Published:Updated:

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் சில நாட்கள்! (மினி தொடர்: பகுதி- 16)

Vikatan Correspondent
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் சில நாட்கள்! (மினி தொடர்: பகுதி- 16)
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் சில நாட்கள்! (மினி தொடர்: பகுதி- 16)

‘‘நாங்கள் லாபம் அடைய மன்மோகன் சிங்தான் காரணம்!’ - இளவரசி, சுதாகரன் வழக்கறிஞர்!

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இளவரசி, சுதாகரன் தரப்பு வழக்கறிஞர் அமீத் தேசாய் எடுத்து வைத்த வாதங்கள் இன்றும் தொடர்கிறது...

‘‘சசிகலா தொடக்க காலம் முதலே பல நிறுவனங்களை நடத்தி வந்தார். இளவரசி இளம் வயதிலேயே

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் சில நாட்கள்! (மினி தொடர்: பகுதி- 16)

கணவனை இழந்து கைக்குழந்தைகளோடு பிழைக்க வழியில்லாமல் ஜெயலலிதா வீட்டில் தங்கியிருந்தார். சுதாகரன் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு இருந்தார். இவர்கள் தொழில் தொடங்க சசிகலா உதவி செய்துள்ளார். நலிந்தோருக்கு உதவிசெய்து அவர்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்வது சமூகத்தில் வரவேற்கத்தக்கது. இது குற்றமாகாது.

பொருளாதார வல்லுநரான மன்மோகன் சிங் 1991-ல் இந்தியாவின் நிதி அமைச்சராக பொறுப்பேற்றதும், புதிய பொருளாதாரக் கொள்கைகளை வகுத்தார். அதனால், அந்தக் காலகட்டத்தில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி கண்டது. இந்தியாவில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பல தொழிற்சாலைகள் பன்மடங்கு லாபம் ஈட்டியது. அந்த நேரத்தில் என் மனுதாரர்கள் பங்குதாரர்களாக இருந்த நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைத்தது. குறிப்பாக சூப்பர் டூப்பர் டி.வி-யில் பல லட்சம் லாபம் கிடைத்தது. இதில் கிடைத்த லாபத்தால் பல சொத்துகளும் நிறுவனங்களும் தொடங்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் எங்கள் நிறுவனங்கள் மட்டும் பெரிய லாபம் ஈட்டியது என்று சொல்வது தவறானது’’ என்று தனது வாதத்தை எடுத்து வைத்தார்.

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் சில நாட்கள்! (மினி தொடர்: பகுதி- 16)

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் வழக்கறிஞர்களின் இறுதி வாதம் நிறைவடைந்ததை அடுத்து, ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமார், தனது நிறைவு தொகுப்புரையை வாசிக்க வேண்டும். ஆனால் குமார் தன்னுடைய நிறைவு தொகுப்புரையை வாசிக்க அன்றைய தினம் நீதிமன்றத்துக்கு வராததால், அடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் மராடியை நிறைவு தொகுப்புரையை வாசிக்க அழைத்தார் நீதிபதி குன்ஹா. ஆனால் மராடி, ‘‘என்னுடைய சீனியர் பவானி சிங்கும் உயர் நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டதால் நாங்களும் வாதிட முடியாது’’ என்றார்.

இதனால் கோபம் அடைந்த நீதிபதி குன்ஹா, ‘‘இரு தரப்பு இறுதி வாதங்கள் முடிந்துவிட்டதால் தீர்ப்புக்காக ஒத்தி வைத்துவிடுவேன். இருந்தாலும், இன்று 11 டு 5 வரை அமர்ந்திருப்பேன். இன்று வந்து நிறைவுரையை முடிக்க வேண்டும்’’ என்றார். 3 மணி வரை காத்திருந்த நீதிபதி குன்ஹா, ‘‘நாளை 28 ஆம் தேதி குமார் தன்னுடைய நிறைவு தொகுப்புரையை முடிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து நாளையே அரசு தரப்பும் நிறைவு தொகுப்பைத் தொடங்க வேண்டும்’’ என்றார்.

ஆகஸ்ட் 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு ஜெயலலிதா வழக்கறிஞர் குமார், சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் மற்றும் செந்தில், பன்னீர்செல்வம், அசோகன், அன்புக்கரசு, கருப்பையா, தனஞ்செயன், பரணிகுமார் என அனைவரும் ஆஜர் ஆனார்கள். சரியாக 11 மணிக்கு நீதிபதி குன்ஹா வந்தமர்ந்தார். 27

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு...தீர்ப்புக்கு இன்னும் சில நாட்கள்! (மினி தொடர்: பகுதி- 16)

ஆம் தேதி யாரும் வராததால் கோபமாகவே இருந்தார் நீதிபதி.

குமார் இறுதி வாதத்தின் நிறைவு தொகுப்புரையை வாசிக்கத் தொடங்கினார். ‘‘கம்பெனி சட்டம் 159, 209, 210, 213 விதிகளை 32 நிறுவனங்களும் கடைப்பிடித்திருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் கம்பெனியில் ஆடிட்டிங் செய்து அதற்கு முறையாக வருமான வரிகளையும் கட்டியிருக்கிறார்கள். எங்களுடைய ஆவணங்களை ஜெராக்ஸாக கொடுக்க வருமான வரித்துறை ஒரிஜனல் ஆவணங்கள் தராததால், நகல் ஆவணங்களை சமர்ப்பித்து இருக்கிறோம். ஐட்டம் நம்பர்...’’ என்று சொல்லிக்கொண்டே போக... குறுக்கிட்ட நீதிபதி குன்ஹா, ‘‘என்ன ஐட்டம் நம்பரா? இன்று நடப்பது வாதம் கிடையாது. நிறைவுரைதான். இன்னும் 15 நிமிடம்தான் உங்களுக்கு இருக்கிறது. அதற்குள் உங்கள் முடிவுரையை முடிக்க வேண்டும்’’ என்றார்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் அனைவரும் நீதிபதியை நோக்கி, ‘‘எங்களுக்கு இன்னும் நேரம் கொடுக்க வேண்டும்’’ என்று முறையிட்டனர்.

நீதிபதி ஒப்புக்கொள்ளாததால் இறுதியாக, ‘‘தன் வருமானத்தில் 10 சதவிகிதம் அதிகமாக சொத்துகள் வாங்கி இருந்தால்தான் வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. என் மனுதாரர் தன் வருமானத்துக்கு 10 சதவிகிதம் குறைவாகத்தான் சொத்துகளை வாங்கியிருக்கிறார். அதனால், இந்த வழக்கை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும். இது அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாகப் போடப்பட்டுள்ளது’’ என்றார்.

சரியாக 12 மணி ஆனதும், குமாரின் இறுதி வாதத்தின் நிறைவு தொகுப்புரையை முடிக்க செய்த நீதிபதி குன்ஹா, ‘இனி சொல்ல விரும்புவதை இன்றே எழுத்துபூர்வமாகக் கொடுக்க வேண்டும். இன்று கொடுத்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்’ என்று உத்தரவிட்டார்.

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி

அரசு வழக்கறிஞரின் நிறைவுரை நாளை...