Published:Updated:

மதுவிலக்கு: உம்மன்சாண்டிக்கு பாராட்டு தெரிவித்த மத்திய அமைச்சர்!

Vikatan Correspondent
மதுவிலக்கு: உம்மன்சாண்டிக்கு பாராட்டு தெரிவித்த மத்திய அமைச்சர்!
மதுவிலக்கு: உம்மன்சாண்டிக்கு பாராட்டு தெரிவித்த மத்திய அமைச்சர்!
மதுவிலக்கு: உம்மன்சாண்டிக்கு பாராட்டு தெரிவித்த மத்திய அமைச்சர்!

திருவனந்தபுரம்: பூரண மதுவிலக்கை அமல்படுத்த விரும்பும் உம்மன்சாண்டியின் நடவடிக்கையை முழு மனதோடு வரவேற்கிறேன் என்று மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் கூறினார்.

திருவனந்தபுரத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்சவர்தன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''கேரளாவில் முதல்வர் உம்மன்சாண்டி பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதை அறிந்தேன். இதை முழு மனதோடு வரவேற்கிறேன். அவரது துணிச்சலான செயல்பாட்டை பாராட்டுகிறேன்.

கேரளாவில் அறிமுகமாகும் இந்த திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்பது எனது விருப்பம். இந்த திட்டத்திற்கு சில சுயநலவாதிகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். பூரண மதுவிலக்கு மூலம் பொதுமக்களை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. அதை ஆட்சியாளர்கள் துணிந்து செய்து, எதிர்ப்புகளை கண்டு பின்வாங்காமல் திட்டத்தை பூரணமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல், கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்பதும் எனது தனிப்பட்ட விருப்பம். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை போல் கேரளாவிலும் மருத்துவமனை அமைக்க மத்திய அரசிடம் திட்டம் உள்ளது. அதற்கான இடமும், வாய்ப்பும் அமைந்தால் மத்திய அரசு இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக எடுக்கும்" என்றார்.