Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
##~##

ரேந்திர மோடியை எதிர்த்தரப்பு பிரதமர் வேட்பாளராக ஒருமனதாக ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதில் காங்கிரஸ் காட்டும் பதற்றமும் பயமும் வேடிக்கையானது. 'மோடியா... ராகுல் காந்தியா..?’ என்று இருவரும் எதிரெதிரே மோதும்போது, ராகுல் காந்திக்கான வாய்ப்புகள்குறித்து காங்கிரஸ் அச்சம்கொள்வது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'மதச் சார்பற்றச் சிந்தனைகொண்ட ஒருவரைத்தான் பிரதமர் வேட்பாளராக எதிர் அணி தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்கிற கருத்துகளைப் பரப்பி, எதிர் அணியினரைக் குழப்பும் காங்கிரஸின் வியூகம் நமக்குப் புரியாமல் இல்லை. இந்திய தேசத்தை வழி நடத்தக்கூடிய பிரதமர் மதச் சார்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேசமயம், அந்த ஒற்றைத் தகுதி மட்டுமே பிரதமர் வேட்பாளருக்குப் போதும் என்று பிரஸ்தாபிக்க முனையும் காங்கிரஸின் துடிப்பு வடிகட்டிய முட்டாள்தனம்.  

ஊழல் ஆகட்டும்... மக்கள் நலப் பணிகளில் அலட்சியம் ஆகட்டும்... விலை உயர்வு ஆகட்டும்... எல்லாவற்றிலுமே காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு எல்லையே இல்லை. ஒருபக்கம் தவறுகளைத் தொடர்ந்து செய்துகொண்டு, அதற்காக சட்டங்களையும் அதிகார மையங்களையும் வளைத்துக்கொண்டு காங்கிரஸ் கூட்டணி நடத்தாத துஷ்பிரயோகங்களே இல்லை எனலாம்.

மன்மோகன் அரசு ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கும் நிலையில் தங்கள் சாதனை என்று எதையும் பிரகடனப்படுத்த வழியில்லாமல், எதிர் அணியின் பலவீனத்தை மட்டுமே காங்கிரஸ் நம்பியிருக்கிறது என்பது வாக்காளனுக்குப் புரியாமல் இல்லை.

கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்காமல், மக்கள் துயரங்களைக் களைவதற்கான பணிகளை மேற்கொள்ளாமல், எதிர் அணியைத் துணிச்சலாகவும் நேர்மையாகவும் எதிர்கொள்ளாமல்... இப்படியுமா காங்கிரஸ் அரசியலில் பிழைப்பு நடத்துவது?!