Published:Updated:

காஷ்மீர் விவகாரத்தை சர்தார் பட்டேலிடம் கொடுத்திருந்தால் அன்றே தீர்ந்திருக்கும்: அமித் ஷா

Vikatan Correspondent

பிதார்: காஷ்மீர் ஒன்றிணைப்பு விவகாரத்தை ஜவஹர்லால் நேருவுக்கு பதில் சர்தார் பட்டேலிடம் கொடுத்திருந்தால் அன்றே தீர்ந்திருக்கும் என்று அமித் ஷா கூறி உள்ளார்.

கர்நாடகா மாநிலம் கோர்தா கிராமத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும், வீரமரணம் அடைந்தவர்களுக்கு நினைவகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பா.ஜ.க. தலைவர் அமித் ஷா பேசும்போது, ''பிரிவினைக்கு பின் காஷ்மீரின் பெரும் பகுதி பாகிஸ்தானிடம் சென்று விட்டதால், சிறப்பு அந்தஸ்து என்ற நிலையில் தனி சட்டம் மற்றும் 370 பிரிவு ஆகியவற்றை இயற்றும் சூழ்நிலை நாட்டிற்கு ஏற்பட்டுள்ளது சோகமானது.

சுதந்திரத்திற்கு பின்பு மாநிலங்களை ஒன்றிணைப்பதில் தைரியம் கொண்டவரும், ஐதராபாத் மற்றும் ஜுனாகார் ஆகியவற்றை ஏற்று கொண்டவருமான சர்தார் பட்டேலிடம், ஜவஹர்லால் நேருவுக்கு பதிலாக காஷ்மீர் ஒன்றிணைப்பு விவகாரத்தை கொடுத்திருந்தால் காஷ்மீர் பிரச்னை அன்றே தீர்ந்து இருக்கும்.

தேசத்தின் மீதான பட்டேலின் ஈடுபாடு என்பது அவருக்கு பின்னர் அவரின் குடும்பத்தினர் யாரும் அரசியலுக்குள் நுழையவில்லை.  அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது.  சட்டம் படித்த முக்கிய நபராக இருந்தாலும், அவரது வங்கி கணக்கில் 150 ரூபாய்தான் அவர் மரணம் அடைந்தபோது இருந்தது" என்றார்.