Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!

பிரபாலிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோனியா எப்போது நேரடியாக அரசியலுக்கு வருவார்?

கழுகார் பதில்கள்!
##~##

அவர் இனி நேரடி அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லை. அவர் வர நினைத்திருந்தால், 2004 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி கிடைத்ததும் வந்திருக்க வேண்டும். அப்போது அவருக்கு ஒருவித தயக்கம் இருந்தது. இப்போது அவரைப் பிரதமராக ஏற்றுக்கொள்ளும் மனநிலைகொண்டவர்கள் காங்கிரஸ் மேல் மட்டத்தில்கூட இல்லை. ராகுல் காந்தியைச் சுற்றி அந்த வளையம் அமைந்துவிட்டது.

மேலும், அவரது உடல்நிலை தீவிர அரசியல், நிர்வாகச் சூழ்நிலையில் ஐக்கியப்படுத்திக்கொள்ளும் நிலையில் இல்லை.

 எஸ்.கிருஷ்ணராஜ், அதிகாரட்டி.

கழுகார் பதில்கள்!

மத்திய அரசின் கைப்பாவையாக சி.பி.ஐ. செயல்படுவது அப்பட்டமாகிவிட்டதே?

இதுவரை மறைமுகமாக நடந்தது. இப்போது வெளிப்படையாகவே அம்பலமாகிவிட்டது. பகிரங்கமாக தம்முடைய அலுவலகத்துக்கே அழைத்து, சி.பி.ஐ. ஆவணத்தைத் திருத்தி இருக்கிறார்கள். சட்ட அமைச்சர் அஸ்வினி குமாரும், மத்திய அரசின் வழக்கறிஞர் வாஹனவதியும் சொன்ன திருத்தங்கள் அனைத்தையும் செய்த பிறகே உச்ச நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளது சி.பி.ஐ..

இவர்கள் இதுவரை இன்னபிற வழக்குகளில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைகளை எப்படி உண்மை என்று நம்ப முடியும்? அவமானம்!

கழுகார் பதில்கள்!

க.சுல்தான் ஸலாஹீத்தீன் மழாஹரி, காயல்பட்டினம்.

கழுகார் பதில்கள்!

இன்னொரு மரக்காணம் ஏற்படாமல் இருக்க, யார் யார் என்ன செய்ய வேண்டும்?

சாதி, சோறு போடாது என்பதையும் சாதிப் பெருமையை வைத்து உயிர் வாழ முடியாது என்பதையும் அனைவரும் உணர வேண்டும்.

 பி.டி.முத்தமிழ்ச்செல்வன், கல்லூர்.

கழுகார் பதில்கள்!

ராமதாஸ், திருமாவளவன் ஆகிய இரண்டு அரசியல் தலைமை பற்றிய உமது கருத்து என்ன?

வன்னியர் சங்கம் என்பதை பாட்டாளி மக்கள் கட்சியாகவும், தலித் பேந்தர் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்று எப்போது மாற்றிக்கொண்டார்களோ அப்போதே குறிப்பிட்ட சாதி அடையாளங்களைத் துறந்து செயல்படுபவர்களாக இவர்கள் இருவரும் மாறுதல் அடைந்திருக்க வேண்டும்.

சாதிக்குள் முடங்கிவிடக் கூடாது என்பதற்காக பொதுப் பிரச்னைகளைப் பேசுவதும் பொதுப் பிரச்னைகளில் அதிகக் கவனத்தைத் திருப்ப இயலாதபோது சாதிகளுக்குள் அடைக்கலம் தேடுவதும் யாருக்கும் நல்லதல்ல.

 கி.முருகன், மாப்பிள்ளைக்குப்பம்.

கழுகார் பதில்கள்!

கருணாநிதி, அன்பழகன், வீரபாண்டி ஆறுமுகம் ஆகிய வீடுகளில் நடக்கும் சண்டைகளுக்கு அடிப்படைக் காரணம் என்ன?

எதுவுமே 'எண்ணிக்கையில்’ கூடினால் சண்டைதானே?

 ஆர்.ஹரிகோபி, புதுடெல்லி.

கழுகார் பதில்கள்!

மெகா ஊழல்கள் பல அம்பலம் ஆகியும், எதிர்க் கட்சிகள் ருத்ரதாண்டவம் ஆடியும், கூட்டணியின் பிரதானக் கட்சிகள் வெளியேறியும் மத்திய அரசு ஆட்டம் காணாமல் இருப்பது எப்படி?

முலாயம் சிங் யாதவும் மாயாவதியும் உத்தரப்பிரதேசத்தில் தங்களைப் பலப்படுத்தும் காரியங்களைப் பார்த்து வருகிறார்கள். எனவே, உடனடியாகத் தேர்தல் வருவதை அவர்கள் விரும்பவில்லை. பரஸ்பரம் தாங்கள் வெற்றிபெறும் சூழ்நிலை உருவானால், ஆட்சிக்குக் கொடுத்துவரும் ஆதரவுச் செங்கல்லையும் உருவிவிடுவார்கள்.

 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்!

'எனக்கு எதுவும் தெரியாது’ என்று பவன்குமார் பன்சால் சொல்வது நம்புகிற மாதிரி இல்லையே?

தனக்கு விஜய்சிங்லா என்ற மருமகன் இருப்பதே பன்சாலுக்குத் தெரியாதா? ரயில்வே அமைச்சரான இவர் போட்டியிட்டு வென்ற சண்டிகர் நாடாளுமன்றத் தொகுதியைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை விஜய்சிங்லாவிடம்தான் ஒப்படைத்திருந்தார். பொலிடிக்கல் பி.ஏ. மாதிரி இவர் இருந்துள்ளார். அமைச்சர் பெயரைப் பயன்படுத்தி ரயில்வே போர்டு உறுப்பினர் ஒருவரிடம் 90 லட்சம் வாங்க முயன்று, கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டுள்ளார் விஜய்சிங்லா.

தனக்கு இவை எதுவும் தெரியாது என்று பன்சால் சொல்கிறார். பிறகு எதற்காகத் தன் பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்? உண்மையானவர், 'நோ ராஜினாமா’ என்று சொல்லியிருக்கலாமே?

 ச.அ.அலெக்சாண்டர்,வரதாரஜன்பேட்டை.

கழுகார் பதில்கள்!

இந்திய எல்லைப் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அந்நியர்கள் பிரவேசிப்பதைத் தடுக்க என்ன செய்யலாம்?

எல்லையில் படைகளைக் குவிப்பதால் எந்தப் பயனும் இல்லை. தைரியமான தலைமை டெல்லி கோட்டையில் இருந்தால் மட்டுமே, மற்ற நாடுகள் மரியாதை தரும்.

 திருலோக்கி. க.தமிழ்மணி, நெடுந்திடல்.

கழுகார் பதில்கள்!

எந்த ஒரு தனிமனிதன் கைது செய்யப்பட்டாலும் பொதுமக்கள் பாதிப்படைவதும், அரசு சொத்துக்கள் சேதமடைவதும் தொடர்ந்துகொண்டே வருகிறது. இதைத் தடுப்பதற்கு எந்த அரசாங்கமும் பெரிதாக நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லையே?

மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்போது இழப்புகள் அதிகமாக இருக்கிறது. அது இன்னும் பிரச்னையைத் தூண்டிவிடுமோ என்று அரசும் போலீஸும் பயப்படுகிறது. நடைமுறையில் இது சிக்கலான விஷயம்தான்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகளில் ஒன்று ஞாபகம் வருகிறது. பாம்பு ஒன்று துறவியிடம் போய் கோரிக்கை வைத்ததாம். 'என்னைப் பார்த்ததும் பொதுமக்கள் கல்லால் அடித்து துன்புறுத்துகிறார்கள். இதிலிருந்து தப்புவதற்கு வழி சொல்லுங்கள்’ என்றதாம். 'இனிமேல் நீ சாந்தமாக மாறிவிடு. யாரையும் கடிக்காதே. அப்புறம் உன்னை யாரும் அடிக்க மாட்டார்கள்’ என்றாராம் துறவி. அதன் பிறகு அமைதியாக ஒரு மரத்தடியில் அந்தப் பாம்பு படுத்திருந்தது. அதைப் பார்த்தவர்கள், கூட்டமாக வந்து அடியடி என அடித்துள்ளனர். நொந்துபோன பாம்பு மறுபடியும் துறவியிடம் வந்தது.

'நான் அமைதியாகத்தான் படுத்துக்கிடந்தேன். அப்போதும் என்னை விடாமல் அடிக்கிறார்கள். நீங்கள் சொன்னதற்காகவே யாரையும் கொத்தாமல் இருந்தது தப்பா?’ என்று பாம்பு கேட்டது. 'உன்னைக் கடிக்க வேண்டாம் என்றுதான் சொன்னேன். சீற வேண்டாம் என்று சொல்லவில்லையே... நீ லேசாக சீறினாலே பயந்து ஓடியிருப்பார்களே?’ என்றாராம் துறவி. அப்படி போலீஸார் சீறினால் போதாதா?

குடிநீர் தேவைக்காக அப்பாவி மக்கள் சாலை மறியல் செய்யும்போதும், ஆசிரியர்கள் போராட்டத்தின்போதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தின்போதும் அராஜகமாகப் பல போலீஸ்காரர்கள் நடந்துகொள்கிறார்கள். ஆனால், இந்தமாதிரியான கலகக்காரர்கள் பக்கம் போகப் பயப்படுகிறார்கள்.

 அ.கார்த்திகேயன், சேலம்.

கழுகார் பதில்கள்!

தமிழ்த் தேசியம் எனும் கருத்தாக்கம் தமிழகத்தில் இனி எடுபடுமா?

எந்தக் கருத்தாக்கமாக இருந்தாலும் அதை யார் சொல்கிறார்கள், எப்படிப்பட்டவர்கள் முன்னெடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதனுடைய எதிர்காலம் அமையும். எனவே, இதைச் சொல்பவர்கள் மழை நீரைப் போலச் சுத்தமானவர்களாகவும் மலையைப் போல உறுதியானவர்களாகவும் இருக்க வேண்டும்.

தமிழ்த் தேசியம் என்பது தமிழர் உரிமை, வளர்ச்சி ஆகியவை சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, மற்ற இனத்தவரைப் பழிவாங்குவதாக அமைந்துவிடக் கூடாது.

கழுகார் பதில்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism