Published:Updated:

தமிழக மீனவர் பிரச்னை: இலங்கை அமைச்சர் பெரீசுடன், முரளிதர் ராவ் பேச்சு!

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சருடன் பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளிதர் ராவ் பேச்சு நடத்தி உள்ளார்.

இதுதொடர்பாக பா.ஜ.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கொழும்புவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் முரளிதர் ராவும், மூத்த தலைவர் விஜய் ஜாலியும் கலந்துகொண்டனர்.

அந்த மாநாட்டில், இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸை முரளிதர் ராவ் சந்தித்தார். அப்போது, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்தும், இலங்கையிலுள்ள தமிழர்களின் நிலை பற்றியும் அவர் விவாதித்தார்.
 
மேலும், இந்தியா-இலங்கை தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து அந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டது. அப்போது, இலங்கையுடனான விவகாரங்களுக்கு மோடி அரசு அதிக கவனம் செலுத்தும் என பெரீஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.