Published:Updated:

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர் சுட்டுக்கொலை!

மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர் சுட்டுக்கொலை!
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர் சுட்டுக்கொலை!
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர் சுட்டுக்கொலை!

புருலியா: மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. தலைவர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மேற்கு வங்காளம் மாநிலம், பாக்முண்டி பிளாக் பகுதியில் பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு வந்தவர் அனில் கோபி. இவரது வீடு ஜார்க்கண்ட் மாநில எல்லையோரம் ரகுநாத்திஹி என்ற கிராமத்தில் உள்ளது. இந்நிலையில், அனில் கோபி இன்று (22ஆம் தேதி) காலை தனது வீட்டிலிருந்து வாக்கிங் சென்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம மனிதர்கள் அனில் கோபியை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், அனில் கோபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், அனில் கோபி உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக புருலியா சதர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அனில் கோபி கொலை குறித்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணையும் மேற்கொண்டனர்.

இதுகுறித்து, பா.ஜ.க. மாவட்ட தலைவர் சிங்டியோ கூறுகையில், அனில் கோபி அந்தப் பகுதியில் பிரபலமான ஒருவராக திகழ்ந்து வந்தார். இதையடுத்து அவர் அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம்'' என்றார்.