Published:Updated:

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கள்ள ஓட்டு போட்ட அ.தி.மு.க. நகர செயலாளர்!

Vikatan Correspondent
உள்ளாட்சி இடைத்தேர்தல்: கள்ள ஓட்டு போட்ட அ.தி.மு.க. நகர செயலாளர்!
உள்ளாட்சி இடைத்தேர்தல்: கள்ள ஓட்டு போட்ட அ.தி.மு.க. நகர செயலாளர்!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நகர செயலாளர் கள்ள ஓட்டு போட்டதையடுத்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கள்ள ஓட்டு போட்ட அ.தி.மு.க. நகர செயலாளர்!

ராமநாதபுரம் நகராட்சி தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று (18ஆம் தேதி) நடந்து வருகிறது. இதற்கென நகராட்சியில் உள்ள 58 வாக்கு சாவடிகளும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. வாக்குசாவடிகள் அனைத்தும் நேற்று காலை முதல் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. ஆனால் வாக்குபதிவு நாளான இன்று காலை முதல் போதுமான போலீசார் இன்றி முழுக்க, முழுக்க அ.தி.மு.க.வினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கள்ள ஓட்டு போட்ட அ.தி.மு.க. நகர செயலாளர்!

ராமநாதபுரம் நகராட்சிக்கு தொடர்பில்லாத பகுதிகளை சேர்ந்த பல அ.தி.மு.க.வினர் வாக்கு மையங்களின் உட்பகுதிகளுக்குள் நின்று கொண்டு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேன்வாஸ் செய்து கொண்டு இருந்தனர். இதனை தடுக்கும் வகையில் அங்கு போதிய போலீசாரோ, பா.ஜ.க.வினரோ இல்லாத நிலையே நீடித்தது.

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கள்ள ஓட்டு போட்ட அ.தி.மு.க. நகர செயலாளர்!

இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்கு பதிவு மிகவும் மந்தமான நிலையிலேயே இருந்தது. இதனால் பல வாக்கு சாவடி மையங்கள் வெறிச்சோடி கிடந்தன. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அ.தி.மு.க.வினர், வாக்களிக்க வராத பலரது வாக்குகளை வெளியூரை சேர்ந்தவர்களை கொண்டு வாக்களிக்க வைத்தனர்.

இதில் ராமேஸ்வரத்தில் வசித்து வரும் அ.தி.மு.க. நகர மீனவரணி செயலாளரான வஸ்தாவி என்ற வெற்றிவேல், ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல் நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடி ஒன்றில் முகம்மது என்ற வாக்களர் பெயரில் கள்ள ஓட்டு போட்டார். இவர் கள்ள ஓட்டு போட்டது செய்தியாளர்கள் சிலரின் கேமராவில் சிக்கியது. இதே நிலையே நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் நீடித்தது.

உள்ளாட்சி இடைத்தேர்தல்: கள்ள ஓட்டு போட்ட அ.தி.மு.க. நகர செயலாளர்!

அ.தி.முக.வினர் கள்ள ஓட்டு பதிவு செய்வது குறித்த அறிந்த பா.ஜ.க. வேட்பாளர் துரைகண்ணன் வாக்கு சாவடிகளுக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் கள்ள ஓட்டு போடுவது குறித்து போலீசாரிடம் முறையிட்டார். மேலும் முறைகேடாக நடக்கும் இந்த தேர்தலை ரத்து செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்தார். இதையடுத்து ராமநாதபுரம்-மதுரை சாலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மறியலில் ஈடுபட முயன்ற பா.ஜ.க. நிர்வாகிகளிடம் போலீசார் தொட்ர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இரா.மோகன்


படங்கள்: உ.பாண்டி