Published:Updated:

மகாராஷ்ட்ரா தேர்தல்: சிவசேனாவுக்கு, பா.ஜ.க. 12 மணி நேர கெடு!

Vikatan Correspondent
மகாராஷ்ட்ரா தேர்தல்: சிவசேனாவுக்கு, பா.ஜ.க. 12 மணி நேர கெடு!
மகாராஷ்ட்ரா தேர்தல்: சிவசேனாவுக்கு, பா.ஜ.க. 12 மணி நேர கெடு!
மகாராஷ்ட்ரா தேர்தல்: சிவசேனாவுக்கு, பா.ஜ.க. 12 மணி நேர கெடு!

மும்பை: மகாராஷ்ட்ரா தேர்தலில் தொகுதி உடன்பாடு தொடர்பாக கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கு, பா.ஜ.க. 12 மணி நேரம் கெடு விதித்துள்ளது.

வருகிற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டிற்கான பேச்சுவார்த்தைகளை அம்மாநில அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன.

இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் நீண்ட காலம் கூட்டணி கட்சிகளாக விளங்கும் சிவசேனாவுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே முதல்வர் பதவி மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் மோதல் நிலவி வருகிறது.

கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் பதவி தங்களுக்குத்தான் என்பதில் சிவசேனா பிடிவாதமாக உள்ளது. மொத்தமுள்ள 288 சட்டசபை தொகுதிகளில் தங்களுக்கு 135 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி வருகிறது.

ஆனால் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, பா.ஜனதாவுக்கு 135 சீட்கள் கொடுப்பது என்பது சாத்தியம் இல்லை. அதிக இடங்களுக்கு ஆசைப்படுவது கூட்டணி முறிவுக்கு வழிவகுத்துவிடும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், சிவசேனாவுக்கு, பா.ஜ.க. 12 மணிநேர கெடு விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம், இன்னும் 12 மணிநேரத்தில், பா.ஜ.க.-சிவசேனா கூட்டணி அமையுமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்பது தெரிந்து விடும்.

இதேபோல், மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கட்சிகளுக்கிடையேயும் தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு, தேசியவாத காங்கிரஸ் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளது.