Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
##~##

சுயநலமோ அரசியல் லாபமோ அறவே இன்றி, முழுக்க முழுக்க மனிதநேய உணர்வோடு நடந்த மாணவர் போராட்டம் - புதிய நம்பிக்கைகளுக்கான ஆரம்பம். சம்பிரதாயமான 'ஐ.நா. தீர்மான நிறைவேற்றத்தோடு’ மாணவர்கள் திருப்தி அடைந்துவிடக் கூடாது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனைத்து மாநிலங்களுக்கும் போராட்டக் குழுப் பிரதிநிதிகள் பயணிக்க வேண்டும். 'இலங்கைப் பிரச்னை என்பது தமிழ்நாட்டு மக்களை மட்டுமே வாட்டும் உணர்வுத் தீ அல்ல... மத்திய அரசின் கொடுமையான பாராமுகத்தை ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களும்  எதிர்க்கிறார்கள்' என்ற நிலையைப் போராட்டக் குழுவினர் ஏற்படுத்த வேண்டும். 'மொழியால், இனத்தால், மாநில எல்லைகளால் மக்கள் பிரிந்து நிற்கிற வரையில், சுலபமாக அவர்களைப் பிரித்தாள முடியும்’ என்ற மத்திய அரசின் நினைப்பைத் தூள் தூளாக்க வேண்டும்.

பேயாட்டம் போட்டு பல லட்சம் உயிர்களைக் கொன்ற இலங்கை அரசும்கூட, 'தமிழர்கள், இந்தியாவில் ஒரு தனித் தீவு' என்ற எண்ணத்தால்தான் திமிர் அடங்காமல் தொடர்ந்து வெட்டி நியாயம் பேசுகிறது. தமிழகத் தலைநகர் சென்னையில் இருக்கும் தங்கள் நாட்டுத் துணை தூதரகத்துக்கு எதிராகத் தொடர்ந்து வெடிக்கும் போராட்டங்களில் இருந்து தப்புவதற்காக, அந்தத் துணைத் தூதரகத்தைக் கேரள மாநிலத்துக்கு மாற்றலாமா என்று இலங்கை அரசு யோசிப்பதாக வரும் செய்திகளே இதற்குச் சான்று.

எனவே, 'தமிழனின் இதய வலி - ஒட்டுமொத்த இந்தியர்களின் வலி. தமிழனின் எதிரி - அனைத்து இந்தியர்களுக்கும் எதிரி' என்று இலங்கை அரசுக்கும் மத்திய அரசுக்கும் காட்ட வேண்டிய மாபெரும் கடமை மாணவர்களுக்கு இருக்கிறது. சமூக வலைதளத்தின் உதவியோடு, ஒரு திரைப்படத்தின் 'கொலவெறி' பாடலையே கோடிக்கணக்கானவர்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல முடியும் என்கிறபோது... இலங்கை அரசின் ஈவு இரக்கமற்ற நிஜக் 'கொலைவெறி'யை - மாணவன் நினைத்தால் இந்தியா முழுமைக்கும் வலுவோடு எடுத்துச் சொல்ல முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism