Published:Updated:

சீன அதிபர் - மோடி சந்திப்பு: இந்திய எல்லை பகுதியில் இருந்து சீன ராணுவம் வாபஸ்!

விகடன் விமர்சனக்குழு

ஸ்ரீநகர்: சீன அதிபரிடம், எல்லை பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதையடுத்து இந்திய எல்லை பகுதியில் இருந்து சீன ராணுவம் வாபஸ் பெற்றுள்ளது.

காஷ்மீர் மாநிலம் வடகிழக்கு லடாக் பகுதியில் அமைந்துள்ள சுமர் கிராமத்திற்குள் சீன ராணுவத்தினர் கடந்த 4 நாட்களாக அத்துமீறி முகாமிட்டு இருந்தனர். இதனால் அந்த பகுதியில் இந்திய ராணுவத்தினரும் குவிக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்தது.

இந்நிலையில் இந்தியா வந்துள்ள சீன அதிபர் பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, எல்லை பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று மோடி, சீன அதிபரிடம் கேட்டு கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய எல்லை பகுதியான லடாக்கில் இருந்து நேற்று இரவு சீன ராணுவத்தினர் வாபஸ் பெறத் தொடங்கினர். இரவு 9.45 மணிக்கு சீன ராணுவத்தினர் அவர்களது எல்லைக்குட்பட்ட பகுதிக்கு திரும்பிச் செல்ல ஆரம்பித்தனர். இதையடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த இந்திய ராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.