Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!

முத்துக்கிருஷ்ணன், சாத்தூர்.

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 'மத்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளை ஆதரித்ததால்தான் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரும் புலிகளை ஆதரித்தார். மத்திய அரசு அவர்களை எதிர்த்திருந்தால் எம்.ஜி.ஆர். ஆதரித்திருக்க மாட்டார்’ என்று சிலர் பிரசாரம் செய்கிறார்களே?

! இது, வரலாறு அறியாதவர்களின் பேச்சு. மத்திய அரசு அனைத்துப் போராளிக் குழுக்களுக்கும் ஆயுதப் பயிற்சி அளித்தது. ஆனால், எம்.ஜி.ஆர். விடுதலைப் புலிகள் அமைப்பை மட்டுமே ஆதரித்தார்.

கழுகார் பதில்கள்!

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் கொண்டுவந்தபோது, பிரபாகரன் அதை கடுமையாக எதிர்த்தார். எம்.ஜி.ஆர். சொன்னால் பிரபாகரன் சம்மதிப்பார் என்று நினைத்து, அவரை டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்த பிரபாகரனைச் சந்தித்தார் எம்.ஜி.ஆர். 'உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அதை நீங்கள் செய்யுங்கள். நீங்கள் செய்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று, பிரபாகரனிடம் சொல்லிவிட்டு வந்தவர் எம்.ஜி.ஆர். இந்த வரலாற்றை ஆன்டன் பாலசிங்கம் தன்னுடைய 'போரும் சமாதானமும்’ புத்தகத்தில் விரிவாகச் சொல்லி இருக்கிறார். எனவே, ஈழப் பிரச்னையில் மத்திய அரசாங்கத்தின் அசைவுக்குத் தகுந்த மாதிரி எம்.ஜி.ஆர். செயல்படவில்லை என்பதே உண்மை.

 எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

கழுகார் பதில்கள்!

தி.மு.க-வில் அழகிரி என்ன எதிர்பார்க்கிறார்?

##~##

அழகிரி, ஸ்டாலின் ஆகிய இருவர் எதிர்​பார்ப்பதும் கருணாநிதி உட்கார்ந்திருக்கும் நாற்காலி​தான். நாற்காலி ஒன்று... சுற்றுபவர்கள் இருவர். அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் சிக்கலே!

 பி.சாந்தா, மதுரை-14.

கழுகார் பதில்கள்!

தே.மு.தி.க-வின் ஆறு எம்.எல்.ஏ-க்கள் சஸ்பெண்ட் சரியான நடவடிக்கையா?

அவை மாண்பை உணர்த்துவதற்காக சில நாட்கள் தண்டனை விதிக்கலாமே தவிர, ஆறு மாத காலம் என்பது அதிகப்படியானது.

 செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

கழுகார் பதில்கள்!

எந்தக் கட்சியும் எந்தக் கட்சி யுடனும் கூட்டணிவைக்கக் கூடாது என்றால், அரசியல் கட்சிகளின் நிலை?

இரண்டு பெரிய கட்சிகள் தவிர மற்ற யாரும் நாடாளுமன்றம், சட்ட​மன்றத்துக்குள் செல்ல முடி​யாது. உதிரிக் கட்சிகள் அனைத்தும் உதிர்ந்துபோகும். கூட்டணிக்குள் இருந்து​கொண்டு சிறு கட்சிகள் குடைச்​சல் கொடுத்தாலும் மாநில ரீதியான கொள்கைகளை முன்னெடுக்க இந்தக் கட்சிகள் பயன்படுகின்றன என்ற நன்மையும் உள்ளது.

 கி.முருகன், மாப்பிள்ளைக்குப்பம்.

கழுகார் பதில்கள்!

தன் கணவனுக்காக மதுரை மக்களை அழித்த கண்ணகியின் செயல் நியாயமா?

  மதுரை ஆண்ட நெடுஞ்செழியப் பாண்டியன் நீதி நெறிமுறை தவறியதால், அந்த நாட்டுக்கு கண்ணகி அளித்த தண்டனைதான் அது. தனிப்பட்ட தன் கணவன் கோவலன் கொலைக்காக சுயநலத்துடன் கண்ணகி எடுத்த முடிவு அல்ல அது. கோவலன் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டதைப் பார்த்தும் தட்டிக்கேட்காத மக்கள் மீதான கோபம் அது.

'பெண்டிரும் உண்டுகொல்; பெண்டிரும் உண்டுகொல்

சான்றோரும் உண்டுகொல்; சான்றோரும் உண்டுகொல்

தெய்வமும் உண்டுகொல்; தெய்வமும் உண்டு கொல்’

என்றுதான் மதுரை வீதியில் நின்று கண்ணகி கேட்டாள். இந்த தீ யார் மீது பரவ வேண்டும் என்பதையும் கண்ணகி கட்டளையிட்டாள். 'தீத்திறத்தார் பக்கமே சேர்க’ என்றாள். எனவே, பொதுநல நோக்கம்கொண்ட தீர்ப்புதான் அது.

 எஸ்.ராமசாமி, குட்டைதயிர்பாளையம்.

கழுகார் பதில்கள்!

  நாடாளுமன்றத் தேர்தலை தே.மு.தி.க. புறக்கணிக்கும் என்றும் மற்ற கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளாரே?

இதைச் சொல்லிவிட்டு, 'அப்படி மற்ற கட்சிகள் புறக்கணிக்காவிட்டால் நான் எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்வேன்’ என்றும் விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். எனவே, விஜயகாந்த்தும் புறக்கணிக்க மாட்டார். மற்ற கட்சிகளும் புறக்கணிக்காது. இதெல்லாமே... ச்சும்மா!

 குமரகுரு, விருத்தாசலம்.

கழுகார் பதில்கள்!

  கட்சி என்றால் என்ன அர்த்தம்?

சொல்லாய்வு அறிஞர் இரா.இளங்குமரன் தன்னுடைய வட்டார வழக்குச் சொல் அகராதி நூலில் பல்வேறு பொருள்களைச் சொல்கிறார்.

'விலங்கு தங்கும் இடம் கட்சி எனப்படுதல் பழைமையான இலக்கிய வழக்கு. குகை என்பதும் அதுவே. கண் மறைவான இடம் கட்சி. பின்னாளில் பகை என்னும் பொருளில் வழங்கலாயிற்று. விளையாட்டில் எதிர்த்து ஆடு பவரைக் குறித்து பின்னர் எதிர்ப்புப் பொருள் தருவதாயிற்று. இக்காலத்தில் கட்சி; அரசியல், சாதி கூட்டுகளுக்குப் பெயராய் பொது வழக் கிலுள்ளது’ என்கிறார் அவர்.

கட்சிகள் அனைத்தும் ஏன் இப்படி இருக்கிறது என்பது அந்தச் சொல் மூலமே விளங்குகிறதே!

 த.ஜெகன், சரலூர்.

கழுகார் பதில்கள்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்போவது இல்லை என்றும்,  மன்மோகன், சோனியா இருவரை முன்னிலைப்படுத்தியே தேர்தலைச் சந்திக்க இருக்கிறார்கள் என்றும் சொல்லப் படுகிறதே?

காங்கிரஸ் கட்சி பெரும் குழப்பத்தில் இருப்பதை இது காட்டுகிறது. வெற்றி தோல்வி களைப் பற்றி கவலைப்படாமல் களத்தில் இறங்க ராகுலுக்கும் தைரியம் வரவில்லை. விட்டுச்செல்ல மன்மோகனுக்கும் விருப்பம் இல்லை. ஆனால், அவர் இமேஜ் ஜெயிக்குமா என்ற கவலை காங்கிரஸுக்கு. சோனியாவுக்கு அந்தப் பதவி மீது ஆசை இல்லை. இப்படிப்பட்ட முக்கோணச் சிக்கலில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அந்தக் குழப்பங்கள்தான் இத்தகைய செய்திகளுக்குக் காரணம்.

 சீர்காழி சாமா, தென்பாதி.

கழுகார் பதில்கள்!

கருணாநிதிக்கு எப்போதுமே 'பிரதமர்’ பதவி மேல் மோகம் இருந்ததுமாதிரி தெரியவில்லையே என்ன காரணம்?

'என் உயரம் எனக்குத் தெரியும்’ என்று கருணாநிதியே இந்தக் கேள்விக்கு பதில் சொல்லி இருக்கிறார்.

 வி.பரமசிவம், சென்னை-25.

கழுகார் பதில்கள்!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் தொகுதி அலுவலகத்தை பூட்டி சீல் வைத்த ஜெயலலிதா அரசின் சாதனை பற்றி?

எல்லாவற்றிலும் வரலாறு படைக்க ஆசைப் பட்டு இருப்பார். சட்டசபைக்குள் வராமல் இருக்க தண்டனை விதிப்பது பேரவைத் தலைவரின் விருப்புரிமை. அதில் நீதிமன்றம் தலையிடலாமா கூடாதா என்பது மிகப் பெரிய சட்ட விவாதம். அதற்காக தொகுதி அலுவலகத்துக்குள் போகக் கூடாது என்றெல்லாம் தீர்ப்பு அளிப்பது மக்கள் தீர்ப்பை உதாசீனப்படுத்துவது.  

 திருலோக்கி க.தமிழ்மணி, நெடுந்திடல்.

கழுகார் பதில்கள்!

த.மா.கா. மீண்டும் உதயமாகி, அது தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதுபோல் கனவு கண்டேன். பலிக்குமா?

உங்கள் கனவில் பாதி பலிக்கும் என்று நினைக்கிறேன்!

 சி.முருகன், மார்த்தாண்டம்.

கழுகார் பதில்கள்!

இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளில் அதிகமாகப் பிளவு ஏற்பட்டது காங்கிரஸா... கம்யூனிஸ்ட்டா... திராவிடக் கட்சியா?

அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி இண்டிகேட், சிண்டிகேட் என இரண்டாகப் பிளவுபட்டது. அதுவே மிகப்பெரிய பிளவு. மற்றபடி, மாநில ரீதியாக பல முறை பிளவுபட்டுள்ளது. தமிழகத்தில் த.மா.கா. பிளவுபட்டதைப் போல ஏராளமான பிளவுகள் உண்டு.

கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எனப் பிளவுபட்டது மிக முக்கியமானது. இதிலிருந்தே ஏராளமான மார்க்சிய, லெனினிய, மாவோ இயக்கங்கள் தோன்றின.

திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரை, திராவிடர் கழகத்தில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகமும், அதில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் உதயம் ஆனது.

எந்த இயக்கம் அதிகமாக பிளவுபட்டது என்பதைவிட, அத்தகைய பிளவுகள் இந்தச் சமூகத்தில் ஏற்படுத்திய அதிர்வுகளைக் கணக்கிடுங்கள்.

கழுகார் பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism