Published:Updated:

காஷ்மீர் வெள்ளம்: மீட்பு பணிகளை நிறைவு செய்தது ராணுவம்!

Vikatan Correspondent
காஷ்மீர் வெள்ளம்: மீட்பு பணிகளை நிறைவு செய்தது ராணுவம்!
காஷ்மீர் வெள்ளம்: மீட்பு பணிகளை நிறைவு செய்தது ராணுவம்!
காஷ்மீர் வெள்ளம்: மீட்பு பணிகளை நிறைவு செய்தது ராணுவம்!

ஜம்மு: ஜம்மு  காஷ்மீரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை நிறைவு செய்துள்ளது இந்திய ராணுவம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், தொடர் மழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கு எடுத்து ஓடின. இந்த வெள்ள பெருக்கில் 230க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இந்த ராணுவத்தினர் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டு லட்சகணக்கான மக்களை காப்பாற்றினார்கள்.

30 ஆயிரம் ராணுவ வீரர்களும், 84 ஹெலிகாப்டர்கள் மற்றும் இந்திய விமானப்படையை சேர்ந்த விமானங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டன. அதேபோல் தேசிய மீட்பு படையினரும் இந்த பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிகையில், ''கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேநேரம், நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகள் செய்யும் பணிகளில் தொடர்ந்து ராணுவம் ஈடுபடும்" என்று கூறப்பட்டுள்ளது.