Published:Updated:

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து ரூ.71.69 லட்சம்!

Vikatan Correspondent
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து ரூ.71.69 லட்சம்!
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து ரூ.71.69 லட்சம்!
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொத்து ரூ.71.69 லட்சம்!

ஹைதராபாத்: ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது சொத்துகளின் மதிப்பு 71 லட்சம் ரூபாய்தான் என்று கூறியுள்ளார்.
 
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர முதல்வர் சதிரபாபு நாயுடு, ''எனது சொத்துகளின் மதிப்பு 71 லட்சம் ரூபாய்தான். கடந்த நான்கு ஆண்டுகளில், எனது வங்கிக் கணக்கு இருப்பு மட்டும் சிறிதளவு அதிகரித்திருக்கிறது. எனது மனைவி புவனேஸ்வரியின் சொத்து மதிப்பு 46 கோடியே 88 லட்சம் ரூபாயாகும். எனது மனைவி வைத்திருக்கும் நகைகளின் மதிப்பு 60 லட்சம் ரூபாயாக அதிகரி்த்துள்ளது.

மேலும், எனது மகன் லோகேஷின் சொத்து மதிப்பு 11 கோடியே நான்கு லட்சம் ரூபாய். எனது மருமகள் பிரமானியின் சொத்து மதிப்பு 5 கோடியே 32 லட்சம் ரூபாய். அடுத்த ஆண்டு முதல் எனது சொத்துக் கணக்கு தொடர்பான விவரங்களை மட்டுமே நான் அறிவிக்கப்போகிறேன். எனது குடும்பத்தினரின் சொத்து பற்றிய தகவல்களை அவர்களே வெளியிடுவார்கள்" என்று கூறினார்.