Published:Updated:

சிகரெட்டுக்கு விரைவில் தடை: சட்டங்களை கடுமையாக்குகிறது மத்திய அரசு!

புதுடெல்லி: இந்தியாவில் சிகரெட்டுக்கு விரைவில் தடை விதிக்கும் விதமாக மத்திய அரசு சட்டங்களை கடுமையாக்குகிறது.

பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி சிகரெட்டுகளின் விலையை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தினார். தற்போது, நாடு தழுவிய புகையிலை பொருட்களின் தடைக்கு அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்நிலையில், 2003 ஆம் ஆண்டு புகையிலை மற்றும் சிகரெட்டுகள் சட்டம், (காப்டா) மத்திய நலத்துறை அமைச்சகத்தால் மறுஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதை கடுமையாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்கான அறிக்கை மற்றும் பரிந்துரைகள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முன்வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

புதிய பரிந்துரைகளில் புகையிலை உபயோகத்திற்கான குறைந்தபட்ச வயது 18லிருந்து 25 ஆக உயர்த்துதல், அனைத்து சிகரெட்டு மற்றும் புகையிலை பாக்கெட்டுகளிலும் எச்சரிக்கை படத்தை பெரிதாக அச்சிடுதல், பொது இடங்களில் புகைப்பிடித்தால் விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்துதல், கடைகளுக்கு அருகில் புகையிலை விளம்பரங்களை தடை செய்தல் போன்றவை இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.