கழுகார் வந்ததும், ''மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன் வழக்கில் தீர்ப்பு வழங்கும் நேரத்தில் என்ன சிக்கல் ஏற்பட்டது?'' என்ற கேள்வியைப் போட்டோம். தயாராக இருந்தவராக ஆரம்பித்தார் கழுகார்.

''13 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கு அது. வி.என்.சுதாகரன், தோட்டம் பாஸ்கரன், ஜலாலுதீன், மொய்னுதீன் என்ற நான்கு பேர் மீது போடப்பட்டது. இத்தனை ஆண்டுகள் கழித்து அதில் என்ன தீர்ப்பு வரப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் கடந்த 19-ம் தேதி நீதிமன்றத்தில் காத்திருந்தனர். தீர்ப்புச் சொல்ல வேண்டிய நீதிபதி ராமமூர்த்தி, தனக்கு ஒரு மிரட்டல் தந்தி வந்திருப்பதாகவும், இந்த வழக்கில் இப்போது தீர்ப்புச் சொல்லக் கூடாது என்று குறிப்பிட்டு சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டார். அத்துடன், இந்தப் பிரச்னையை சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு அனுப்புவதாகவும், அவர் எடுக்கும் முடிவுப்படிதான் செயல்படப்போவதாகவும் கூறி, வழக்கை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். தீர்ப்புக்காகக் காத்திருந்தவர்கள் மிரண்டுபோனார்கள்!''

''யார் அனுப்பியதாம் இந்தத் தந்தி?''

''இப்போது இந்தப் பிரச்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. 'ஒரு நீதிபதி தனக்கு வந்த மிரட்டல் கடிதத்தைக் காரணம் காட்டி இதுபோல் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தால், எந்த வழக்கிலும் இனி தீர்ப்பு சொல்ல முடியாது’ என்று பேச்சு கிளம்பியுள்ளது. ஆனால், இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்பட்ட சுதாகரன் தரப்புதான் கடும் அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் உள்ளது. 'இந்த வழக்கில் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வெளியாகப்போவதைத் தெரிந்துகொண்ட சிலர் எங்களுக்கு நீதி கிடைக்கக் கூடாது என்று நினைத்து இந்த வேலையைச் செய்துள்ளனர். அவர்களின் மிரட்டலுக்குப் பயந்து 13 வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை நீதித் துறை ஒத்திவைத்துள்ளதுதான் வேதனையளிக்கிறது. இந்தக் காரியத்துக்குத் துணைபோனதில் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் சிலரும் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டுபிடித்துவிட்டோம். இதற்கு சில வக்கீல்களும் உடந்தையாக இருந்துள்ளனர். அந்த நபர்கள் யாரென்று எங்களுக்கும் தெரியும். இந்தத் தந்தியை எத்திராஜ் கல்லூரியின் முகவரியில் இருந்து கொடுத்துள்ளனர். இதை போலீஸ் மேலிடத்துக்கு தகவலாகக் கொடுத்து விட்டோம்’ என்கிறார்கள்!''

''பயங்கரப் பின்னணியாக உள்ளதே?''

''சொல்லும் கதைகள் அனைத்தும் அப்படித்தான் இருக்கிறது. 'விவகாரத்தை சுமுகமாக முடித்துத்தருவதாக ஆளும் கட்சி சட்டப் பிரமுகர் ஒருவர், வி.என்.சுதாகரனிடம் பேசினாராம். அவர் கேட்டதைப் பார்த்து சுதாகரனே மலைத்துப்போனாராம். அவர்தான் சுதாகரனைப் பழிவாங்குவதற்கு இதைச் செய்துள்ளார்’ என்கிறார்கள். எப்படி என்றாலும் இதை போலீஸ் விஷயம் ஆக்குவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். போலீஸ் மேலிடம் எவ்வளவு சுறுசுறுப்பாக இதை விசாரிக்கிறது என்பதைப் பொறுத்து சம்பந்தப்பட்டவர்களின் முகங்கள் வெளிச்சத்துக்கு வரும்!!'' என்றபடி ஸ்பெக்ட்ரம் மேட்டருக்கு வந்தார் கழுகார்.

கையோடு கொண்டுவந்திருந்த 24.3.13 தேதியிட்ட ஜூ.வி. இதழைப் பிரித்தார். அட்டைப் படமே, 'ஜெனிவா சீற்றம்... பின்னணியில் 2ஜி’ என்று இருந்தது.

''அன்று சொன்னேன். அப்படியே நடந்தது பார்த்தீரா?'' என்றபடி சொல்லத் தொடங்கினார்.

''இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கருணாநிதி நிர்ப்பந்தம் செய்ததும், மத்திய அமைச்சர்களான ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் ஆகிய மூவரும் வந்துபார்த்தது பற்றி அந்த இதழில் நான் விளக்கமாகச் சொல்லி இருந்தேன். 'சமீப காலமாக தி.மு.க-வுக்கும் டெல்லி மேலிடத்துக்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒரு உள்குத்துச் சண்டை நடந்துவருகிறது. சமீப காலமாக டெல்லி மீடியாக்களில் ஸ்பெக்ட்ரம் ஆவணங்கள் ரிலீஸாகி வருகின்றன. அதையும் சீரியஸாகப் பார்க்கிறது மத்திய அரசு. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பிரதமரும் அவரது அலுவலகமும் எப்படி எல்லாம் நேரடியாகச் சம்பந்தப்பட்டு இருந்தன என்பதைச் சொல்கின்றன அந்த ஆவணங்கள். இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் அனைத்து மீடியாக்களிலும் மீண்டும் வருவதன் பின்னணியையும் ஜெனிவா தீர்மானத்தையும் டெல்லி மீடியாக்கள் முடிச்சுப்போட்டு பார்க்கின்றன. ஜே.பி.சி-யின் விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்படும் நாள் நெருங்குகிறது. அந்த அறிக்கையில் என்ன இருக்கப்போகிறது என்பதை தி.மு.க. அறிந்துவிட்டது. அதனால்தான் இந்தப் பதற்றம் என்றும் சொல்லப்படுகிறது’ என்று நான் அப்போதே சொல்லியிருந்தேன். சொன்னது மாதிரி, ஜே.பி.சி. அறிக்கையில் ஆ.ராசாவுக்கும் தி.மு.க-வுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டு விட்டது!''

''சொல்லும்!''

''மொத்தப் பழியையும் ஆ.ராசா மீது போட்டுவிட்டது ஜே.பி.சி. பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகிய இருவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதனால், அவர்களை விசாரிக்க வேண்டியதும் இல்லை என்று சொல்லிவிட்டார் இந்த விசாரணைக் குழுவின் தலைவர் சாக்கோ. இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவதற்கு முன், எப்படி வெளியானது என்பதில் இருந்து தி.மு.க. கோபப்படுகிறது. 'இது மிகவும் ரகசியமாக வைக்கப்பட வேண்டிய அறிக்கை. இந்தக் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்களுக்கு கிடைப்பதற்கு முன்னதாக மீடியாக்களுக்கு எப்படி கிடைத்தது? இதை சாக்கோதான் வெளியே கொடுத்து விட்டார். நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக இந்த அறிக்கை வெளிவந்தால் காங்கிரஸ் மீது எந்த விமர்சனமும் வராது. எல்லாரும் தி.மு.க-வை பிடித்துக்கொள்வார்கள் என்ற நினைப்பில் ரிலீஸ் செய்துள்ளனர்’ என்றாராம் ஆ.ராசா. 'இந்த அறிக்கை வெளிவந்த விதமே சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது. இதுபற்றி நாடாளுமன்ற உரிமைக் குழுவின் கவனத்துக்கு கொண்டுசெல்லலாம்’ என்றாராம் டி.ஆர்.பாலு!''

''கருணாநிதி என்ன சொன்னாராம்?''

''ரொம்பவே அப்செட் ஆகிவிட்டாராம் அவர். 'தினமும் ஏதாவது நடக்குதே?’ என்று நினைத்துக்கொண்டாராம் கருணாநிதி. டெல்லியில் இருந்து அவரிடம் ஆ.ராசா பேசி இருக்கிறார். 'என்னை அழைத்து விசாரிக்கவும் இல்லை. நான் எழுத்துபூர்வமாகக் கொடுத்த அறிக்கை பற்றி பிரதமரிடம் விளக்கம் கேட்கவும் இல்லை. அவர்களது நாலெட்ஜ்படிதான் நடந்தது என்பதை என்னால் நிரூபிக்க முடியும். அதற்கான ஆதாரங்களைக்கொண்ட 100 பக்க அறிக்கையை தயாரித்து வருகிறேன். நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பிவிடுவேன்’ என்று சொன்னாராம். சென்னை வந்த ஆ.ராசா, நேராக கோபாலபுரம் சென்று கருணாநிதியையும் சந்தித்தார். 'இந்த மாதிரியான நெருக்கடிகளை இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ?’ என்று பதற்றம் அடைந்தாராம் கருணாநிதி!''

''ம்!''

''2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன? எதையெல்லாம் தவிர்த்திருக்கலாம்? என்றெல்லாம் சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் அவசரக் கூட்டம் டெல்லியில் நடந்ததாம். அப்போது அதிகாரி ஒருவர் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினாராம். 'இந்த வழக்கு முக்கியமான கட்டத்தை அடைந்துள்ளது. எனவே, அனைத்து சாட்சிகளுக்கும் பிரத்யேக பாதுகாப்புத் தர வேண்டும். சாதிக் பாட்சாவின் மர்ம மரணம் மாதிரி வேறு எதுவும் இனி நடக்கக் கூடாது’ என்று சொன்னாராம் அந்த அதிகாரி!''

''யாரை மனதில்வைத்து அதைச் சொன்னாராம்?''

''தெரியவில்லை. ஆனால் சாட்சிப் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு ரகசியப் பாதுகாப்பு அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தப்போகிறார்களாம். கலைஞர் டி.வி-க்கு ஸ்பெக்ட்ரம் பணம் வந்ததா? என்ற சர்ச்சையின் அடுத்த கட்டமாக மே மாதம் 6-ம் தேதி கருணாநிதியின் மனைவி தாயாளு அம்மாள் டெல்லி கோர்ட்டில் சாட்சியம் அளிக்க வேண்டும். அவர் போவாரா? இல்லையா? என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும். 'தாயாளு அம்மாளுக்கு உடல்நிலை சரியில்லை. அவர் வெறும் கையெழுத்து மட்டும்தான் போட்டார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. அவருக்கும் கலைஞர் டி.வி-யின் அன்றாட நிர்வாகத்துக்கும் தொடர்பு இல்லை’ என்று, எழுத்து மூலமான வாக்குமூலம் தரலாமா என்று கருணாநிதி குடும்பத்தில் டிஸ்கஷன் நடக்கிறது. 'கலைஞர் டி.வி-யின் 60 சதவிகிதப் பங்குகள் தயாளு அம்மாள் பெயரில்தான் இருந்தது. போர்டு மீட்டிங்குகள், முக்கிய முடிவுகளை எடுத்த நேரத்தில் தாயாளு அம்மாளின் கையெழுத்து இருக்கிறதாம். அதனால், அவரால் சொல்லப்படும் சமாதானங்களை கோர்ட் ஏற்காது. அவர் நீதிமன்றத்துக்கு வந்துதான் ஆகவேண்டும்’ என்றும் சட்டப்பிரமுகர்கள் சொல்கிறார்கள். 'காங்கிரஸுடன் கூட்டணியில் நெருக்கமாக இருந்தபோது தயாளு அம்மாள் பெயரை சாட்சியாக ஆக்கினர். இன்று பிரிவு ஏற்பட்டுவிட்டதால் வேறு ஏதாவது செய்வார்களோ என்ற பயம் கருணாநிதி குடும்பத்துக்கு இருக்கிறது. பணம் வந்தது என்றால் அதைப் பயன்படுத்தியவர்கள், பரிவர்த்தனைகளில் நேரடியாக இறங்கியவர்கள் யார் என்று பார்த்து அவர்களைக் கைதுசெய்வதற்கான முஸ்தீபுகளில் சி.பி.ஐ. இறங்கலாம் என்றும் சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.''

''அப்படி இருக்குமா?''

''அரசியல் ரீதியாக டீல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் எதுவும் நடக்கலாம் அல்லவா? மத்திய அமலாக்கத் துறை கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு ஃபைல்களை தயார் செய்துகொண்டு இருப்பதைப் பார்த்தால் விஷயம் சீரியஸாகப் போகும்போலத் தெரிகிறது'' என்ற கழுகார் சிறிது இடைவெளிவிட்டு...

''மு.க.அழகிரி கடந்த சில நாட்களாக சென்னையில் வக்கீல்களுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறார். அழகிரியின் எம்.பி. பதவியை தீர்மானிக்கப்போவது அவரது வாக்குமூலமும் குறுக்கு விசாரணையும்தான்!'' என்றார்.

''இது என்ன புதுப் பிரச்னை?''

''பழைய விவகாரம்தான். இப்போது அது சூடுபிடிக்கிறது. வரும் 26-ம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்ற சாட்சிக் கூண்டில் மு.க.அழகிரி ஏற இருக்கிறார். கடந்த 2009-ம் ஆண்டு மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அழகிரி வெற்றிபெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி மார்க்சிஸ்ட் உறுப்பினர் மோகன் தொடுத்த வழக்கு அது. 'வாக்காளர்களுக்கு கவரில் வைத்து பணப் பட்டுவாடா செய்தார். ஆரத்தி எடுத்தவர்களுக்குப் பணம் தந்தார். இலவச வேஷ்டி-சேலைகள், பாத்திரங்கள் கொடுத்தார். ஆளும் கட்சி என்பதால் புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கித் தந்தார்’ என்பது போன்ற குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தினார் மோகன். சில மாதங்களில் மோகன் இறந்துபோனார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாற்று வேட்பாளரான லாசர் என்பவர் அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தினார். இப்போது, இந்த வழக்கு க்ளைமாக்ஸை எட்டியுள்ளது. அழகிரி தரப்புக்காக மூத்த வக்கீல்கள் சண்முகசுந்தரம் மற்றும் முன்னாள் அட்வகேட் ஜெனரல் டி.ஆர்.ராஜகோபாலன் ஆகியோர் மேற்பார்வையில் வக்கீல் அழகுராமன் ஆஜராகி வருகிறார்.''

''அடுத்த தேர்தலே வரப்போகிறதே?''

''தேர்தல் வழக்குகள் அப்படித்தானே நடக்கும்! சென்னை வந்த அழகிரி, திடீர் சந்திப்பாக மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனைச் சந்தித்துள்ளார். வாசனுக்கே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம்.''

''என்ன பேசினாராம் அழகிரி?''

''காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தேன். 'தி.மு.க. கூட்டணிக்கு விஜயகாந்த்தை அழைத்துவர ஸ்டாலின் முயற்சிக்கிறார். அரசியல் காய்களை எனக்கும் நகர்த்தத் தெரியும் என்று காட்ட நினைக்கிறார் அழகிரி. ஜி.கே.வாசன் தனிக்கட்சி ஆரம்பித்தால் அவர் தி.மு.க. அணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ என்று வாசனிடம் அழகிரி கேட்டுக்கொண்டதாகச் சொல்கிறார்கள். கட்சியில் தனக்கு ஏற்பட்ட நிலைமைகளையும் மனம்விட்டு பேசிக்கொண்டிருந்தாராம் அழகிரி. அதற்குச் சில நாட்களுக்கு முன், கனிமொழியும் ஜி.கே.வாசனைச் சந்தித்துள்ளார். அவருடைய கோரிக்கையும் இதுவாகத்தான் இருந்துள்ளது!''

''ஜி.கே.வாசன் என்ன சொன்னாராம்?''

''அவரிடம் இருந்தா வார்த்தையை வாங்க முடியும்? 'தேர்தலுக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கு. அதுக்குள்ள என்னவெல்லாம் நடக்குமோ?’ என்று, பட்டும்படாமலும் பேசி அனுப்பி வைத்தாராம்'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்!

படங்கள்: சு.குமரேசன், பா.காளிமுத்து

சொத்துக் கணக்கெடுப்பு!

மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் முதல்வராக ஜெயலலிதா இருப்பதால், அவருக்குத் தொந்தரவு கொடுக்கும் சில காரியங்களைச் செய்ய இருக்கிறார்களாம். ''முதல்வரைச் சுற்றி இருக்கும் அதிகாரிகளின் ஜாதகங்கள், சொத்துக் கணக்கு வழக்குகளை ஆராய்ந்து அறிக்கை தர உத்தரவு போட்டுள்ளது மத்திய அரசு. முதல்வரின் செயலாளர்களாக இருக்கும் ஷீலா ப்ரியா, ராம்மோகன் ராவ், முன்னாள் தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி ஆகியோர் பெயர் இதில் இடம்பெற்றுள்ளது'' என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.

பொன்.முத்து கொண்டாடிய பிறந்தநாள்

மதுரையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த சில நாட்களாக புதிது புதிதாக போஸ்டர்கள் முளைத்தன. 'இமையம் எழுந்தது... இதயம் நிறைந்தது...’ என்றும், '1973 முதல் பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தின் செயலாளர். திண்டுக்கல்லில் திருப்புமுனை மாநாடு நடத்தியவர். மதுரை கூடல் நகரில் தமிழகத்தை ஓரணியில் திரட்டிய மாநாடு, தமுக்கம் மைதானத்தில் திராவிட இயக்க பவள விழா மாநாடு, ஜான்சிராணி பூங்காவில் இளைஞரணி துவக்க நிகழ்ச்சி, மதுரையில் டெசோ மாநாடு, திண்டுக்கல்லில் டெசோ பேரணி, திருச்செந்தூருக்கு நீதி கேட்டு நெடும்பயணம், பலமுறை சிறை வாசம், ஒருவருட மிசாக் கொடுமை’ என்று, சாதனைகள்(!) பட்டியலிடப்பட்ட சுவரொட்டிகள் காணுமிடங்களில் எல்லாம் தெரிந்தன. முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கத்தின் 74-வது பிறந்தநாளுக்காகத்தான் இந்த அலப்பறை!

ஸ்டாலின் ஆதரவாளர்களான தளபதி, ஜெயராம், வேலுச்சாமி, குழந்தைவேலு, குருசாமி ஆகியோர் மாலை அணிவித்து வாழ்த்த, கேக் வெட்டி கொண்டாடினார் பொன்.முத்து. அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, கட்சியினருக்கு பிரியாணி விருந்தளித்தார். 'அ’னாவைத் தவிர, கட்சியில் மற்ற யாரும் தங்களை புகழ்ந்துக்கொள்ளக் கூடாது என்ற சூழல் நிலவிய மதுரையில், இதுநாள்வரை அமைதியாக அரசியல் செய்துவந்த பொன்.முத்துவுக்கு, திடீரென்று தைரியம் வந்தது எப்படி? ''அண்ணன் - தம்பிக்குள் ஏற்பட்டிருக்கும் ஈகோ பிரச்னையைப் பயன்படுத்தி எப்படியாவது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸீட் வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார் பொன்.முத்து. அதற்கான காய் நகர்த்தல்கள்தான் இதெல்லாம்'' என்று பொருமலுடன் சொல்கிறார்கள் தி.மு.க-வினர்.

மதுரையில் சுவாமி!

பி.ஜே.பி. கூட்டணியில் மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட சுப்பிரமணியன் சுவாமிக்கு ஆசை ஏற்பட்டுஉள்ளது. அத்வானி, வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட தலைவர்களிடம் தனது விருப்பத்தைவெளிப்படுத்திவிட்டாராம் சுவாமி.

ஸ்ரீரங்கத்துக் குறைகள்!

திருப்பதி மாதிரியே ஸ்ரீரங்கத்தையும் கொண்டுவர நினைக்கிறார் ஜெயலலிதா. சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்ததும் அன்னதான டோக்கன் தருவது, எங்கே திரும்பினாலும் குடிநீர் குழாய்கள் என பல்வேறு வசதிகளைச் செய்து கொடுத்துள்ளார். ஆனால், கோயில் பிரசாதம் பற்றி பக்தர்களிடம் சில கவலைகள் இருக்கின்றன. ''150 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் இரண்டு விதமான பிரசாதப் பைகள் விற்கின்றனர். அதில், எண்ணெய் வாடை அதிகமாக அடிக்கிறது'' என்கிறார்கள். மேலும், ஸ்ரீரங்கத்துக்கு என பிரத்யேகப் பேருந்து நிலையம் இல்லை!

''நான்தான் தலைவர்!''

வன்னியர் இளைஞர் கலாசார விழாவில் பங்கேற்பதற்காக கடந்த 22-ம் தேதி சென்னை வந்திருந்தார் உ.பி. முதல்வரும் முலாயம் சிங்கின் மகனுமான அகிலேஷ் யாதவ். ஜெயலலிதா ஸ்டைலில் இலவச லேப்டாப்களை மாணவர்களுக்கு அளித்து வரும் அகிலேஷ் யாதவ், நிகழ்ச்சி முடிந்த பிறகு தலைமைச் செயலகத்துக்குச் சென்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார்.

அகிலேஷ் யாதவ் கலந்துகொண்ட வன்னியர் இளைஞர் கலாசார விழாவில் சின்ன சலசலப்பு. சமாஜ்வாடி கட்சியின் தமிழகத் தலைவராக இருப்பவர் இளங்கோவன். இவர், முலாயம் சிங்கால் நியமிக்கப்பட்டவராம். ஆனால், தான்தான் தலைவர் என்று சொல்லிக்கொண்டு இன்னொரு பக்கம் தாமோதரன் என்பவர் செயல்பட்டு வந்தார். வன்னியர் விழாவில் இளங்கோவனுக்கு மேடையில் ஸீட் போட்டிருந்தனர். அதனால், தாமோதரன் மேடையின் ஓரத்திலேயே நின்றுகொண்டிருந்தார். விழா முடிந்ததும் ''நான்தானே மாநிலத் தலைவர். எனக்கு ஏன் ஸீட் போடவில்லை. நீ எப்படி இருக்கையில் அமரலாம்?'' என, இளங்கோவனிடம் சண்டை போட்டிருக்கிறார் தாமோதரன். இருவருமே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். விவகாரம் இப்போது போலீஸ் ஸ்டேஷன் வரை போயிருக்கிறது.

பா.ம.க-வின் பி.ஜே.பி. பாசம்!

'திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை’ என்று அறிவித்துவிட்டு தனித்துப் போட்டியிடும் திட்டத்துடன் இருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஆனால் அவர் மகன் அன்புமணியோ, 'இதெல்லாம் ரிஸ்க்’ என்று சொல்கிறாராம். தனக்கு வேண்டப்பட்ட டெல்லி பி.ஜே.பி. தலைவர்களுடன் அவர் இப்போதே பேச்சுவார்த்தையைத் தொடங்கி விட்டார். காங்கிரஸின் பார்வையும் பா.ம.க. மீது பதிந்துள்ளதாம். 'சோனியாவின் ஆலோசகர் அகமது படேலும் குலாம்நபி ஆசாத்தும் அன்புமணிக்கு நெருக்கமான நண்பர்கள். எனவே, அவர்களை மீறி பா.ம.க. முடிவெடுக்காது’ என்கிறார்கள்.

விஜயகாந்த் புது நிபந்தனை!

காங்கிரஸும் தி.மு.க-வும் இணைந்து இருந்தால் அந்தக் கூட்டணியில் ஐக்கியம் ஆகலாம் என்று நினைத்திருந்தார் விஜயகாந்த். இரண்டும் பிரிந்துவிட்டதால் விஜயகாந்த் பாடு இப்போது படுதிண்டாட்டமாக இருக்கிறது. காங்கிரஸ் சார்பிலோ, தி.மு.க. வட்டாரத்தில் இருந்தோ யாராவது பேசினால், 'காங்கிரஸும் தி.மு.க-வும் சேர்ந்து வாங்க... அப்ப பேசலாம்’ என்று சொல்ல ஆரம்பித்துள்ளாராம். இரண்டு கட்சிக்கும் இது சிக்கலாகிவிட்டது. இந்த நிலையில், தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் கருணாநிதியும் விஜயகாந்த்தும் எதிர்பாராத விதமாக சந்தித்துக்கொண்டனர். பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்டனர். இதை வைத்து நிருபர்கள் விஜயகாந்த்தை கேட்க, 'தற்செயலா பாத்தேங்க. அதுக்காகத் தலையைத் திருப்பிட்டா போக முடியும்’ என்றாராம்.