Published:Updated:

அஜித்சிங் ஆதரவாளர்களுக்கு வெங்கையா நாயுடு கண்டனம்!

அஜித்சிங் ஆதரவாளர்களுக்கு வெங்கையா நாயுடு கண்டனம்!
அஜித்சிங் ஆதரவாளர்களுக்கு வெங்கையா நாயுடு கண்டனம்!
அஜித்சிங் ஆதரவாளர்களுக்கு வெங்கையா நாயுடு கண்டனம்!

புதுடெல்லி: அஜித்சிங்கின் ஆதரவாளர்களுக்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அஜித்சிங், அரசு வீட்டை காலி செய்யாமல் இருக்கிறார். இதன் காரணமாக அவரது வீட்டின் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் கோபம் அடைந்த அஜித்சிங் ஆதரவாளர்கள் காசியாபாத்தில் இருந்து டெல்லிக்குச் செல்லும் தண்ணீர் இணைப்பைத் துண்டிக்க முயற்சி செய்தனர். இதனால் போலீசாருக்கும் அஜித்சிங் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடியடி நடத்தி விரட்டினர்.

இதற்கிடையே அஜித்சிங் வசித்து வரும் அரசு வீட்டை, அவரது தந்தையான சரண் சிங்கின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், ''நானும், எனது கட்சியும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே வகுக்கப்பட்ட விதிகளையே பின்பற்றி வருகிறோம். அஜித்சிங் வீட்டின் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்ததில் எந்த அரசியல் பழிவாங்கும் செயலும் இல்லை. அஜித் சிங் தொண்டர்கள் போலீசாரை மிரட்டியுள்ளனர். இது கண்டனத்திற்குரிய செயலாகும்.

அஜித்சிங் இந்த வீட்டை அவரது அப்பாவின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்ததாகவும், அதை அரசு நிராகரித்து விட்டது என்றும் குற்றம்சாட்டுகின்றனர். இந்த விஷயத்தில் அரசியல் நோக்கம் ஏதும் இல்லை. அஜித் சிங்கின் தந்தை சரண் சிங் ஒரு மரியாதைக்குரிய தலைவர். நான் சரண் சிங்கை பாராட்டுகிறேன். எனென்றால் அவர் ஒரு சிறந்த விவசாயத் தலைவராக இருந்துள்ளார்.

அஜித்சிங் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது வீட்டை நினைவுச் சின்னமாக மாற்றும்  நடவடிக்கையை ஏன் எடுக்கவில்லை?. கடந்த 37 வருடங்களாக அவர்களை தடுத்தது யார்?. எனவே, இந்த விஷயத்தில் பா.ஜ.க. அரசின் மீது குற்றம்சாட்டுவது நியாயமல்ல.

அரசு பங்களாக்கள் நினைவுச் சின்னமாக மாற்றப்பட மாட்டாது என்று 14 வருடங்களுக்கு முன்பே அரசு முடிவு எடுத்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்து 3 மாதங்களே ஆகின்றன'' என்றார்.