Published:Updated:

ஜெயலலிதா விழா: புறக்கணிக்கப்பட்ட முல்லைப் பெரியாறு போராட்டக் குழு குடும்பங்கள்!

விகடன் விமர்சனக்குழு
ஜெயலலிதா விழா: புறக்கணிக்கப்பட்ட முல்லைப் பெரியாறு போராட்டக் குழு குடும்பங்கள்!
ஜெயலலிதா விழா: புறக்கணிக்கப்பட்ட முல்லைப் பெரியாறு போராட்டக் குழு குடும்பங்கள்!

மதுரை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் இன்று நடத்தப்படும் பாராட்டு விழாவிற்கு, முல்லை பெரியாறு அணைக்காக முதலில் குரல் கொடுத்தவர்களின் குடும்பங்களும், அதற்காக உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பங்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதா விழா: புறக்கணிக்கப்பட்ட முல்லைப் பெரியாறு போராட்டக் குழு குடும்பங்கள்!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடரப்பட்ட வழக்கில், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தினை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, தென்மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சார்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று (22ஆம் தேதி) மதுரையில் நடைபெறுகிறது.

ஜெயலலிதா விழா: புறக்கணிக்கப்பட்ட முல்லைப் பெரியாறு போராட்டக் குழு குடும்பங்கள்!

இதனையடுத்து, வழக்கம்போல அ.தி.மு.கவினர், இந்த கூட்டத்திற்கு வாகனங்களில் ஆட்களை அழைத்துச் சென்றனர். குறிப்பாக தேனி மாவட்டத்திலிருந்து அளவுக்கதிமான அரசு பேருந்துகள் கட்சியினரை ஏற்றி சென்றவண்ணமே இருந்தன. இதனால் தேனி புதிய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. தேனியிலிருந்து கம்பம், குமுளி, பாளையம் போன்ற தேனி மாவட்ட ஊர்களுக்கும், திருப்பூர், திண்டுக்கல், கோவை போன்ற வெளி மாவட்டங்களுக்கும் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாத காரணத்தால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்க்கு உள்ளாகினர்.

ஜெயலலிதா விழா: புறக்கணிக்கப்பட்ட முல்லைப் பெரியாறு போராட்டக் குழு குடும்பங்கள்!

இதுபற்றி நம்மிடையே பேசிய ரஞ்சித், "முதன் முதலில் முல்லை பெரியாறு அணை பற்றிய வழக்கு 1979 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாடு விவசாய சங்க தலைவராக இருந்த ரத்தின சாமியும், மீனாட்சி சுந்தரம் மற்றும் அப்பாஸ் ஆகியோரால் உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

அதன் பேரிலேயே கேரள அரசின் அத்துமீறலையும், அணையின் நீர்மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான், கடந்த 2006 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் உச்சநீதி மன்ற தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இப்படியிருந்த நிலையில் இந்த வழக்கில் அரசை ஒரு பகுதியாக சேர்த்துக்கொள்ளப்பட்டது. அப்படி முல்லை பெரியாறு பிரச்னைக்கு முதலில் குரல் கொடுத்தவர் குடும்பங்களுக்கு, இன்று நடக்கும் கூடத்திற்கான எவ்வித அழைப்பும் கொடுக்கப்படவில்லை. அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்'' என்றார்.

ஜெயலலிதா விழா: புறக்கணிக்கப்பட்ட முல்லைப் பெரியாறு போராட்டக் குழு குடும்பங்கள்!

இதேபோல், முல்லை பெரியாறு பிரச்னைக்காக உயிர்தியாகம் செய்த ஜெயப்பிரகாஷ் நாராயணன், இடி முழக்கம் சேகர், ராம மூர்த்தி ஆகியோரின் குடும்பத்திற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உ.சிவராமன்


படங்கள்: வீ.சக்தி அருணகிரி