Published:Updated:

மோடியை ஹிட்லருடன் ஒப்பிடுவதா? சித்தராமையாவுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம்!

விகடன் விமர்சனக்குழு
மோடியை ஹிட்லருடன் ஒப்பிடுவதா? சித்தராமையாவுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம்!
மோடியை ஹிட்லருடன் ஒப்பிடுவதா? சித்தராமையாவுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம்!
மோடியை ஹிட்லருடன் ஒப்பிடுவதா? சித்தராமையாவுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம்!

பெங்களூர்: பிரதமர் நரேந்திரமோடியை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேசிய சித்தராமையாவுக்கு கர்நாடக பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவில் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடியை ‘ஹிட்லர்‘ என்று வர்ணித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி எம்.எல்.ஏ. பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''முதலமைச்சர் சித்தராமையா மாநில ஆட்சி நிர்வாகம் பற்றி கவலைப்படவில்லை.

அதற்கு பதிலாக உட்காரும் இடத்தில், நிற்கும் இடத்தில் எல்லாம் தூங்குவதால் அவர் தனது பேச்சில் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார். மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளவர்போல் நடந்துகொள்ளும் சித்தராமையா, எந்த அடிப்படையில் மோடியை ஹிட்லருடன் ஒப்பிடுகிறார்? இது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து அவர் தெளிவுபடுத்த வேண்டும். மனநிலை பாதிப்பு சம்பந்தமாக சித்தராமையாவுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இதற்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்தால் அதற்கான மருத்துவ சிகிச்சை செலவை பா.ஜ.க. தொண்டர்களே ஏற்றுக் கொள்வார்கள்.

காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளில் உள்ள தோல்வி குறித்து சபாநாயகரே பகிரங்கமாக பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் தலைவர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். தலைமை பற்றாக்குறையை அவர்கள் எதிர் கொண்டு இருக்கிறார்கள். காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற குறிக்கோளை முன்வைத்த நரேந்திர மோடி அந்த கனவை நனவாக்கி உள்ளார்" என்றார்.