எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

டாஸ்மாக் கடை வாசலில், குடிப்பவர்களின் காலில் விழுந்து மதுவிலக்குப் பிரசாரம் செய்யும் காந்தியவாதி சசிபெருமாள் பற்றி...?

மதுவிலக்குப் பிரசாரத்திலும் உண்ணாநோன்பிலும் வாழும் காந்தியாகச் செயல்பட்டு வருகிறார் சசிபெருமாள். அதற்காகக் குடிகாரர்களின் காலில் விழுவது என்பதெல்லாம் அவசியமற்றது. ஒரு காந்தியவாதியின் கள்ளங்கபடமற்ற செயல்பாட்டைப் பலர் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

பா.சு.மணிவண்ணன், திருப்பூர்-4.

'ராகுல் காந்தி, நரேந்திரமோடி ஆகிய இருவருமே பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்கள் இல்லை’ என்று அண்ணா ஹஜாரே சொல்லி இருப்பது பற்றி?

சிறந்தவரைத் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை இந்திய ஜனநாயகச் சூழலில் இல்லை. மிக மோசமானவரைவிட மோசமானவரைத் தேர்ந்தெடுப்பதுதானே இன்றைய சூழலாக இருக்கிறது. ராகுல், மோடி குறித்து மிகச் சரியான விமர்சனங்களை வைத்து வாக்காளர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் காரியத்தை அண்ணா ஹஜாரே போன்றவர்கள் செய்யலாம்.

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

யார் பிரதமர் வேட்பாளர் என்பதில் ஐக்கிய ஜனதா தளமும் பாரதிய ஜனதாவும் மோதிக்கொள்வது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதொரு ஆதாயம்தானே?

ஆமாம். பாரதிய ஜனதா கூட்டணிக்குள் நடக்கும் இந்தக் கைகலப்பு காங்கிரஸுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

பாரதிய ஜனதாவுடன் சுமார் 17 ஆண்டு காலம் கூட்டணியில் இருக்கும் கட்சி ஐக்கிய ஜனதாதளம். அந்தக் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமார், பீகார் முதலமைச்சராக இருக்கிறார். பீகாரில் ஆட்சியைப் பிடிக்க முஸ்லிம்களின் வாக்குகள் முக்கியம். அதனால்தான் அவர் மோடி மீது கோபம் இருப்பதுமாதிரி காட்டிக்கொள்கிறார். நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் முஸ்லிம் வாக்குகளைப் பெறுபவர்கள்தான் பீகாரில் வெற்றி பெற முடியும். இதை மனதில்வைத்து நிதிஷ் செயல்படுகிறார். பாரதிய ஜனதா தனது பிரதமர் வேட்பாளரை அறிவித்த பிறகுதான், நிதிஷின் உண்மையான வெறுப்பு வெளிச்சத்துக்கு வரும்.

காந்திலெனின், திருச்சி.

இப்போது நடக்கும் சட்டசபைக் கூட்டத்தொடர் பற்றி?

எதையாவது சொல்லி வெளியேறத் துடிக்கும் எதிர்க் கட்சிகள், எப்படியாவது அவர்கள் வெளியேறினால் போதும் என்று நினைக்கும் ஆளும் கட்சி... இதுதான் இன்றைய சட்டசபைக் கூட்டம்.

முறையான விமர்சனங்களையோ, அவசியமான ஆலோசனைகளையோ சொல்லி ஆளும் கட்சியை வழிநடத்த இவர்களும் தயாராக இல்லை. சிறு குற்றச்சாட்டுகளைக்கூட பொறுமையாகக் கேட்கும் மனநிலையில் ஆளும் கட்சியினரும் இல்லை. எதிர்க்கட்சியைப் பேச அனுமதித்தால்தான், உண்மையான சில குறைபாடுகளை நான் தெரிந்துகொள்ள முடியும் என்று ஆளும் கட்சி நினைப்பதும் இல்லை. எல்லாப் பிரச்னைகளையும் கருணாநிதி, ஜெயலலிதா விஷயமாக மாற்றிவிடுவதால்தான் சட்டசபை எப்போதும் கொதிநிலையில் இருக்கிறது. இவர்கள் இருவரையும் மறந்து பிரச்னைகள் அலசப்பட்டால்தான், மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும்.

கலைஞர் ப்ரியா, வேலூர்.

மாணவர் போராட்டம் எதையும் சாதிக்கவில்லையே?

மாணவர் போராட்டம் காரணமாகத்தான், மத்திய அரசுக்கு கருணாநிதி நெருக்கடி கொடுத்தார். அந்தக் கூட்டணியில் இருந்தும் விலகினார். மாணவர் போராட்டம் காரணமாகத்தான், ஐ.நா-வில் இலங்கைக்கு எதிராக வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது. ஈழத் தமிழர் பிரச்னை தமிழகத்தில் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது என்பதை மாணவர் போராட்டமே உலகத்துக்கு உரக்கச் சொன்னது. மேலும், இன்றைய இளைஞர்கள் படிப்பு, வேலை, சம்பளம் போன்ற சுயநல நோக்கம் மட்டுமேகொண்டவர்கள் என்ற எண்ணத்தை மாற்றி, அவர்களுக்கு சமூக அக்கறை இருக்கிறது என்பதையும் காட்டியது. மாணவர் போராட்டம், இந்த நாட்டில் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். நாம் சரியாகச் செயல்படவில்லையானால் மாணவர்கள் இந்த விஷயத்தைக் கையில் எடுத்துவிடுவார்கள் என்பதை, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இது உணர்த்தியது.

மு.கல்யாணசுந்தரம், மேட்டுப்பாளையம்.

ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், ஆர். வைத்திலிங்கம் ஆகிய நால்வர் அணி பற்றி?

கட்சியின் மேல் மட்டத்தில் இவர்களை ஓ.பி., கே.பி., ஈ.பி., ஹெச்.பி. என்றுதான் அழைக்கிறார்கள். சில நேரங்களில் முதல்வர் ஜெயலலிதாவே இவர்களை இப்படித்தான் அழைக்கிறாராம். பன்னீர்செல்வமும் முனுசாமியும் அவர்களது இன்ஷியல் மூலமாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். நத்தம் விஸ்வநாதன், மின் துறை அமைச்சர் என்பதால் ஈ.பி. என்றும் வைத்திலிங்கம் வீட்டுவசதித் துறை அமைச்சர் என்பதால் ஹெச்.பி. (ஹவுஸிங் போர்டு) என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்களது செல்வாக்குப் பிடிக்காத அமைச்சர்கள் சிலர் இருக்கிறார்கள். சொறி, சிரங்கு, தேமல், படை என்று இவர்களை அந்த அமைச்சர்கள் அழைக்கிறார்களாம்.

அ.அப்துல்காதர், விளாத்திகுளம்.

இன்றைய நிலையில் மு.க.அழகிரி, தி.மு.க-வுக்கு பலமா? பலவீனமா?

தலைவருக்குப் பலம். பொருளாளருக்குப் பலவீனம். இவர்கள் இருவர்தானே தி.மு.க.?

வி.பரமசிவம், சென்னை-25.

சென்னை வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன் சதீஷ்குமார் மரணம் தொடர்பான வழக்குக்கு உபயோகமான தகவல்கள் தெரிவித்தால் வெகுமதி வழங்கப்படும் என்று சிறப்புப் புலனாய்வு பிரிவு அறிவித்துள்ளதே?

அந்த விஷயத்தில் பல தடயங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. அதனால்தான் கண்டுபிடிப்பதிலும் சிரமங்கள் இருக்கின்றன. தடயங்களை அழிப்பதில் தேர்ந்தவர்கள்தான் இந்த மரணத்தின் பின்னணியில் இருந்திருக்கிறார்கள்.

செ.அ.ஷாதலி, கோனுழாம்பள்ளம்.

அரசியல்வாதிகள் - அதிகாரிகள் யாருக்கு அதிகார போதை அதிகம்?

அதிகாரிகளுக்குத்தான். அரசியல்வாதிகளுக்காவது ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை போதை இறங்கும். அதிகாரிகளுக்கு அப்படியேஇருக்கும்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி அமைந்தால் அது வலுவான கூட்டணியா?

அமைந்தால்... அது வலுவான கூட்டணிதான்.