Published:Updated:

'மேக் இன் இந்தியா' பிரசாரம்: 25ஆம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்!

Vikatan Correspondent
'மேக் இன் இந்தியா' பிரசாரம்: 25ஆம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்!
'மேக் இன் இந்தியா' பிரசாரம்: 25ஆம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்!
'மேக் இன் இந்தியா' பிரசாரம்: 25ஆம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்!

புதுடெல்லி: இந்திய பொருட்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதற்கான 'மேக் இன் இந்தியா' பிரசாரத்தை 25ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்குகிறார்.

கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், ''இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகம் முழுவதும் செல்ல வேண்டும். அதற்காக நமது தயாரிப்புகள் குறைபாடுகள் இல்லாத வகையில் இருக்க வேண்டும். இந்தியா பொருட்களை இறக்குமதி செய்யும் நாடாக இல்லாமல், ஏற்றுமதி செய்யும் நாடாக மாற வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

அவரின் இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக 'மேக் இன் இந்தியா' என்ற பெயரிலான பிரசாரம் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் வரும் 25ஆம் தேதி நடக்கிறது. இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், நிர்வாக இயக்குநர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 'மேக் இன் இந்தியா' பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார். மேலும், மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட மாநில தலைநகரங்களிலும் இந்த பிரசாரம் தொடங்கப்படுகிறது.

அதேபோல், இந்தியாவின் நேரத்துடன் ஒப்பிட்டு போகும் மற்ற நாடுகளிலும் இந்த பிரசாரம் தொடங்கப்படுகிறது. வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதோடு, உள்நாட்டில் வேலைவாய்ப்பை பெரிய அளவில் பெருக்கும் நோக்கத்துடன் இந்த பிரசாரம் நடத்தப்படுகிறது.