Published:Updated:

இடைத்தேர்தல் தோல்வி: மோடி பிம்பம் கலைந்ததா?

Vikatan Correspondent
இடைத்தேர்தல் தோல்வி:  மோடி பிம்பம் கலைந்ததா?
இடைத்தேர்தல் தோல்வி: மோடி பிம்பம் கலைந்ததா?
இடைத்தேர்தல் தோல்வி:  மோடி பிம்பம் கலைந்ததா?

த்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 33 சட்டசபை தொகுதிகள் மற்றும் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட தோல்வி பல்வேறு விமர்சனங்களை கிளப்பி உள்ளது.

உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடைபெற்ற 11 சட்டசபை தொகுதிகளில் ஆளும் சமாஜ்வாதி கட்சி 8 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. 3 தொகுதிகளில் மட்டும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. இதில் 10 தொகுதிகள் பா.ஜனதா வசம் இருந்தன.
 
 கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா இங்கு அபார வெற்றி பெற்ற நிலையில், மோடி அலையே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டது. இந்நிலையில்  பா.ஜனதாவினர் கூறுவந்த மோடி அலை தற்போது எங்கே போய்விட்டது என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாநில தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதே நிலைதான் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மற்றும் ராஜஸ்தானிலும் ஏற்பட்டுள்ளது.  

இந்த தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்க்காதது என பா.ஜனதா கூறியுள்ள நிலையில், மோடி ஆட்சி மீதான மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனதன் காரணமாகவே இந்த தோல்வி ஏற்பட்டுள்ளதாகவும், மோடி மீதான பிம்பம் கலைந்துபோனதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் உள்ளூர் பிரச்னைகளின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த தேர்தலை மோடியின் ஆட்சிக்கான மதிப்பீடாக பார்க்க தேவையில்லை என பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? இது குறித்த உங்களது கருத்துக்களை முன்வைத்து விவாதிக்கலாம்.