Published:Updated:

மனித நேயத்துடன் கூடிய மக்கள் செல்வாக்கே ஜெ. வெற்றிக்கு கரணம்: பட்டிமன்றத்தில் தீர்ப்பு!

மனித நேயத்துடன் கூடிய மக்கள் செல்வாக்கே ஜெ. வெற்றிக்கு கரணம்: பட்டிமன்றத்தில் தீர்ப்பு!
மனித நேயத்துடன் கூடிய மக்கள் செல்வாக்கே ஜெ. வெற்றிக்கு கரணம்: பட்டிமன்றத்தில் தீர்ப்பு!

திருச்சி: நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றிக்கு காரணம் ஜெயலலிதாவின் மனித நேயமா?, மக்கள் செல்வாக்கா? என்ற தலைப்பில் திருச்சியில் நடந்த பட்டிமன்றத்தில், மனித நேயத்துடன் கூடிய மக்கள் செல்வாக்கே என அமைச்சர் பா.வளர்மதி தீர்ப்பளித்தார்.

மனித நேயத்துடன் கூடிய மக்கள் செல்வாக்கே ஜெ. வெற்றிக்கு கரணம்: பட்டிமன்றத்தில் தீர்ப்பு!

அ.தி.மு.க. அரசின் 3ஆண்டு கால சாதனைகளை விளக்கி, நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு காரணம் முதல்வர் ஜெயலலிதாவின் மனிதநேயமா? மக்கள் செல்வாக்கா எனும் தலைப்பில் அ.தி.மு.க. மாநகர், மாவட்டம் சார்பில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே பட்டிமன்றம் நடைபெற்றது. முன்னதாக திருச்சி ஹரிதாஸ் குழுவினரின் ஆடலும், பாடலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மனித நேயத்துடன் கூடிய மக்கள் செல்வாக்கே ஜெ. வெற்றிக்கு கரணம்: பட்டிமன்றத்தில் தீர்ப்பு!

மாநகர் மாவட்டச் செயலாளர் மனோகரன் தலைமை வகித்த இந்த கூட்டத்தில், அமைச்சர் பூனாட்சி, திருச்சி தொகுதி எம்.பி. குமார், எம்.எல்.ஏ. பரஞ்சோதி, மேயர் ஜெயா, மாவட்ட பால்வளத் தலைவர் அயிலை பழனியாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்  எம்.பி. குமார் பட்டிமன்றத்தைத் துவக்கி வைக்க, அமைச்சர் வளர்மதி நடுவராகவும், மக்கள் செல்வாக்கே என்ற தலைப்பில் நடிகர் ராமராஜன், பேச்சாளர்கள் போளூர் ஜெயகோவிந்தன், சங்கரதாஸ் ஆகியோரும், மனித நேயமே என்ற தலைப்பில் பேச்சாளர்கள் நெத்தியடி நாகையன், வக்கீல் துரை, சுந்தரபாண்டியன் ஆகியோரும் பேசினார்கள்.

மனித நேயத்துடன் கூடிய மக்கள் செல்வாக்கே ஜெ. வெற்றிக்கு கரணம்: பட்டிமன்றத்தில் தீர்ப்பு!

நிகழ்ச்சியில் பேசிய நெத்தியடி நாகையன், ''இதுவரை கருணாநிதி முதல்வராக இருந்தபோது, டெல்லிக்கு எத்தனை முறை சென்றிருப்பார்? அதிகாரத்தில் உள்ளவர்களை எத்தனை முறை சந்தித்திருப்பார்? ஒரு முறையாவது காவிரி பிரச்னைப்பற்றி பேசி இருப்பாரா? சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு என மேடைப்போட்டு பேசுகிறார்கள். ஆனால், தி.மு.க.விலேயே ஜனநாயகம் இல்லை என முக.அழகிரி சொல்கிறார். அப்படின்னா தி.மு.க. படும்பாடு என மேடைப்போட்டு பேசுங்கள். டெல்லியில் மோடியை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா, அவரிடம் கூறிய முதல்வார்த்தை, காவேரி பிரச்னை குறித்துதான். அந்தளவுக்கு முதல்வருக்கு நாட்டு மக்கள் மீது அக்கறை அதிகம்.

மனித நேயத்துடன் கூடிய மக்கள் செல்வாக்கே ஜெ. வெற்றிக்கு கரணம்: பட்டிமன்றத்தில் தீர்ப்பு!

இப்போது நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் அ.தி.மு.க. விரைவில் முதல் கட்சியாக விளங்கப்போகிறது. பெங்களூரு வீதிகளில் ஒரு சிறுமி படிப்புக்காக பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது அந்த சிறுமிக்கு உதவியர் முதல்வரம்மா. அவர் மாநிலம் கடந்து மனித நேயத்தில் சிறந்து விளங்குகிறார். ஈழத்தமிழர்களின் உரிமைக்காக ராஜபக்சே கலந்துகொள்ளும் மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள மறுத்தார். அதில் உலகம் கடந்து மனிதநேய மாந்தராக விளங்கி நிற்கிறார். இப்படிப்பட்ட மனிதநேயம்தான் அ.தி.மு.க.விற்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது. கேட்காமலேயே துணை சபாநாயகர் பதவியையும் கொடுத்துள்ளது. சிலபேர் பொண்டாடி, புள்ளை, மச்சானோடு கேட்டாங்க. இன்னும் சிலர் மகனோடு போய் கேட்டாங்க. ஆனால், கேட்காமலேய அ.தி.மு.க.விற்கு கிடைக்கிறது என்றால் அது அம்மாவின் மனிதநேயம்தான் காரணம்'' என்றார்.

மனித நேயத்துடன் கூடிய மக்கள் செல்வாக்கே ஜெ. வெற்றிக்கு கரணம்: பட்டிமன்றத்தில் தீர்ப்பு!

மக்கள் செல்வாக்கே எனும் தலைப்பில் பேசிய நடிகர் ராமராஜன், ''மனித நேயமிருந்தால் உதவி கேட்டு வர்றவங்களுக்கு உதவி செய்ய முடியும். அவர்கள் வாழ்த்திவிட்டு போவார்கள். மனித நேயம் மட்டும் இருந்தால் அரசியலில் வெல்ல முடியாது. மக்கள் செல்வாக்கு இருந்தால்தான் ஆட்சி கட்டிலில் அமர முடியும். மக்கள் செல்வாக்கு இருந்ததால்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்தபடி முதல்வரானார். மக்கள் செல்வாக்குதான் பெரியது. மனிதநேயம் அடுத்துதான். மக்கள் செல்வாக்கு இருந்ததால்தான் போட்டியிட்ட 40 தொகுதிகளில் 37 இடங்களில் வெற்றி பெற்றோம். மக்கள் செல்வாக்கே அ.தி.மு.க.வின் வெற்றிக்கு காரணம்'' என்றார்.

இறுதியாக தீர்ப்பு வழங்கிய அமைச்சர் வளர்மதி,  மனித நேயத்துடன் கூடிய மக்கள் செல்வாக்குதான் முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றிக்கு கரணம். அது மக்கள் சக்தி, மகா சக்தி என முடித்தார்.

சி.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்