Published:Updated:

ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் அ.தி.மு.க பிரமுகர் கைது!

Vikatan Correspondent
ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் அ.தி.மு.க பிரமுகர் கைது!
ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் அ.தி.மு.க பிரமுகர் கைது!
ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் அ.தி.மு.க பிரமுகர் கைது!

சென்னை: ஆவின் பால் கலப்பட விவகாரத்தில் அ.தி.மு.க பிரமுகரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆவின் கூட்டுறவு நிலையங்களில் சேகரிக்கப்படும் பால், சென்னைக்கு கொண்டு வரப்படும் வழியில் திருடப்பட்டு, எடுக்கப்படும் பாலுக்கு நிகரான அளவு  தண்ணீர் அதில் கலக்கப்படுவதாக செய்தி வெளியானது.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில், வழக்கு சிபிசிஐடி காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது.

இவ்விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் என்பவர் தலைமறைவாக இருந்த நிலையில், நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டார்.

அதிமுக பிரமுகரான அவரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.