Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
##~##

ருவமழை பொய்த்துவிட்டது. சென்னையின் தாகத்தைத் தீர்க்கும் ஏரிகளில் நீர்மட்டம் குறைகிறது. நிலத்தடி நீர் பாதாளம் நோக்கிப் போகிறது. கிருஷ்ணா, வீராணம் திட்டங்கள் இந்த ஆண்டு கைகொடுக்குமா என்பது கேள்விக்குறி. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் எந்த அளவு தண்ணீரை எதிர்பார்க்கலாம் என்பதற்கும் உறுதி இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆக, 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை வாட்டி வதைத்த குடிநீர்ப் பஞ்சம், மறுபடி கோரமுகம் காட்டப்போவதாக உஷார்படுத்துகிறார்கள் நிபுணர்கள். புதிய வீராணம் திட்டம், மழை நீர் சேகரிப்புத் திட்டம் மூலமாக தலைநகரின் தாகத்தைத் தணித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மறுபடியும் இயற்கையின் சவால்!

முந்தைய பஞ்சத்தின்போது, மாதம் ஒன்றுக்கு 50 கோடி ரூபாய் வரை சென்னை மக்களிடம் குடிநீரை விற்றுக் காசாக்கினார்கள் சிலர் என்பதை அரசு நினைவில்கொள்ள வேண்டும். வறட்சியையே வியாபார வாய்ப்பாக்கி, விவசாய நிலங்களில் இருந்து குடிநீரைக் குத்தகை எடுத்து, கணக்கின்றிப் பணம் பார்க்கத் துடிக்கும் பேராசைப் பேர்வழிகள் மீது கண் பதிக்க வேண்டும். குடிநீர் விநியோகம் ஒரு சில அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் சிக்கி, 'குடிநீர் மாஃபியா'க்கள் தலையெடுக்காமல் தடுப்பதற்குத் திட்டம் வகுக்க வேண்டும்.

அன்றைய பஞ்சத்தின்போது, 'எத்தனை டிரிப் அடிக்கிறோமோ... அத்தனை பணம்' என்ற விதிமுறையால், தாறுமாறாகத் தண்ணீர் லாரிகள் சீறிப் பாய்ந்து, பல விபத்துகள் அரங்கேறி மக்கள் பதைபதைத்துப்போனார்கள். மறுபடி அதுபோல் நடக்காதபடி, விநியோக ஒப்பந்தம் மாற்றப்பட வேண்டும். போக்குவரத்து நெரிசல் குறைந்த இரவு வேளைகளில் மட்டுமே லாரிகள் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலும் அவசியம். இதையெல்லாம் மீறும் குடிநீர் விநியோக வாகனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலநடுக்கம், சுனாமி போன்ற கணிக்க முடியாத இயற்கைச் சீற்றம் அல்ல, குடிநீர்ப் பஞ்சம். வருமுன்பே எச்சரிக்கை மணி பலமாக ஒலிக்கத்தான் செய்கிறது. உணர்ந்து, விழித்துக்கொண்டு... மக்களைக் காக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism