Published:Updated:

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவித்து, பள்ளிகளில் கற்றுக் கொடுக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்.

திருவனந்தபுரம்: பள்ளிகளில் முதல் வகுப்பிலேயே பகவத் கீதை மற்றும் மகாபாரதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி தவே கூறியுள்ள கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். -சின் கலாச்சார அமைப்பின் இயக்குனர் பி. பரமேஸ்வரன், அதனை தேசிய நூலாகவும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதி  தவே அண்மையில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில், "ஒவ்வொருவரிடமும் நல்ல குணங்களை வெளிகொண்டு வரும்போது, வன்முறையை தடுக்க முடியும். இதற்காக பள்ளிக்கூடங்களில் முதல் வகுப்பிலேயே மாணவர்களுக்கு பகவத் கீதை, மகாபாரதத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த நூல்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை போதிக்கிறது. நான் மட்டும் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தால், பகவத் கீதையையும், மகாபாரதத்தையும் முதலாம் வகுப்பிலேயே கற்றுக் கொடுக்க உத்தரவிட்டிருப்பேன்" என்று கூறியிருந்தார்.

இவரது இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பிய நிலையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு, இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தார். இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில் இது ஏற்புடையதல்ல என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று இது தொடர்பாக பேசிய ஆர்.எஸ்.எஸ். -சின் கலாச்சார அமைப்பான பாரதிய விசாரா கேந்தரத்தின் இயக்குனர் பி. பரமேஸ்வரன், உச்சநீதிமன்ற  நீதிபதி தவேவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

"பகவத் கீதை வெறும் வேத நூல் மட்டும் அல்ல; ஆன்மீக மற்றும் உன்னதமான தத்துவ நூல் என்பதால் அதனை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். பகவத் கீதை இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக ஆழமாக வேரூன்றிவிட்ட நூலாகும். பகவத் கீதையை குறைந்தபட்சம் ஒருமுறையாவது படித்து பார்ப்போர், அது வெறும் மத உரைகளை மட்டுமே கொண்டது அல்ல என்பதை புரிந்துகொள்வார்கள். பகவத் கீதையைப் போன்று எண்ணற்ற விளக்கங்களை கொண்ட வேறு எந்த புத்தகமும், அதிகமான எண்ணிக்கையில் வெளியிடப்பட்டு விற்கப்பட்டதில்லை.

காலம் மற்றும் இடத்திற்கு அப்பாற்பட்டு ஆதிக்கம் செலுத்துவது பகவத் கீதை. அது ஒரு அறிவுச் சுரங்கம். மகாத்மா காந்தி கூட பக்வத் கீதையை தனது 'தாய்' என அழைத்துள்ளார். எப்பொழுதெல்லாம் அவர் குழப்பமும், துன்பம் அடைகிறாரோ அப்பொழுதெல்லாம் அவர் பகவத் கீதையிடம் தஞ்சமடைந்தார். நமது சுதந்திர போராட்டத்தில் கூட தாக்கத்தை ஏற்படுத்தியது பகவத் கீதை.

உலகம் முழுவதும் நமது நன்னெறி அமைப்புகள்  வேகமாக சீரழிந்துகொண்டிருக்கும் நிலையில், அதற்கான தீர்வை எப்பொழுதுமே கொண்டிருக்கிறது மனித குலத்திற்கான உயரிய பண்புகளை கற்றுக்கொடுக்கும் பகவத் கீதை நூல். எனவே பகவத் கீதையை நமது நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். நமது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அசல் பிரதியில் 'கீதாஉபதேசம்' செய்யும் படம்தான் இடம்பெற்றிருக்கும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட பகவத் கீதை, பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்பட்டால் அது எப்படி அரசியலமைப்பு சாசனத்திற்கு விரோதமானதாக அமையும்?" எனக் கூறியுள்ளார்.