Published:Updated:

ஏ.பி.சி. அமைப்பின் புதிய தலைவராக அமித் மாத்யூ நியமனம்!

விகடன் விமர்சனக்குழு
ஏ.பி.சி. அமைப்பின் புதிய தலைவராக அமித் மாத்யூ நியமனம்!
ஏ.பி.சி. அமைப்பின் புதிய தலைவராக அமித் மாத்யூ நியமனம்!
ஏ.பி.சி. அமைப்பின் புதிய தலைவராக அமித் மாத்யூ நியமனம்!

மும்பை: பத்திரிகைகள் விற்பனையை கண்காணிக்கும் அமைப்பின் புதிய தலைவராக அமித் மாத்யூ நியமிக்கப்பட்டுள்ளார்.

பத்திரிகைகளின் விற்பனையை கண்காணிப்பதற்காக 2014-2015ஆம் ஆண்டிற்கான ஆடிட் பீரோ ஆஃப் சர்குலேஷன் (ஏபிசி) அமைப்பின் புதிய தலைவராக மலையாள மனோரமா பத்திரிகை குழுமத்தின் இயக்குநர் அமித் மாத்யூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று (19ஆம் தேதி) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

ஏ.பி.சி. அமைப்பின் தலைவர் - அமித் மாத்யூ
துணைத் தலைவர் - சஷிதர் சின்ஹா (ஐ.பி.ஜி மீடியா பிராண்ட்ஸ்  பிரைவேட் லிமிடெட்)
பொதுச்செயலாளர் - ஹர்மூஸ்த் மசானி

மேலாண்மைக்குழு உறுப்பினர்களாக,

சைலேஷ் குப்தா (ஜாக்ரான் பிரகாஷன் லிமிடெட்)
அரித்ரா சர்கார் (ஏ.பி.பி. பிரைவேட் லிமிடெட்)
வெங்கட் (உசோதயா எண்டர்பிரைசஸ் லிமிடெட்)
ஹர்முஸ்ஜி காமா (தி பாம்பே சமாச்சார் பிரைவேட் லிமிடெட்)
தேவேந்திர தார்தா (லோக்மத் மீடியா பிரைவேட் லிமிடெட்)
சஞ்சீவ் வோக்ரா (பென்னட், கோல்மென் அன் கோ லிமிடெட்)
பெனாய்ராய் சவுத்ரி (எச்.டி. மீடியா லிமிடெட்)

விளம்பர ஏஜென்சிகளின் பிரதிநிதிகளாக,

பொருளாளர் - மதுக்கர் காமத் (முத்ரா கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்)
ஸ்ரீநிவாசன் கே.சாமி ( ஆர்.கே. சாமி பிபிடிஓ பிரைவேட் லிமிடெட்)
சி.வி.எல். ஸ்ரீநிவாஸ் ( குரூப் எம். மீடியா இந்தியா பிரைவேட் லிமிடெட்)

விளம்பரதாரர்களின் பிரதிநிதிகளாக,

ரவீந்திர பிஷரோடி (டாடா மோட்டார்ஸ் லிமிடெட்)
தேபபாரத முகர்ஜி (கோக கோலா இந்தியா பிரைவேட் லிமிடெட்)
ஹேமந்த் மாலிக் (ஐ.டி.சி லிமிடெட்) செயலாளர்

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.