Published:Updated:

இந்திய - சீன எல்லையில் அமைதியை பரமாரிப்பது மிகவும் முக்கியம்: பிரதமர் மோடி

Vikatan Correspondent
இந்திய -  சீன எல்லையில் அமைதியை பரமாரிப்பது மிகவும் முக்கியம்: பிரதமர்  மோடி
இந்திய - சீன எல்லையில் அமைதியை பரமாரிப்பது மிகவும் முக்கியம்: பிரதமர் மோடி
இந்திய -  சீன எல்லையில் அமைதியை பரமாரிப்பது மிகவும் முக்கியம்: பிரதமர்  மோடி

புதுடெல்லி: இந்திய -  சீன எல்லையில் அமைதியை பரமாரிப்பது மிகவும் முக்கியமானது என்றும், இரு நாடுகளும்  ஒருவரை ஒருவர் மதித்து நடப்பது அவசியம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று  அதிகாரப்பூர்வ பேச்சு வார்த்தை நடத்தினார். சந்திப்புக்கு பிறகு இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் இந்தியா - சீனா இடையே  வர்த்தக மேம்பாடு, கலாச்சார பரிமாற்றங்கள், ரயில்வே துறையில் ஒத்துழைப்பை நீட்டிப்பது உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

அதனைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, " பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே சீன அதிபர் இந்தியா வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருநாடுகளுக்கும் இடையிலான உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சீனா, இந்தியாவின் மிகப்பெரிய அண்டை நாடாக திகழ்கிறது. இந்திய -  சீன எல்லையில் அமைதியை பரமாரிப்பது மிகவும் முக்கியமானது.

இரு நாட்டு உறவில் நம்பிக்கை ஏற்படுவது மிகவும் அவசியமானது. எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். இரு நாடுகளுக்கும் இடையே வர்ததகம் குறைந்துவிட்டதை சீன அதிபரிடம் சுட்டிக்காட்டினேன்.முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். இதற்கு சீன தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் மதித்து நடப்பது அவசியம். இந்திய ரயில்வே துறையில் சீன முதலீடுகள் வருங்காலத்தில் அதிகரிக்கும். சீனா தனது சந்தையில், இந்திய பொருட்களை விற்பனை செய்ய கூடுதல் அனுமதி தரவேண்டும். இருநாடுகளுக்கும்  இடையே கலாச்சர சுற்றுலாவை அதிகப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். கங்கை உற்பத்தியாகும் மானசேவார் சென்றடைய எளிய சாலை பாதையை அமைக்க சீனாவிடம் வலியுறுத்தியுள்ளோம்.

சீன முதலீடுகள் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினேன். ஆக்கப்பூர்வமான அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினோம். எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சிக்கலான பிரச்சினைகளில் வெளிப்படையான பேச்சுவார்த்தைக்கு சீனா முன் வர வேண்டும். 20 பில்லியன் டாலர் மதிப்பில் இரண்டு சீன தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மின் உற்பத்திக்கான அணு சக்தி பயன்பாடு குறித்து இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே கலாச்சார சுற்றுலாவை அதிகப்படுத்த முன்னுரிமை அளிக்கவேண்டும்" என்றார்.