Published:Updated:

சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல்: லடாக் பகுதியில் ராணுவ வீரர்கள் குவிப்பு!

Vikatan Correspondent

ஜம்மு: சீன ராணுவம் மீண்டும் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளதால், அந்த பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

சீன ராணுவம் லடாக் பகுதியில் மேலும் 100 வீரர்களை குவித்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. அதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் தனது படைகளை அங்கு குவித்து வருகிறது. லடாக்கின் சுமர் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் 250 பேர் ஏற்கனவே அத்துமீறி முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், அந்தப் பகுதியில் மேலும் 100 வீரர்களை சீன ராணுவம் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாட்டு ராணுவத்தின் தரப்பில் ஏற்கனவே கொடி அமர்வுகள் நிகழ்ந்த போதிலும், சீனப் படைகள் பின்வாங்காமல் அங்கேயே தங்கியுள்ளனர். இதையடுத்து இந்திய ராணுவமும் தனது படைகளை சுமர் பகுதியில் குவித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, இரு தரப்பும் மீண்டும் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,  சீன அதிபர் இந்தியா வந்துள்ள நிலையில், அந்நாட்டு ராணுவத்தின் அத்துமீறல், இந்திய ராணுவத்தினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.