Published:Updated:

தொகுதிப் பங்கீடு: சிவசேனாவுடன் மீண்டும் பேச்சு நடத்த பா.ஜ.க. விருப்பம்!

Vikatan Correspondent

புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக சிவசேனாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த பா.ஜ.க. விருப்பம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் 130 தொகுதிகளையாவது தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அக்கட்சிக்கு 119 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க சிவசேனா முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இதுதொடர்பாக பாரதிய ஜனதாவின் மாநில கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில முன்னாள் தலைவர் சுதிர், ''மகாராஷ்டிராவில் கடந்த 25 ஆண்டுகளில் சிவசேனா வெற்றி பெறாத 59 தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க. விருப்பம் தெரிவித்துள்ளது.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக புதிய கோரிக்கையை சிவசேனாவிடம் முன்வைக்க உள்ளோம். அதுமட்டுமல்லாமல், பா.ஜ.க. வெற்றி பெறாத 19 தொகுதிகளிலும் போட்டி‌யிட அக்கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது. அதுதொடர்பாக பேச்ச‌வார்த்தை நடத்த விரும்புகிறோம்" என்றார்.