Published:Updated:

ப.சிதம்பரம் மீது பிரதமரிடம் நரேந்திர மோடி புகார்

ப.சிதம்பரம் மீது பிரதமரிடம் நரேந்திர மோடி புகார்
ப.சிதம்பரம் மீது பிரதமரிடம் நரேந்திர மோடி புகார்
ப.சிதம்பரம் மீது பிரதமரிடம் நரேந்திர மோடி புகார்

ஆமதாபாத், ஆக.13 : குஜராத் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

2 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது குஜராத் அரசு நடவடிக்கை எடுத்தது. பாதிக்கப்பட்ட அதிகாரிகள் மத்திய அரசிடம் முறையிட்டால், அவர்களுக்கு உதவுவோம் என ப.சிதம்பரம் கூறியிருந்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து முதல்வர் மோடி சனிக்கிழமை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது :

சிதம்பரத்தின் இத்தகைய பேச்சு, காவல்துறையினரிடையே ஒழுங்கீனத்தை வளர்க்கும். ஜனநாயக ரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை சீர்குலைக்கும். முன்னேற்ற பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் குஜராத் அரசுக்கு எண்ணில் அடங்கா இடையூறுகளும், அதை கவிழ்க்க பல்வேறு முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பங்கு உள்ளதாக தெரிகிறது.

பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு இதுபோன்ற செயல்களில் ப.சிதம்பரம் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.