Published:Updated:

மோடி பங்கேற்கும் விழாவில் பங்கேற்க மாட்டேன்: பிரித்விராஜ் சவான் அறிவிப்பு!

மோடி பங்கேற்கும் விழாவில் பங்கேற்க மாட்டேன்: பிரித்விராஜ் சவான் அறிவிப்பு!
மோடி பங்கேற்கும் விழாவில் பங்கேற்க மாட்டேன்: பிரித்விராஜ் சவான் அறிவிப்பு!
மோடி பங்கேற்கும் விழாவில் பங்கேற்க மாட்டேன்: பிரித்விராஜ் சவான் அறிவிப்பு!

மும்பை: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று மகாராஷ்ட்ர மாநில முதல்வர் பிரித்விராஜ் சவான் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஹரியானாவில் பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், மோடியை வாழ்த்தியும், அம்மாநில முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடாவை பேச விடாமலும் பா.ஜனதாவினர் கோஷமிட்டனர். இதனால், இனி பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று ஹூடா அறிவித்திருந்தார்.
 
இந்நிலையில், சோலாப்பூரில் நடந்த தேசிய நெடுஞ்சாலை திறப்பு விழாவில் மகாராஷ்ட்ரா மாநில முதல்வர் பிரித்விராஜ் சவான் பேசும்போது, மோடியை வாழ்த்தி கூட்டத்தினர் தொடர்ந்து கோஷம் போட்டதால் அவர் தனது உரையை பாதியிலேயே நிறுத்தினார்.

இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று கூறிய அவர், நாக்பூரில் 86.8 பில்லியன் ரூபாய் மதிப்பிலான மெட்ரோ திட்டங்கள் தொடக்க விழாவை புறக்கணித்தார். மேலும், இனி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் விழாவில் தான் பங்கேற்கப் போவதில்லை என்று பிரித்விராஜ் சவான் அறிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சி, ஒவ்வொரு மேடையையும் பிரதமர் பிரசார மேடையாக மாற்றி வருவதாக குற்றம்சாட்டியது. இதற்கு பதிலளித்துள்ள பா.ஜ.க. நிர்வாகிகள், கூட்டு முயற்சியை பிரதமர் நம்புவதால்தான் முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, திட்டங்களை ஒன்றிணைந்து துவக்கி வைப்பதாக தெரிவித்தனர்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவை தொடர்ந்து ஜார்க்கண்டிலும் இதேபோன்ற நிகழ்வு நடந்துள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் பேசுகையில் கூட்டத்தினர் கூச்சலிட்டனர். ஆனாலும் அவர், தனது உரையை முழுவதுமாக முடித்த பிறகே அமர்ந்துள்ளார்.