் கழுகு: கனி கட்... அழகிரி ஜூட்...

மிஸ்டர் கழுகு: கனி கட்... அழகிரி ஜூட்...

மிஸ்டர் கழுகு: கனி கட்... அழகிரி ஜூட்...
##~##

ழுகார் நுழைந்ததும், ''ஸ்டாலின், அழகிரி, கனிமொழி மூவரின் படங்களையும் எடுத்து​வைத்துக்கொள்ளும்'' என்று உத்தரவு போட்டார். தலை அசைத்துக் காத்திருந்தோம். 

''முதலில் கனிமொழி மேட்டரில் இருந்து ஆரம்பிக்கிறேன். கடந்த 23-ம் தேதி திண்டிவனத்தில் கனிமொழி கலந்துகொள்ளும் கூட்டம் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதனைக் கட்டாயப்படுத்தி கேன்சல் செய்யவைத்துவிட்டார்கள். 'ஸ்டாலின் தடை செய்துவிட்டார்’ என்று ஒரு தரப்பும், 'ஸ்டாலின் பெயரைச் சொல்லி பொன்முடி தடைபோட்டுவிட்டார்’ என்று இன்னொரு தரப்பும் பரப்பினர்.''

''நிஜம் என்ன?''

''விழுப்புரம் மாவட்ட தி.மு.க. கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் சார்பில்தான் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்​பட்டது. எம்.டி.முத்து, எம்.டி.பாபு ஆகிய இருவரும்தான் இந்தக் கூட்டத்தை ஏற்பாடுசெய்தவர்கள். முத்து, திண்டிவனம் நகர இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர். மாவட்டத் துணை அமைப்பாளராக இருக்கிறார் பாபு. சகோதரர்களான இவர்கள் இருவரும் கனிமொழியின் ஆதரவாளர்கள். அதாவது பொன்முடியால் துரத்தப்பட்டவர்கள். இப்படி ஒரு கூட்டம் 23-ம் தேதி நடக்க

மிஸ்டர் கழுகு: கனி கட்... அழகிரி ஜூட்...

இருப்பது தெரிந்த பொன்முடி, கருணாநிதியைச் சந்தித்து, 'என்னுடைய ஊரில், எனக்குத் தெரியாமல், என்னுடைய அனுமதி இல்லாமல், ஒரு கூட்டம் நடத்துகிறார்கள். அதற்கு கனிமொழியும் வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியானால் மாவட்டத்தில் எனக்கு என்ன மரியாதை?’ என்று கேட்டுள்ளார். 'மாவட்டச் செயலாளரிடம் அனுமதி வாங்கவில்லை என்றால், கூட்டம் நடத்த வேண்டாம்’ என்று கருணாநிதியும் பொதுவாகச் சொல்லி இருக்கிறார். இந்தத் தகவல் கனிமொழி காதுக்குச் சென்றது. அவர் கருணாநிதியிடம் பேச, 'ஸ்டாலினிடம் நீயே பேசு’ என்று சொல்லி இருக்கிறார். ஸ்டாலினிடம் கனிமொழி பேச, 'பொன்முடி ரொம்ப வருத்தப்படுறார்’ என்று அவர் சொல்ல, 'அப்படின்னா நான் அந்தக் கூட்டத்துக்குப் போகலை’ என்று இவர் பதில் சொல்ல... கூட்டம் கேன்சல் செய்யப்பட்டது.''

''பொன்முடியிடம் அனுமதி வாங்காதது தவறுதானே?''

''ஒரு மாதத்துக்கு முன்பே பொன்முடியிடம் அனுமதி வாங்கிவிட்டார்களாம். '23-ம் தேதி மாவட்டக் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் சார்பில் கூட்டம் நடத்த இருக்கிறோம்’ என்று மட்டும் சொன்னார்களாம். 'தளபதி வர இருக்கிறார். அவர் வந்து சென்ற பிறகு கூட்டம் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று பொன்முடி சொன்னாராம். 'தளபதி வருவது 14-ம் தேதி... நாங்க நடத்துவது 23-ம் தேதிதான்’ என்று சொல்லி இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்துள்ளன. கனிமொழி படத்துடன் ஸ்டாலின், பொன்முடி படங்களையும் வைத்துதான் கட் அவுட்டுகள் மின்னின. இந்த ஏற்பாடுகளைப் பார்த்த சிலர், 'ரொம்ப பிரமாண்டமா ஏற்பாடு பண்றாங்க... நம்மை மிஞ்சும் அளவுக்கு ஏற்பாடு பண்றாங்க’ என்று பொன்முடியிடம் போட்டுக்கொடுத்துள்ளார்கள். இதைத் தொடர்ந்து 22-ம் தேதி காலையில் பொன்முடியை இந்த விழா ஏற்பாட்டாளர்கள் போய் சந்திக்கச் சென்றுள்ளார்கள். அப்போதே வார்த்தைகளால் கொத்திக் குருமா போட்டுவிட்டாராம் பொன்முடி. 'என்னை மீறி கூட்டம் நடத்தக் கூடாதுன்னா, நடத்தக் கூடாது. இதை யார்கிட்ட வேண்டுமானாலும் சொல்’ என்று கர்ஜித்து அனுப்பிவிட்டாராம். மறுநாள்தான், கருணாநிதியிடம் போய் 'என்னிடம் அனுமதி வாங்கவில்லை’ என்று காரணம் சொன்னாராம்!''

''அ.தி.மு.க. அரசின் அராஜகத்தைக் கண்​டித்து இந்தப் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்களாம். திடீரெனக் கூட்டம் ரத்தானதால், சுமார் 15 லட்சம் ரூபாய் வீணாகிவிட்டது என்றும் புலம்புகிறார்கள். முன்னாள் திண்டிவனம் நகர இளைஞர் அணி அமைப்பாளர் எம்.டி.முத்து, ' தி.மு.க. கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் விழுப்புரம் மாவட்டத் துணை அமைப்பாளராக என் தம்பி எம்.டி.பாபுவை, கனிமொழி கடந்த மாதம் நியமித்தார். இந்தப் பேரவை சார்பாக அ.தி.மு.க. அரசின் அராஜகப் போக்கைப் கண்டித்து பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தோம். அவரும் தேதி கொடுத்தார்.  கனிமொழி கையால் 2000 பேருக்கு வேட்டி சேலை, குழந்தைகளுக்கு தங்க மோதிரம் எனப் பல உதவிகளை அறிவித்திருந்தோம். மாநாடுபோல மேடை அமைத்து, 3 கிலோ மீட்டருக்கு பேனர்கள் வைத்திருந்தோம். 15 லட்சம் ரூபாய் வரை செலவு.  ஆனால், கடைசி நேரத்தில் கனிமொழி அலுவலகத்தில் இருந்து போன் செய்தவர்கள், 'மேடம் இன்று வர மாட்டார்’ என்று கூறினார்கள். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.’ என்று புலம்ப ஆரம்பித்துள்ளார்.''

மிஸ்டர் கழுகு: கனி கட்... அழகிரி ஜூட்...

''அப்படியா?''

''ஸ்டாலினாவது, 'நான் பொன்முடியிடம் சொல்லிக்கொள்கிறேன். நீ போய் வா’ என்று கனிமொழியிடம் சொல்லியிருக்க வேண்டும். கருணாநிதி, இரண்டு தரப்பையும் அழைத்துப் பேசி இருக்கலாம். சிலரின் ஈகோவுக்கு கட்சிக்காரனின் எனர்ஜி தேவையில்லாமல் வீணாகிறது என்று புலம்புகிறார்கள். 'அன்றைய மாவட்டச் செயலாளரான செஞ்சி ராமச்சந்திரனின் அனுமதி இல்லாமல், அவரின் சொந்த ஊருக்கே தலைவர் கலைஞரை அழைத்துச் சென்றவர் பொன்முடி. இன்று அவரே ரூல்ஸ் பேசுகிறார்’ என்கிறார்கள் கட்சியில்!''

''கூட்டுறவுத் துறையில் ஒரு கமென்ட் உண்டு. 'ஆளைச் சொல்லு... ரூல்ஸைச் சொல்றேன்’ என்று. அப்படி ஆகிவிட்டது கட்சி. கவலைப்பட வேண்டியது ஸ்டாலின்தானே!''

மிஸ்டர் கழுகு: கனி கட்... அழகிரி ஜூட்...

''ம், அடுத்து அழகிரி மேட்டருக்கு வருகிறேன்! காங்கிரஸ் கூட்டணியில் இருந்தும், அமைச்சரவையில் இருந்தும் வெளியேறியதில் அழகிரிக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை என்பதைக் கடந்த முறை உமக்குச் சொல்லி இருந்தேன். பிரதமரைச் சந்தித்த அழகிரி, இதனை அவரிடம் வெளிப்படையாகச் சொன்னதையும் சொன்னேன். இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனை அவரது வீட்டுக்குச் சென்று அழகிரியும் நெப்போலியனும் சந்தித்துள்ளது தி.மு.க. வட்டாரத்தில் கடுப்பைக் கிளப்பியுள்ளது. 'தலைவர் இந்த முடிவைத் தீர்க்கமான மனதோடு எடுக்கவில்லை. ஸ்டாலின் கட்டாயப்படுத்தியதால்தான் எடுத்துள்ளார்’ என்று அப்போது வாசனிடம் அழகிரி சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே காங்கிரஸ் மேலிடத்துடன் மனக்கசப்புடன் இருக்கும் வாசன், இதனைத் தலையாட்டிக் கேட்டுக்கொண்டாராம். எந்தக் கருத்தும் சொல்லவில்லையாம். இத்தகைய சூழ்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை வந்து இறங்கினார் அழகிரி. இரவு விமானத்தில் வந்ததால், விமானநிலையத்தில் அதிகமான நிருபர்கள் இல்லை. யாரோ ஒருவர் மட்டும், ஸ்டாலின் வீட்டில் நடந்த ரெய்டு பற்றிக் கேட்டதாகவும், 'அதுனால எனக்கென்ன?’ என்று சொல்லிவிட்டு அவர் சென்றதாகவும் சொல்கிறார்கள். 24-ம் தேதி சென்னையில் இருந்த அழகிரி, கருணாநிதியை சந்தித்து  ஒருமணி நேரம் அவருடன் இருந்திருக்கிறார்.அப்போது, தனது மனவருத்தங்கள் அனைத்தையும் கொட்டி இருக்கிறார். மறுநாள் 25-ம் தேதி கட்சியின் செயற்குழு அண்ணா அறிவாலயத்தில் கூடியது. அதற்கு அழகிரி வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அன்று காலை 8.30 மணிக்கு மதுரைக்கு ஃப்ளைட் பிடித்துப் பறந்துவிட்டார்.''

''ஒரு முடிவோடு இருப்பதாகவே தெரிகிறதே?''

''அழகிரி பாய்காட் பண்ணும் மூன்றாவது கூட்டம் இது. 'அவர் வந்தால்தானே தொந்தரவு? வராவிட்டால், எங்களுக்கு என்ன நஷ்டம்?'' என்று ஸ்டாலின் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் சொல்கிறார்கள். 'இவங்களே முடிவு எடுத்துப்பாங்க. அந்த முடிவை எல்லாரும் ஓகே பண்ணிட்டதாக் காட்டிக்க இவங்களே செயற்குழு நடத்துவாங்க. கட்சி எடுக்கிற எந்த முடிவுக்கும் சம்பந்தம் இல்லாத பெருசுங்க வரிசையா எல்லா ஊர்ல இருந்தும் வருவாங்க. ஆண்டி மடம் மாதிரி நடக்கிற கூட்டத்துக்கு நாம எதுக்குப் போகணும்?’ என்று அழகிரி சொன்னதாக அவரது ஆட்கள் சொல்லிச் சிரிக்கிறார்கள். அழகிரி வராவிட்டாலும் அவரது இடதும் வலதுமான மூர்த்தியும் மன்னனும் செயற்குழுவுக்கு வந்தார்கள். ஆனால், நெப்போலியன் வரவில்லை!''

''குஷ்பு வந்தாரா?''

மிஸ்டர் கழுகு: கனி கட்... அழகிரி ஜூட்...

''வந்தார்... மஞ்சள் சேலையில்! கனகம்பீரமாக முன்வரிசையில் அமர்ந்திருந்தார்!''

''பேசினாரா?''

''இல்லை, யாரையும் பேசவிடவில்லை. 16 தீர்மானங்கள் மொத்தம் 32 பக்கங்கள் என்பதால் அதை வாசிப்பதற்கு மட்டுமே ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. கருணாநிதிக்கு தொண்டை சரியில்லை என்று சொல்கிறார்கள். அதனால், அவர் பேசவில்லை. அன்பழகன் பேசும்போது, 'தலைவருக்கு தொண்டையும் சரியில்லை... மனதும் சரியில்லை’ என்று சொல்லித்தான் தனது பேச்சை ஆரம்பித்திருக்கிறார். 'ஈழத் தமிழர் பிரச்னை என்பது நம்முடைய உணர்வோடு கலந்த விவகாரம். அதைக் கைகட்டி நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. தமிழ் உணர்வு, தமிழர் இன உணர்வு நமக்கு மங்கிப்போய்விடவில்லை. திராவிட நாடு பிரிவினை கேட்டவர் அண்ணா. அந்த பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்ட அண்ணா, 'பிரிவினையைக் கைவிட்டோமே தவிர, பிரிவினை கேட்பதற்கான காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன’ என்று சொல்லி இருக்கிறார். அத்தகைய உணர்வை நாம் இழந்துவிட மாட்டோம். அந்த உணர்வுடன்தான் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து நாம் வெளியில் வந்தோம். இதனை அனைவரும் மனப்பூர்வமாக ஏற்கவேண்டும். இதனை யாராவது ஏற்க மறுத்தால் அண்ணன் என்ன, தம்பி என்ன, மாமன் என்ன, மச்சான் என்ன என்று பார்க்காமல் யாராக இருந்தாலும், தூக்கி எறிய வேண்டியதுதான்’ என்று கர்ஜித்துவிட்டு உட்கார்ந்து​விட்டாராம்அன்பழகன்!''

''ஸ்டாலின் பேச்சில் ஹைலைட் என்ன?''

''கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கான காரணங்களை ஸ்டாலின் அடுக்கினார். சில்லறை

மிஸ்டர் கழுகு: கனி கட்... அழகிரி ஜூட்...

வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டைப் புகுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டபோதே நாம் கடுமையாக எதிர்த்தோம். சில்லறை வர்த்தகர்கள் பாதிக்கப்படாத அளவுக்கு சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். சரி என்று தலை ஆட்டியவர்கள் அதனைச் செய்யவில்லை. அப்படித்தான் இலங்கைத் தமிழர் விவகாரத்திலும் நடந்துகொண்டார்கள். இலங்கைத் தமிழர்களுக்காக அதிக அளவில் மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்திய கட்சி தி.மு.க. எனவே, நாம் சில விஷயங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூட்டணிக் கட்சி என்ற முறையில் காங்கிரஸ் தலைமையிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் அதனை அவர்கள் செய்துதரத் தயாராக இல்லை. எனவே, அவர்களை நிராகரித்தோம். கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக அவர்கள் செய்வதற்கு நாம் தலை ஆட்டினால், முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கான பழி நம் மீதும் விழுந்துவிடும். இரண்டு முறை நாம் ஆட்சியை இழந்த கட்சி. நம்மைப் பார்த்துப் பழி சொல்பவர்கள் தமிழ் ஈழத்துக்காக இலங்கைத் தமிழர்களுக்காக என்ன செய்தார்கள்? தமிழீழம் வாங்கித் தருவேன் என்று சொல்லிய ஜெயலலிதா வாங்கிக் கொடுத்துவிட்டாரா? எல்லாவற்றுக்கும் நம்மைக் குறை சொல்பவர்கள் தமிழீழம் வாங்கித் தந்துவிட்டார்களா?’ என்று கேட்டிருக்கிறார். 'எல்லாமே நாம் போட்ட தீர்மானத்தில் இருக்கிறது. அதனைப் படித்தாலே முழுமையாகப் புரியும். அதனை மக்களிடம் பிரசாரம் செய்யுங்கள்’ என்று அன்பழகனும் ஸ்டாலினும் சொல்லி முடித்திருக்கிறார்கள்!''

''கூட்டணி சம்பந்தமான பேச்சு ஏதும் இல்லையா?''

''இல்லை! ஆனால் அன்பழகன் பேசும்போது, 'அதற்காக மதவாதக் கட்சிகள் ஆட்சியில் அமைய உறுதுணை புரிவோம் என்று அர்த்தமல்ல’ என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லி இருக்கிறார். 'தேர்தல் நெருக்கத்தில் ஒருவேளை காங்கிரஸுடன் கூட்டணி அமைந்​தாலும் ஆச்சர்யப்பட முடியாது’ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஸ்ரீபெரும்புதூரில் இரண்டு நாட்களுக்கு முன் பேசிய ஸ்டாலின், 'இனி காங்கிரஸுடன் கூட்டணியே கிடையாது’ என்று சொல்லி இருக்கிறார். ஸ்டாலின், இந்த விஷயத்தில் தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது'' என்று சொன்னவர், ''பேராசிரியர் பேச ஆரம்பித்தபோது, 'கழகத்தின் நிரந்தரத் தலைவர்’ என்று கருணாநிதியையும், 'கழகத்தின் நிதானமான பொருளாளர்’ என்று ஸ்டாலினையும் குறிப்பிட்டார்'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்