Published:Updated:

டெல்லி பாலியல் சம்பவத்தால் நிதி இழப்பு: அருண் ஜெட்லி கருத்தால் சர்ச்சை!

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: டெல்லியில் நடந்த சிறிய பாலியல் பலாத்கார சம்பவத்தால் சுற்றுலாத்துறை வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற மாநில சுற்றுலாத்துறை அமைச்சர்களுடன் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பாலியல் பலாத்கார சம்பவங்கள், சட்டம்- ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டில் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படுகிறது.

டெல்லியில் நடைபெற்ற ஒரு சிறிய பாலியல் பலாத்கார சம்பவம் உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டு சுற்றுலாத்துறையில் இழப்பை ஏற்படுத்த போதுமானதாக உள்ளது என்று தெரிவித்தார்.

நாட்டையே உலுக்கிய டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தை பற்றி அருண் ஜெட்லி இவ்வாறு பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதையடுத்து  இந்த கருத்து அரசு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.