Published:Updated:

ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டி அமைச்சர் ரமணா சிறப்பு பூஜை!

Vikatan Correspondent
ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டி அமைச்சர் ரமணா சிறப்பு பூஜை!
ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டி அமைச்சர் ரமணா சிறப்பு பூஜை!
ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டி அமைச்சர் ரமணா சிறப்பு பூஜை!

பெரம்பலூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவருக்கு சாதகமாக தீர்ப்பு வர வேண்டி அமைச்சர் பி.வி.ரமணா சிறப்பு பூஜை நடத்தினார்.

தமிழக அமைச்சராக இருந்து பதவி பறிக்கப்பட்டவர் பி.வி.ரமணா. கடந்த சில நாட்களுக்கு முன் மாதவரம் மூர்த்தியிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டு பி.வி.ரமணா மீண்டும் அமைச்சராக்கப்பட்டார்.

இந்நிலையில், புதிதாக பால்வளத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பி.வி.ரமணா, பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டாபுரம் வாலீஸ்வரர் ஆலயத்திற்கு இன்று காலை 10 மணியளவில் தனது குடும்பத்தினருடன் வந்தார்.

அங்கு, பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வருவதற்காக சிறப்பு பூஜைகள் நடத்தினார்.

சி.ஆனந்த குமார்