Published:Updated:

''ஜெயலலிதாவை எதிர்க்க யாருக்கும் துணிச்சல் இல்லை!

''ஜெயலலிதாவை எதிர்க்க யாருக்கும் துணிச்சல் இல்லை!

''ஜெயலலிதாவை எதிர்க்க யாருக்கும் துணிச்சல் இல்லை!
##~##

னல் தணலாக தி.மு.க. மீது விமர்சனங்கள் குவிந்துகொண்டிருக்கும் நிலையில், ''நாளை காலை... ஓ.கேவா?'' என்று உடனடி யாகப் பேட்டிக்குச் சம்மதித்தார் கனிமொழி. காங்கிரஸ், ஈழம், ஸ்டாலின், அழகிரி,  ஜெயலலிதா என்று எந்தக் கேள்விகளுக்கும் சளைக்கவில்லை... மலைக்கவில்லை கனிமொழி!  

'' 'காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகல் முடிவு தாமதமான ஒன்று’ என்ற விமர்சனம்குறித்து?''

''இலங்கைத் தமிழரின் புனர்வாழ்வு முன்னெடுப்புகளில் இந்தியாவின் பங்குதான் அதிகமாக இருக்க வேண்டும் என்பது தி.மு.க-வின் நிலையாக இருந்தது. அதற்கேற்ப ஐ.நா-வில் இன்னும் தீர்க்கமான தீர்மானத்தை இந்தியா இயற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், மத்திய காங்கிரஸ் அரசு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்திய நாடாளு மன்றத்திலும் ஒரு தீர்மானம் கேட்டோம். அதைக்கூட காங்கிரஸ் அரசு செய்யவில்லை. காங்கிரஸ் அரசு செயல்படுவதற்குப் போதுமான அவகாசம் கொடுத்த பிறகு, காங்கிரஸ் தரப்பில் எந்த முனைப்பும் இல்லை என்று ஊர்ஜிதமான பிறகே வெளியேறினோம். இதில் எந்த இடத்திலும் தாமதத்துக்கான காரணிகள் இல்லை!''  

''ஜெயலலிதாவை எதிர்க்க யாருக்கும் துணிச்சல் இல்லை!

''காங்கிரஸ் கூட்டணியுடன் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால் எதிர்ப்பு அலையைச் சமாளிக்க முடியாது என்பதே, இந்தத் திடீர் விலகலுக்குக் காரணமா?''

''தி.மு.க. என்ற பேரியக்கம் தேர்தலுக்காக மட்டுமே எந்தக் காலத்திலும் அரசியலில் ஈடுபட்டது இல்லை. இலங்கைப் பிரச்னைக்காக ஆட்சி உட்பட அதிக இழப்புகளை வேண்டி விரும்பி

''ஜெயலலிதாவை எதிர்க்க யாருக்கும் துணிச்சல் இல்லை!

ஏற்றுக்கொண்டது தி.மு.க-தான். இதற்கு முன் எண்ணிலடங்காப் போராட்டங்களை தி.மு.க. முன்னெடுத்திருக்கிறது. அவற்றில் எல்லாம் தேர்தலை முன்னிறுத்தியா ஈடுபட்டோம்? ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த அவலத்தைத் தேர்தல் பிரச்னையாக முன்வைக்க விரும்பவில்லை. அப்படிச் செய்தும்விடாதீர் கள். ஈழத் தமிழர்களைவைத்து அரசியல் செய்வதுதான், அவர்களுக்கு எதிரான மிகப் பெரிய துரோகம்!''

''ஒரு காலத்தில் தி.மு.க-வுக்கு இளைஞர்களிடையே எழுந்த எழுச்சிக்கு விடுதலைப் புலிகள் ஆதரவும் ஒரு காரணம். அப்படியிருந்தும் விடுதலைப் புலிகளுக்கு அவசியம் கை கொடுக்க வேண்டிய சமயம், அந்தப் பொறுப்பைத் தி.மு.க. தட்டிக்கழித்தது என்று சொல்லலாமா?''

''நான் ஒன்று கேட்கவா? விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்கக் கோரியது யார்? முதல்வர் ஜெயலலிதாதானே! தமிழகத்தில் விடுதலைப் புலிகளை மையமாகவைத்து ஓர் உரையாடல் நிகழ்த்தக்கூட இயலாத நிலையை ஏற்படுத்தியது யார்? அதே ஜெயலலிதாதானே! 'பிரபாகரனைக் கைது செய்து, அழைத்து வந்து தண்டிக்க வேண்டும்’ என்று சொன்னதும் ஜெயலலிதாதானே?

தேர்தல் நெருக்கத்தில் அரசியல் சுயலாபத்துக் காக, 'நான் தனி ஈழத்தை ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை ஆதரிக்கிறேன்!’ என்றெல்லாம்சொல் கிறார். இத்தனை வருடங்களாக 'அழிக்க வேண்டும்... ஒழிக்க வேண்டும்!’ என்று சொன்னவர், ஒரே இரவில் எப்படி மாறினார்? தி.மு.க. மீதுகல்லெறி யும் முன், ஒரு நிமிடம் நாம் யாரைத் தலையில் தூக்கிவைத்து ஆடுகிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜெயலலிதாவை எதிர்க்க இங்கே யாருக்கும் துணிச்சல் இல்லை. அதுதான் உண்மை!''

''மத்தியக் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகிய மறுநாளே சி.பி.ஐ. சோதனை. இந்தச் சூழலில் 2ஜி வழக்கு எப்படிப் பயணிக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?''

''நீதிமன்றத்தில் இருக்கக்கூடிய வழக்கைப் பற்றி நான் பேசக் கூடாது. வழக்கின் போக்கு எப்படி இருந்தாலும் அதை எதிர்கொள்ளும்தைரி யம் எங்களுக்கு உண்டு. நாங்கள்  எதிர்கொண்டதற் கும்  மேல் என்ன நெருக்கடி தந்துவிட முடியும்? எதையும் சந்திப்போம்... சமாளிப்போம்... மீண்டு வருவோம்!''

''அரசியலில் எதுவும் சாத்தியம்தானே... எதிர்காலத்தில் மீண்டும் காங்கிரஸுடன் தி.மு.க. கூட்டணி அமைக் குமா?''

''தலைவர் அவர்களும், பேராசிரியரும், பொருளாளர் ஸ்டாலின் அவர்களும் தெளிவாக, காங்கிரஸோடு இனி கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டனர். இதற்கு மேல் அதைப் பற்றிப் பேச எதுவும் இல்லை!''

''தி.மு.க. தலைவராக கருணாநிதி 90 வயதிலும் பரபரப்பாக இருக்கிறார். அரசியல் சூழல் உண்டாக்கும் மன உளைச்சல்களும் முன்னெப்போதையும்விட அதிகம். இதைப் பற்றி உங்களிடம் ஏதும் மனம் திறந்து பேசுவாரா?''  

''அப்பாவின் எந்தவொரு நாளும் பரபரப்புஇல்லாமல் கழிந்ததே கிடையாது. இப்போது தி.மு.க.

''ஜெயலலிதாவை எதிர்க்க யாருக்கும் துணிச்சல் இல்லை!

சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகூடக்கிடை யாது. ஆனாலும், அப்பா இன்றும் பரபரப்பாகத் தானே இருக்கிறார்? எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அப்பாதான் முதல்வரோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு, தமிழக அரசியல் அவரைச் சுற்றித்தான் இயங்குகிறது. ஆளும்கட்சிபற்றியோ, அதன் தலைவர் பற்றியோ யாரும் பேசுகிறீர்களா? அப்பாவைப் போற்றியோ, தூற்றியோதான் அரசியல் விமர் சகர்களும் ஊடகங்களும் இயங்குகின்றன. யாரேனும் இதை மறுக்க முடியுமா? இந்தப் பரபரப்பு இல்லாமல் இருந்தால்தான், அப்பாவுக்குச் சங்கடமாக இருக்கும்!''

''ஜெயலலிதாவின் ஆட்சி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. எப்படி மதிப்பிடுவீர்கள்?''

''நம் மாநிலத்தை இருண்ட தமிழகமாக மாற்றிய பெருமை ஜெயலலிதாவையே சாரும். அனைத்து அம்சங்களிலும் பொதுமக்கள் நசுக்கப்படும் ஆட்சி இது. சட்டசபையில் மக்கள் பிரச்னைகளைப் பேச யாருக்கும் அனுமதி கிடை யாது. வேண்டுமானால், அம்மா துதி பாடிக் கொள்ளலாம். ஊடகங்கள் ஆட்சியை விமர்சித்தால், அவதூறு வழக்கு பாயும். 'செருப்பைக் கழற்றிவிட்டு வாருங் கள்!’ என்று சொன்ன மருத்துவருக்கு நேர்ந்த கதி நான் சொல்லி உங்களுக் குத் தெரிய வேண்டியதில்லை. விவசாயிகள் நலன்பற்றி எந்தக்கவலை யும் கிடையாது. மின்சாரம் என்றால், காணாப் பொருள் என்ற நிலையை நோக்கிச் சென்றுகொண்டுஇருக்கி றோம். சென்னையில் எவ்வளவு குப்பை, கொசுக்கள்? தளபதி ஸ்டாலின் மேயராக இருந்தபோது, சென்னை இப்படியா இருந்தது? கற்காலத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது தமிழகம்!''

''கவனிக்கத்தக்க ஒரு பெண்ணாக இருந்து சொல்லுங்கள்... பெண்கள் பல தளங்களில் சாதனைகள் நிகழ்த்தும் சமயத்தில்கூட, பொதுவெளியில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துவருகின்றனவே?''

''பெண்களைப் பொதுவான தளத்தில் இயல்பாக ஏற்றுக்கொள்வது இங்கு சாத்தியம் இல் லாத ஒன்றாகவே இருக்கிறது. ஒரு பெண் இரவு எட்டு மணிக்கு பேருந்து நிறுத்தத்தில் நின்றால், 'இவள் ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்குப்போயி ருக்க வேண்டும்’ என்றுதான் யோசிக்கிறோம். இந்த நேரத்தில் சினிமாவைக் குற்றம் சொல்கி றேன் என்று நினைக்க வேண்டாம். ஆனால், சினிமாக்களில்கூட ஒரு ஆணின் காதலை மறுக்கும் விருப்பம் பெண் கதாபாத்திரங்களுக்கு வழங்கப்படுவது இல்லை. சினிமா மட்டுமல்லாது, அனைத்துத் தளங்களிலுமே இது பொருந்தும். அது தந்தையோ, கணவனோ, காதலனோ, நண்பனோ, அண்ணனோ, தம்பியோ ஓர் ஆணின் முடிவுக்குக் கட்டுப்படும் நிலைமையில்தான் பெண்கள் இருக்கிறார்கள். இந்த மனப்பான்மைதான் பெண்கள் மீது ஆசிட் வீச்சு வரையில் நிலைமை யைச் சிக்கலாக்கிவைத்திருக்கிறது. பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களைக் குறை சொல்பவர்களும் இங்கேதானே இருக்கிறார்கள். ஆணோ, பெண்ணோ தனி மனித மனப்பான்மை மாறுவதே இந்தப் பிரச்னைக்கான தீர்வாக இருக்கும்!''

''கருணாநிதியின் மகள் என்பதைத் தாண்டி, உங்களுக்கு பிரத்யேக அடையாளம் உண்டாக்கியவை உங்கள் படைப்புகள். என்னவானார் கவிஞர் கனிமொழி?''

(கண்களில் ஏக்கம் தெரிகிறது) ''எழுதணும். அரசியலுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை. எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு என்னை ஆளாக்கிக்கொள்வது இல்லை. சீக்கிரம் எழுத வேண்டும். மீண்டும் அந்த கனிமொழியைச் சந்திக்க நானே ஆவலாக இருக்கிறேன்!''

''என்ன... திடீரென்று மதுரைக்குச் சென்று அழகிரியைச் சந்தித்து வந்திருக்கிறீர்கள்?''

''அண்ணனை தங்கை சந்திப்பது பெரிய விஷயமா? அழகிரி அண்ணனைச் சந்திக்காமல், மதுரைக்குப் போய் வர முடியுமா? மதுரைக்குப் போய் வெகு நாட்கள் ஆயிற்று. கலை, இலக்கிய அணி பொறுப்பாளருக்கு மதுரையில் திருமணம். நான் அவசியம் சென்றாக வேண்டும். அப்போது அண்ணன் வீட்டுக்கும் சென்றேன். அண்ணனுடன் பொதுவான பல விஷயங்களைப் பேசினேன்!''

''தி.மு.க-வைச் சுற்றும் தலைவர் சர்ச்சை?''

''தலைவர் அவர்கள் தெளிவாக இதற்குப் பதில் சொல்லியிருக்கிறார்கள். இப்போது இந்தக் கேள்வி அவசியம் இல்லை!''  

''கட்சியின் அதிகார மையத்தைக் கைப்பற்ற அழகிரி - ஸ்டாலின் இடையே பெரும் பிரயத்தனம் நடப்பது வெளிப்படையாகவே தெரிகிறதே?''

''இது பரபரப்புக்காகக் கிளப்பிவிடப்படும் கற்பனை. கட்சிப் பணிகளில் ஈடுபாடு காட்டாத வர்களும் தலைமைக்குக் கட்டுப்படாதவர்களும் விலக்கிவைக்கப்படுவது இயல்புதான். அதனை இவர் ஆதரவு ஆள், அவர் ஆதரவு ஆள் என்று கண், காது, மூக்கு வைத்துப் பரப்ப வேண்டாம்!''

''இருவருக்கும் இடையிலான உரசல்குறித்த செய்திகள் முழுக்கவே கற்பனை என்கிறீர்களா?''

''எல்லாக் கட்சிகளிலுமே பிரச்னை இருக்கத்தானே செய்கிறது. அது ஏன் தி.மு.க-வின் உள்கட்சி விவகாரங்களை மட்டும் பெரிதுபடுத்துகிறீர்கள்?''

''வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. யாருடன் கூட்டணி அமைக்கும்?''

''எந்த ஆரூடமும் சொல்லக்கூடிய நிலையில் நான் இல்லை. கூட்டணி என்று உருவானால்... அதற்கு விடை தெரியும்!''

''சமீபகாலமாக அரசியல் அரங்கில் ஜெயலலிதாவை பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று முன்மொழிகிறார்கள். நீங்கள் ஏன் உங்கள் தலைவர் கருணாநிதியை பிரதமர் பதவிக்கு முன்னெடுக்கவில்லை?''

''எனக்குத் தெரிந்து, தலைவரை ஜனாதிபதி பதவியேற்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், அவருக்கு தமிழ்நாட்டை விட்டுச் செல்ல விருப்பம் இல்லை. அவருடைய வாழ்க்கைப் பயணத்தில் தமிழர்கள் மட்டுமே இருந்தார்கள்... இருப்பார்கள். அவரை நீங்கள் என்ன விமர்சித்தாலும், அவர் உங்களோடுதான் இருப்பார்!''