லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).

அன்புமணிக்கு மந்திரி பதவி வாங்கும்போது ராமதாஸுக்கு தி.மு.க. இனித்தது. இப்போது கசக்கிறதா?

ஆதாயம் அடையும்போது கட்டி அணைப்பதும், அது இல்லாமல் போகும்போது காலை வாரிவிடுவதும்தானே அரசியல்?

பி.கம்பர் ஒப்பிலான், சென்னை-117.

அம்மா உணவகம் தமிழகம் முழுவதும் செயல்முறையில் உள்ளதா?

சென்னையில் உருவாகி பெயர் வாங்கிக் கொடுத்ததால், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் திறக்க இருக்கிறார்கள். ஏழை களுக்கு மனக்கவலையைக் குறைப்பதாக இருக்கின்றன இந்த உணவகங்கள். எம்.ஜி.ஆருக்கு சத்துணவுத் திட்டம் கொடுத்த, காலம் கடந்து நிற்கும் புகழைப்போல தனக்கு இது அமைய வேண்டும் என்று நினைக்கிறார் ஜெய லலிதா.

கி.முருகன், மாப்பிள்ளைக்குப்பம்.

1929-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறப்புவாய்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது வருத்தப்பட வேண்டிய நிகழ்வா? வரவேற்க வேண்டிய நிகழ்வா?

ராஜா சர். அண்ணாமலை செட்டியாரும் அவரது புதல்வர் ராஜா சர். முத்தையா செட்டியாரும் கண்ட கனவை நிறைவேற்றும் கல்வி நிறுவனமாக அது காலப்போக்கில் செயல்படவில்லை. 'அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எந்தக் குடும்பத்துக்கும் சொந்தமானது அல்ல. இது தமிழ் மக்களின் சொத்து. இதை தமிழ் மக்கள் பாதுகாத்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று ராஜா சர். முத்தையா செட்டியார் சொல்லியிருக்கிறார். அதுதான் கடைசியில் நடந்துள்ளது.

பல்கலைக்கழகம் அதனுடைய நோக்கத்துக்கு மாறாக செயல்படுவதாக 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு சில ஆசிரியர்கள் புகார்களைத் தெரிவித்தனர். அப்போதே அதைத் தடுக்கும் முடிவை அன்றைய ஆட்சியாளர்கள் எடுக்கவில்லை. தனியார் கல்வி நிறுவனங்கள் தன் போக்கில் எதையும் செயல்படுத்தலாம் என்று நினைத்தால், அதை அரசாங்கம் அனுமதிக்காது என்பதும் இதன்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

குமுதினிதேவி அன்பழகன், வடலூர்.

கழுகார் பதில்கள் புத்தகமாக வெளிவருமா?

முதல்பாகம் வெளிவந்து விட்டதே!

எஸ்.ஆர்.ராஜேஷ், சென்னை-94.

இந்திராகாந்தி - காமராஜர், ராஜீவ் காந்தி - கருப்பையா மூப்பனார், ராகுல் காந்தி - ஜி.கே.வாசன்... ஒப்பிடுக!

மூன்று நட்புமே உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் இருந்தது இல்லை. இந்திராவின் தலைமையை எதிர்த்து வெளியேறியவர் காமராஜர். அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டபோது காமராஜர் மனம் கொந்தளித்துப்போனார். இந்திராவின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்துப் பிரசாரப் பயணம் செய்யத் திட்டமிட்டு இருந்த நிலையில்தான் காமராஜர் இறந்து போனார். இந்திரா காங்கிரஸில் அவரைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் ஆலோசனைகளை அவர் ஏற்கவில்லை.

திராவிடக் கட்சிகளை புறந்தள்ளி காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என்று ராஜீவ் காந்தியிடம் வலியுறுத்தியவர் ஜி.கே.மூப்பனார். ஆனால், 1989 தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. இது, ராஜீவ் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியது 'தோல்விக்கான காரணம் என்ன?’ என்று வரிசைப்படுத்தி வாழப்பாடி ராமமூர்த்தி எழுதிய கடிதம் அவருக்குப் பிடித்தது. எனவே, மூப்பனாரைப் புறம்தள்ளி... வாழப்பாடி ராமமூர்த்தியின் பேச்சைக்கேட்டு அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தார் ராஜீவ். இதனால் நொந்துபோனார் மூப்பனார். ராஜீவ் மரணத்துக்குப் பிறகு வந்த நரசிம்மராவும் இதே வழியில் பயணப்பட்டதால் மூப்பனாரும் விலகி த.மா.கா-வை ஆரம்பித்தார்.

இப்போது, ராகுல் காந்திக்கும் ஜி.கே.வாசனுக்கும் நடந்துவரும் கருத்து மோதல்கள் அனைவரும் அறிந்ததுதானே? ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையின் நிலைப்பாட்டை வாசன், உள்ளுக்குள் இருந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.

டெல்லித் தலைமைக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் எப்போதும் முரண்பாடு இருந்தே வந்துள்ளது.

வி.பரமசிவம், சென்னை-25.

சென்னையில் ஒரே நேரத்தில் இரண்டு புத்தகக் கண்காட்சிகள் நடப்பது பல சந்தேகங்களுக்கு இடமளித்துள்ளதே?

ஒரே சினிமா ஒரே ஊரில் எத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது? அதேமாதிரி புத்தகக் கண்காட்சிகள் எத்தனை நடந்தால் என்ன? புத்தகங்கள் பரவுவது நல்லதுதானே?

வி.ஹரிகிருஷ்ணன், திருச்சி-17.

ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் பிரதமருக்கோ, நிதி அமைச்சருக்கோ தொடர்பு இல்லை என்று, ஜே.பி.சி. அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இதனால், மக்களுக்கு குழப்பம் அதிகமாக ஏற்படுகிறதே?

'ஆ.ராசாதான் அனைத்துக்கும் காரணம்’ என்கிறது ஜே.பி.சி. அறிக்கை. 'இல்லை, இது பிரதமருக்கும் நிதி அமைச்சருக்கும் தெரியும்’ என்கிறார் ஆ.ராசா. அதற்கு அவர் கொடுக்கும் ஆதாரங்களும் நம்பக்கூடியவையாகத்தான் இருக்கின்றன. மொத்தத்தில் இந்த மூன்று பேருக்கும் இதில் சம்பந்தம் இருக்கிறது. எனவே, பொதுமக்களுக்குக் குழப்பம் வரத் தேவை யில்லை.

அர்ஜுனன்.ஜி., திருப்பூர்-7.

பீகாருக்கு சிறப்பு நிதியாக 12 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதே?

! இதனால்தான், நரேந்திரமோடிக்கு எதிராக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பேசுகிறாரோ?

எஸ்.பி.விவேக், சேலம்.

இன்றைய இளைய தலைமுறையினருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

'உலகத்தில் மிகக் கஷ்டமான காரியம் சிந்தனை செய்வது’ என்கிறார் எமர்சன். எனவே, சிந்தனை செய்யுங்கள்!

' போராட்டத்தில்தான் இன்பம் உண்டு’ என்கிறார் மார்க்ஸ். எனவே, நல்ல விஷயங்களுக்காகப் போராடுங்கள்!

'வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஒரு முறையாவது சந்தேகிக்க வேண்டும்’ என்கிறார் டெஸ்கார்ட்டஸின். சந்தேகப்படுங்கள்!

'அன்பில் சிறந்த தவமில்லை’ என்கிறார் பாரதி. அன்பு செலுத்துங்கள்!

எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

தன் மூன்று பிள்ளைகளையும் ஒரேநாளில் அழைத்து ஒற்றுமையாக இருங்கள் என்று கருணாநிதி புத்திமதி சொல் லக் கூடாதா? சொன்னால் பலன் இருக்காதா?

ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளையும் சேர்த்துவைத்து அவரால் பேச முடியவில்லை என்ப துதானே சிக்கலே!

சரண்சுகன் சித்தப்பு, கருப்பம்புலம்.

சபாநாயகர் கலக்குகிறாரே?

என்ன கலக்குகிறார் என்று புரியவில்லை. ஆனால், கலங்குகிறார். எதிர்க் கட்சிகளுக்கு வாய்ப்புக் கொடுத்து அம்மாவின் கோபத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதுதான் அவரது கலக்கத்துக்குக் காரணம்!