Published:Updated:

என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க ஆந்திர அரசு பரிந்துரை!

விகடன் விமர்சனக்குழு
என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க ஆந்திர அரசு பரிந்துரை!
என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க ஆந்திர அரசு பரிந்துரை!
என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க ஆந்திர அரசு பரிந்துரை!

நகரி: ஆந்திர முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான மறைந்த என்.டி.ராமராவுக்கு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு ஆந்திர அரசு பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு ஆந்திர அரசு அனுப்பி உள்ள கடிதத்துடன், என்.டி.ராமராவ் பற்றிய 7 பக்க செய்தி குறிப்புகள் மற்றும் வண்ணப்படங்கள் அடங்கிய புத்தகத்தையும்   இணைத்து அனுப்பி வைத்து உள்ளது.

அதில் என்.டி.ராமராவ் வாழ்க்கை குறிப்பு, திரையுலகிலும், தெலுங்கு தேசம் கட்சியை தோற்றுவித்து, அரசியலில் அவர் ஆற்றிய சாதனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும் அரசியல் தலைவராக சமூகத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் குறித்தும், அவர் மக்கள் தலைவராக திகழ்ந்தது எப்படி என்றும் விளக்கப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கு வரப்பிரசாதமாக இருந்த அவர், நாட்டின் உயரிய விருதான ‘‘பாரதரத்னா விருது’’ வழங்க பொருத்தமானவர் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கடிதத்தை ஆந்திர முதலமைச்சரும், என்.டி. ராமராவின் மருமகனுமான சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.